நன்றி.தினமலர்
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
11 ஏப்ரல், 2011
15 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி : சேப்பாக்கம் தமிமுன் அன்சாரி நம்பிக்கை
சென்னை : ""கட்ட பஞ்சாயத்தை அடியோடு ஒழிப்பேன்,'' என, சேப்பாக்கம் தொகுதி ம.ம.க., வேட்பாளர் தமிமுன் அன்சாரி பேசினார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் தமிமுன் அன்சாரி, நேற்றைய பிரசாரத்தின் இடையே பேசியதாவது: இங்கு அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்கள் மட்டுமின்றி, நான் போகிற இடங்களில் எல்லாம், பிராமணர்கள், செட்டியார்கள், மீனவர்கள், ஆதிதிராவிட இன மக்களும், என்னை ஆதரித்து வரவேற்று பேசுகின்றனர். நான் வெற்றி பெற்றதும், அனைத்து சமுதாய மக்களும், சமுதாய மோதல்கள் ஏதுமின்றி, எப்போதும் இணக்கமாக வாழும் சூழ்நிலையை உருவாக்கி தருவேன். தொகுதியில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் கொசு தொல்லை, சுகாதார பிரச்னை, போக்குவரத்து நெரிசல், அடிப்படை வசதிகள் இன்மை குறித்த கோரிக்கைகள் தான் அதிகம் வருகின்றன. பிரச்னைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து தருவேன். இத்தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகளை நான் அறிவேன். நான் வெற்றி பெற்றதும், தொகுதியில் நிலவும் ரவுடியிசம், கட்ட பஞ்சாயத்து, மாமூல் வசூல் போன்றவற்றை, ராணுவம் போல் செயல்பட்டு, இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவேன். தேர்தலில் தோல்வி பயம் காரணமாக தி.மு.க.,வினர் ரவுடி கும்பலை தூண்டிவிட்டுள்ளனர். அதையும் மீறி இறைவன் அருளால், மக்கள் ஆதரவுடன் 15 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு தமிமுன் அன்சாரி கூறினார்.
நன்றி.தினமலர்
நன்றி.தினமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக