#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

08 ஏப்ரல், 2011

தேர்தலில் கதாநாயகன் தேர்தல் கமிஷன்தான் * ம.ம.க."சர்ட்டிபிகேட்'

தென்காசி : "தேர்தலில் கதாநாயகன் என்றால் அது தேர்தல் கமிஷன் தான்' என மனித நேய மக்கள் கட்சி பொது செயலாளர் ஹைதர்அலி கூறினார்.

தென்காசி தொகுதி அ.தி.மு.க.கூட்டணி வேட்பாளர் சரத்குமாரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய ம.ம.க.பொது செயலாளர் ஹைதர் அலி தென்காசி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:""தேர்தலில் கதாநாயகன் என்றால் அது தேர்தல் கமிஷன்தான். சிறந்த முறையில், பாகுபாடின்றி தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. தேர்தல் கமிஷன் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசு ஊழியர்கள்தான். மதுரை கலெக்டர் சகாயம், கமிஷனர் கண்ணப்பன் நேர்மையாக, அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் செயல்படுகின்றனர். பல இடங்களில் பல அதிகாரிகள் அச்சுறுத்தலால் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.திருச்சியில் தனியார் ஆம்னி பஸ்சில் இருந்து பல கோடி ரூபாயை அப்பகுதி தேர்தல் அதிகாரி சங்கீதா கைப்பற்றி அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார். இந்த பஸ் உரிமையாளர் உதயகுமார், அவரது மகன் அருண்பாலாஜி அமைச்சர் நேருவுக்கு உறவினர். முறையான பெர்மிட் பல வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் பல கோடி ரூபாய் பல்வேறு இடங்களுக்கு இந்த பஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுபோல் இருந்தால் தமிழகத்தில் எவ்வாறு தேர்தலை நடத்த முடியும். 234 தொகுதிகளிலும் இதே நிலைதான் இருக்கிறது. மதுரை கலெக்டர் சகாயம், கமிஷனர் கண்ணப்பன், திருச்சி ஆர்.டி.ஓ. சங்கீதாவிற்கு போதிய பாதுகாப்பினை வழங்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விடலாம் என தி.மு.க.வினர் எண்ணுகினறனர். இவர்களை தேர்தல் கமிஷன் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பணம் சில போலீஸ் அதிகாரிகள் வாகனங்களில் கடத்தப்படுவதாக தேர்தல் கமிஷன் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. இதுபோன்ற அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.தி.மு.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜா 2ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். தமிழகத்தில் மணல் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டு வசதி வாரியம் மூலம் வீட்டு மனைகள் பெற்றதில் முறைகேடு நடந்துள்ளது. லஞ்ச பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்து ஓட்டு பெற முயற்சிக்கின்றனர்.ஈழத்தமிழர்கள் சிங்கள ராணுவத்தினரின் தாக்குதலால் கொத்து கொத்தாக மடிந்தபோது அவர்களை காப்பாற்ற தி.மு.க.முயற்சி எடுக்கவில்லை. சிங்கள ராணுவத்திற்கு ஆயுத உதவி செய்த மத்திய காங்.,அரசுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்பட்டார். இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டு கொன்றதையும், தாக்கி படுகாயமடைந்த சம்பவத்தை பற்றியும் தி.மு.க.மவுனம் சாதித்து வருகிறது. கேட்டால் பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டேன் என கருணாநிதி நாடகமாடி வருகிறார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.கூட்டணி வெற்றி பெறும். இதனை அறிந்த தி.மு.க.வினர் ஓட்டுப் பதிவிற்கு முன்பு வன்முறையில் ஈடுபடலாம். தேர்தல் கமிஷன் உஷாராக இருக்க வேண்டும். 234 தொகுதிகளிலும், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும்.ஊழலற்ற ஆட்சி அளிக்கவும், சட்டம், ஒழுங்கு சீராக பராமரிப்பு செய்யவும், தடையில்லா மின்சாரம் வழங்கவும், ரவுடி, கட்டப் பஞ்சாயத்துகளை ஒழிக்கவும், கந்து வட்டி கும்பலை களையெடுக்கவும், ஒற்றை லாட்டரி டிக்கெட்டை முழுவதும் ஒழிக்கவும் அ.தி.மு.க.கூட்டணிக்கு பொதுமக்கள் ஓட்டு போட வேண்டும். தென்காசி தொகுதியில் சரத்குமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட்டு வெற்றி பெறச் செய்ய வேண்டும்.அச்சன்புதூர் பகுதியில் கடந்த சில நாட்களாக சாக்கு மூடைகளில் பல கோடி ரூபாய் இருந்துள்ளது. இவை கைப்பற்றப்பட்டது. கடையநல்லூர் தொகுதியில் காங்.,வேட்பாளராக போட்டியிட்டாலும் தி.மு.க. வேட்பாளராகவே செயல்பட்டு வரும் பீட்டர் அல்போன்ஸ் தலையிட்டு மீட்டு சென்றுள்ளார். இதுபற்றி நேர்மையான அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்காசி தொகுதியில் தி.மு.க.விற்கு ஆதரவாக பணம் பட்டுவாடா செய்து வருவதை தடுக்க வேண்டும். தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர் தொகுதியில் ரவுடிகள் தங்கியிருந்து வன்முறையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியுள்ளனர். இதன் ஒரு பகுதிதான் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் குடும்பத்தினருக்கு சொந்தமான கல்லூரியில் நடந்த மர்ம கொலை. இக்கல்லூரியை தேர்தல் கமிஷன் கைப்பற்றி அங்கு தங்கியுள்ள வெளியாட்களை, பதுக்கி வைத்துள்ள பல கோடி பணத்தை வெளிக் கொணர வேண்டும்'' என்றார் ஹைதர்அலி.பேட்டியின் போது மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான், மாவட்ட செயலாளர் நயினார் முகம்மது, பேச்சாளர் மில்லத் இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர்கள் அலி, கோதர் பாவா, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முகம்மது யாகூப், நகர செயலாளர் சலீம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    நன்றி.தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக