முதுகளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாயல்குடி இருவேலியைச் சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சித் தொண்டர்கள் மீது திமுகவினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த ஏப்ரல் 13 அன்று நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் சாயல்குடி இருவேலி பகுதியில் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்க வந்தோரை வாக்குசாவடிக்குச் செல்லவிடாமல் திமுக கிளைச் செயலாளர் அம்சா தலைமையிலான திமுகவினர் தடுத்துள்ளனர். இதற்கு மனிதநேய மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுகவினரின் எதிர்ப்பை மீறி மக்கள் வாக்குசாவடிக்குச் சென்று வாக்களித்துள்ளனர்.
மக்கள் வாக்களிப்பதை திமுகவினர் தடுத்தது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போதினும் சாயல்குடி காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் விளைவாக மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த சையத் அபுதாகிர், அப்துல் ரஹ்மான், ஜபருல்லாஹ்கான் மற்றும் சாதிக் பாஷா ஆகியோர் மீது நேற்று இரவு திமுகவினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் குறித்து பெயரளவில் சாயல்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இத்தாக்குதலுக்கு காரணமான இருவேலி திமுக கிளைச் செயலாளர் அம்சாவை உடனே கைது செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது.
தொடர்ந்து அதிமுக கூட்டணிக் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தும் திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையமும் காவல்துறை தலைமை இயக்குனரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக