#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

21 ஏப்ரல், 2011

பதிவர்களின் விவரங்களை விற்கும் ஃபேஸ்புக்!

எகிப்தில் ஆட்சி மாற்றத்திற்கான புரட்சிக்கு வித்திட்டதே ஃபேஸ்புக்தான் என்று ஒருபுறம் உலகம் அதனைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில், மறுபுறம் தனது பதிவர்களைப் பற்றிய அந்தரங்க விவரங்களை விள்ம்பரதாரர்களிடம் விற்று காசுபார்ப்பதாக ஃபேஸ்புக் மீது புகார் கிளம்பியுள்ளது.

ஃபேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்துபவர்கள் தங்களை பற்றி பொதுவாக தெரிவித்துள்ள பெயர், வேலை, கல்வி தகுதி, வசிப்பிடம் போன்ற அடிப்படை தகவல்கள் தொடங்கி, 'ஹாபி' வரையிலான தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு 'பாஸ்' செய்து விற்றுவிடுகிறதாம் ஃபேஸ்புக்.

இப்படி கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொருவரை பற்றிய விவரங்களை தனித்தனியாக அலசி ஆராயும் விளம்பர நிறுவனங்கள், அவர்களது வாழ்க்கை தரம் மற்றும் இதர விருப்பு வெறுப்புகளை அறிந்து, யார் யாரிடம் எது எதை விளம்பரப்படுத்தலாம் என தீர்மானிக்கின்றனவாம்.

சமூக வலைத்தளம் என்ற அளவில் ஃபேஸ்புக் மீது இருக்கும் நம்பிக்கையில், பலர் தங்களைப் பற்றிய அந்தரங்க விவரங்களை அளவுக்கு அதிகமாகவே தெரிவித்துவிடுகின்றனர். இதை வகையாக பயன்படுத்திக் கொள்கிறது ஃபேஸ்புக்.

உதாரணமாக ஒருவர் தனக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருப்பதாக தமது ஃபேஸ்புக் வலை தளத்தில் தெரிவித்திருந்தால்,அந்த தகவலை உடனடியாக அந்த நபர் வசிக்கு உள்ளூர் திருமண மண்டபங்கள், சமையல்காரர்கள், டிராவல்ஸ் நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், மேடை அலங்கார நிபுணர்கள், சிகை அலங்கார நிபுணர்கள், நகைக்கடைக்காரர்கள், இசைக்குழு நடத்துபவர்கள் போன்றவர்களின் விளம்பரங்களை கையாளும் விள்ம்பர நிறுவனங்களுக்கு தெரிவித்துவிடுகிறது ஃபேஸ்புக்.

அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபருக்கு, திருமணத்திற்கு தேவையான நகை முதல் கல்யாண மண்டபம் வரை தங்களை அணுகுமாறு மொய்க்கும் விளம்பரங்கள் வந்துகுவியத் தொடங்குகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக