ஆனால் தூத்துக்குடி அல் லது கோயம்புத்தூர் நுகர்வோர் கூறுகையில், தினமும் 3-4 மணி நேரம் மின்தடை மேற்கொள் ளப்படுகிறது என்கிறார்கள்.
மின்தடையை எதிர்த்து சென்னைக்கு வெளியே உள்ள திருநின்றவூர் பகுதியில் பொது மக்கள் திங்கட்கிழமை 30 நிமி டம் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை-திருவள்ளூர் இடையே போக்குவரத்து வெகு வாகப் பாதிக்கப்பட்டது. விவ சாயிகளுக்கு தினமும் 9 மணி நேரம் மின்சார விநியோகம் இருக்க வேண்டும். ஆனால் அதற்கு குறைவான நேரமே மின்சாரம் சப்ளை செய்யப் படுகிறது. மின்தடையால் கோயம்புத்தூர் தொழிற்சாலை களும், பொதுமக்களும் வெகு வாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்தடையை சென்னைக்கும் அமல்படுத்த வேண்டும் என கோவைப் பகுதியினர் வலி யுறுத்துகிறார்கள். மின்தடை யை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மேற்கொள்ள வரை யறை செய்ய வேண்டும் என் றும் அவர்கள் கோருகிறார்கள்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத் தின் அதிகாரி ஒருவர் கோவை யில் கூறுகையில், மின்தடை அட்டவணையை மின்பகிர் மான கழகம் கடைப்பிடிக்க முடியாத நிலை உள்ளது. கடந்த சில தினங்களாக மின் தடை நேரம் அதிகரித்துள்ளது. திடீரென 730 மெகாவாட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டுள் ளது. மின் உற்பத்தி நிலையங் களில் ஏற்பட்டுள்ள திடீர் பாதிப்பு காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது என் றார். நெய்வேலி தல்சர், பில்லு பெருமாள், நல்லூர் ராம குண்டம் மின்நிலையங்களில் உற்பத்தி திடீரென பாதிக்கப் பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது மின்பகிர்மான கழகம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தினமும் தற் காலிக அடிப்படையில் வாங்கி வருகிறது. 800 மெகாவாட் மாநில ஆதார வளம் வழியாக வும் 1200 மெகாவாட் இதர மாநிலங்களில் இருந்தும் பெறப்படுகின்றது. குஜராத்தில் இருந்து 425 மெகாவாட், சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து 180மெகாவாட் பெறப்படுகிறது. இதைத்தவிர தமிழ்நாட்டை போன்று ஆந்திராவும் அதிக அளவில்மின்சாரத்தை இதரப் பகுதிகளில் இருந்து பெறு கிறது. இதனால் மின்சார விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தென் மாநிலங்களுக்கு தல்சர்-கோர் வழியாக மின்சாரம் பெருமளவு சப்ளை செய்யப் படுகிறது. தேர்தல் நாள்வரை தமிழக மின் நிர்வாகம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.15 முதல் ரூ.16 வரை வாங்கியது.
வடக்கு பிராந்தியத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3.7க்கு கிடைக்கிறது என கூறப்படு கிறது.
நன்றி.தீக்கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக