அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
21 ஏப்ரல், 2011
2012 ஆம் ஆண்டளவில் மிகப்பிரலமான இயக்குதளமாகுமா அண்ட்ரோயிட்?
கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளமானது எதிர்வரும் 2012 ஆம் ஆண்டளவில் உலகின் மிகப்பிரலமான கையடக்கத்தொலைபேசிகளின் இயக்குதளமாக விளங்குமென கார்ட்னர் ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் பிரகாரம் சந்தையில் 49% கையடக்கத்தொலைபேசிகள் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினை கொண்டவையாக இருக்குமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வருடத்தில் ‘ஸ்மாட்போன்’ விற்பனை எண்ணிக்கையானது 468 மில்லியன்களாக இருக்குமெனவும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 57.7 வீத அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை அப்பிள் இயக்குதளமானது 2 ஆவது மிகப்பெரிய இயக்குதளமாக மாறுமெனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நொக்கியாவுடன் இணைந்துள்ளதால் மைக்ரோசொப்டின் விண்டோசானது 3 ஆவது மிகப்பெரிய இயங்குதளமாக இருக்குமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக