#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

05 ஏப்ரல், 2011

நல்லாட்சி மலர உழைத்திடுவோம்!

நபி(ஸல்) அவர்கள் தமது மக்கா வாழ்க்கையில் எண்ணிலடங்கா துன்பங்களைச் சுமந்த நிலையிலும் கூட அர்க்கம்(ரலி) அவர்களின் வீட்டை வணக்க வழிபாட்டிற்காகவும், கல்விக் கூடமாகவும் பயன்படுத்தியுள்ளார்கள்.

புனித மதீனாவில் நுழைந்த பதினைந்து நாட்களில் நஜ்ஜார் கிளையார்களால் வழங்கப்பட்ட இடத்தில் மஸ்ஜிதுந் நபவியை கட்டினார்கள். இணை வைத்தலின் சாயல் கூட இறைவழிபாட்டில் படிந்துவிடக் கூடாது என்பதற்காக, அந்த இடத்தில் புதைக்கப்பட்ட உடல்களில் மண்ணரிக்காத மீத பகுதிகளை தோண்டி அப்புறப்படுத்தினார்கள்.

மஸ்ஜிதுந் நபவியை எழுப்பும் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்ட நபி(ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் இணைந்து கற்களையும் மண்ணையும் சுமந்தார்கள்.


இவ்வாறு நபி(ஸல்) அவர்களால் எழுப்பப்பட்ட மஸ்ஜிதுந் நபவி ஐவேளை பாங்கு சொல்லப்பட்டு, தொழுகைகள் மட்டும் நிறைவேற்றப்பட்டு பிறகு பூட்டுக்கள் தொங்கவிடப்படவில்லை. மாறாக அது பள்ளிவாசலாகவும், ஆட்சி பீடமாகவும் இயங்கத் துவங்கியது.

மஸ்ஜிதுந் நபவி சகோதரத்துவ சின்னமாக, பல்கலைக் கழகமாக, நீதி மன்றமாக, தலைமைச் செயலகமாக, நிதியகமாக, படை வீரர்களை அனுப்பும் இராணுவத் தளமாக… இன்னும் உலகை ஆள எத்தனை துறைகள் வேண்டுமோ, அத்தனைத் துறைகளையும் இயக்கும் தளமாகச் செயல்பட்டது. மார்க்க, சமூக மற்றும் அரசியல் தொடர்பான அனைத்துத் திட்டங்களும் அங்கேதான் முடிவு செய்யப்பட்டன.

நமது ஊர் முஹல்லா பள்ளிவாசல்களும் இந்த வரலாற்றுப் பின்னனியில் உருவாக்கப்பட்டதுதான். ஆனால் கல்வி வளர்ச்சியிலும், சமூக பாதுகாப்பிலும், அரசியல் விழிப்புணர்விலும் பள்ளி வாசலின் பங்களிப்பு அந்நியமாகி விட்டதை இந்திய முஸ்லிம்கள் மறுக்கமுடியாது. பள்ளிவாசல் என்பது இறைவழிபாடுகளை நிறைவேற்றி மறுமைக் கூலிகளை பெற வழிவகை செய்யும் புனிதத்தலம் மட்டுமல்ல, உலகின் அமைதியையும் நீதிமிக்க ஆட்சியையும் நிலைநாட்டும் செயல்வீரர்களையும், சாதனையாளர்களையும் உருவாக்கும் சாதனைக் கூடமுமாகும்.

இதனால்தான் அல்லாஹ் பள்ளி நிர்வாகிகளின் தகுதிகளை இப்படி வரையறுத்துள்ளான்:

அல்லாஹ்வின் (இல்லமான) பள்ளிவாசல்களை நிர்வகிக்கக்கூடியவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும், நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிறைவேற்றி, ஜகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வையன்றி வேறு எவருக்கும் அஞ்சாமலும் இருக்கின்றாரோ, அவர்கள்தாம். இத்தகையோர் நேர்வழி பெற்றவர்களில் இருக்கப் போதுமானவர். (அல்குர்ஆன் 9:18)

ஆகவே பள்ளிவாசல் நிர்வாகிகள், முஹல்லா பொறுப்பாளர்கள் மற்றும் இமாம்கள் ஆகியோரால் ஐவேளை தொழுகை நடத்தப்படுவதால் மட்டும் அவர்களின் பொறுப்பு நீங்கிவிடாது. மாறாக கல்விப் பணிகளையும், தீர்ப்பாணையங்களையும், பொருளாரதாரத் திட்டங்களையும், அரசியல் மற்றும் இதர சமூகச் சேவைகளையும் கையில் எடுத்தாக வேண்டும். மேற்கண்ட பணிகளை ஊரில் சில நிறுவனங்களாலோ தனிநபர்களாலோ முறையாக நிறைவேற்றப்பட்டு வந்தால் அப்பணிக்கு ஒத்துழைப்புத் தருவது பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இமாம்களின் மீது கடமையாகும்.
மேற்கண்ட பணிகள் ஊரில் செயல்படுத்தப்பட வில்லை என்றாலோ அல்லது முறையற்று செயல்பட்டாலோ அப்பணிகளை பள்ளிவாசல் நிர்வாகம் தமது பொறுப்பில் எடுத்து முறையாக செயல்படுத்தவேண்டும். தகுதியுடைய மக்களிடம் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். அவைகளைக் கண்காணிப்பது நிர்வாகிகளின் மீதுள்ள பொறுப்பாகும். மார்க்க வரையறையை விட்டும் தாண்டிவிடாமல் காப்பது மார்க்க அறிஞர்களான இமாம்களின் கடமையாகும்.

தகுந்த மார்க்கக் காரணமும், ஆதாரமும் ஏதுமின்றி இன்னார் பின்னால் நின்று நாங்கள் தொழமாட்டோம், இவர்களின் பள்ளிவாசல்களில் நாங்கள் தொழமாட்டோம் என்று கூறும் பிரிவினைவாதிகள் முஸ்லிம் சமூக துரோகிகளும், எதிரிகளும் ஆவார்கள் என்பதை முஸ்லிம்கள் அடையாளம் காணவேண்டும்.

முஸ்லிம் சமுதாயத்தை இணைப்பதற்காக உன்னத நோக்கில் ஏற்படுத்தப்பட்ட பள்ளிவாசல்கள் ஒரு போதும் பிரிவினைக்காக பயன்படுத்தக்கூடாது. முஸ்லிம் சமுதாயத்தை பிரித்தாள்வதற்காக நயவஞ்சகர்களால் எழுப்பப்பட்ட பள்ளிவாசலைப் பற்றி அல்லாஹ் கூறும் போது:

இன்னும் எவர்கள் (முஸ்லிம்களுக்கு) தீங்கிழைப்பதற்காகவும் நிராகரிப்பதற்(கு உதவுவதற்)காகவும், முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்குவதற்காகவும் முன்னர் அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் போர் புரிந்தோருக்கு பதுங்குமிடமாகவும் ஒரு பள்ளியை கட்டினார்களே அவர்கள். (குற்றங்களை மறைத்திட) நாங்கள் நல்லவற்றையேயன்றி (வேறொன்றும்) நாடவில்லை என்று நிச்சயமாக சத்தியம் செய்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (நபியே) நீர் ஒருபோதும் அதில் தொழுகைக்காக நிற்கவேண்டாம். (அல்குர்ஆன் 9:107,-108)

இஸ்லாமிய அரசின் ஆட்சித் தலைவர் ‘இமாம்’ என்றே ஹதீஸ்களில் அழைக்கப்படுகிறார். இஸ்லாமிய ஆட்சி நடைபெற்றால், பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதற்காக இமாமத் பொறுப்பு இஸ்லாமிய ஆட்சித் தலைவரால்தான் நியமிக்கப்படும் என்பதையும், அது நபி(ஸல்) அவர்களே தாம் மரணிக்கும் வரை தொடர்ந்து நிறைவேற்றி வந்த புனிதப் பணி என்பதையும் இமாம்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்தப் பொறுப்பையும் அந்தஸ்தையும் உணர்ந்து, அரசியல் தேர்தல் உட்பட முஸ்லிம் சமுதாயம் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தி பள்ளிவாசல் நிர்வாகங்களும், ஆலிம்களும் செயலாற்ற வேண்டும்.
தேர்தல் என்பது உலக ரீதியாக வாழ்வுரிமையையும், மார்க்கச் சுதந்திரத்தையும், சமூக கண்ணியத்தையும் பாதுகாப்பையும் தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் நீதிமிக்க ஆட்சியை கொண்டுவர தம்மால் முடிந்த வரை பாடுபடுவது முஸ்லிம்களின் மீதுள்ள கடமையாகும். முஹல்லா தலைவர்களும் பள்ளிவாசல் இமாம்களும் இக்கடமையில் முன்னணியில் உள்ளனர்.

அரசியல் என்றாலே சாக்கடை என்று ஒதுங்கிவிட முடியாது. உலகின் அனைத்துத் துறைகளையும் தூய்மைப்படுத்துவது முஸ்லிம்களின் கடமையாகும். அதில் அரசியல் மட்டும் விதி விலக்கல்ல. எனினும் நாம் அந்தச் சாக்கடையை உள்வாங்கிக் கொள்ளாமல் பரிசுத்தப்படுத்துவதை மட்டுமே இலக்காகக் கொண்டு தம்மால் முடிந்த வரை செயல்படவேண்டும்.
தமிழகத்தில் மோதிக் கொள்ளும் எந்த அணியும் முஸ்லிம் சமுதாயத்திற்கு தகுந்த மதிப்பையும் மரியாதையையும், உரிமையையும் தரவில்லை என்பதே உண்மை. என்றாலும் கடந்த கால, நிகழ்கால நிகழ்வுகளையும், எதிர்காலத் திட்டங்களையும் கண்டறிந்து அவைகளில் குறைந்த தீமையைக் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்து அது வெற்றிபெற பாடுபடவேண்டும். தேர்தலை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது.

முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் சமுதாயம் ஒற்றுமையாக செயல்படவேண்டும். சுலநலவாதிகளின் வசீகரங்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் பலியாகிவிடக் கூடாது. முஸ்லிம்களின் ஓட்டுவங்கியின் மூலமே உள்ளாட்சி முதல் பாராளுமன்றம் வரை ஆட்சி அமைக்க முடியும் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தும் தேர்தலாக எதிர்வரும் தேர்தலை மாற்றியமைக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு!

source: samuthaya otrumai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக