ராமநாதபுரம் : ""ராமநாதபுரத்தில் புதிய போக்குவரத்து மண்டலம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என, ராமநாதபுரம் ம.ம.க.,வேட்பாளர் ஜவாஹிருல்லா பிரசாரத்தில் பேசினார். ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை, எம்.எஸ்.கே. நகர், பால்கரை, வன்னிக்குடி மற்றும் திருப்புல்லாணி ஒன்றிய பகுதிகளில் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் உருவாகி நூற்றாண்டு விழா கொண்டாடும் வேளையில் ராமநாதபுரத்திற்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழ்நிலை உள்ளது. இதை சரிசெய்ய சரியான முறையில் சட்டசபையில் எதிரொலிக்க செய்ய வேண்டும். ராமநாதபுரம் மக்கள் அதிகமானோர் சென்னை, மதுரை, கோவை, சேலம்,போன்ற நகர்களில் வியாபாரம் செய்கின்றனர். வியாபாரிகள் மற்றும் பொது மக்களின் போக்குவரத்து வசதிக்காக , ராமநாதபுரத்திலும் போக்குவரத்து மண்டலம் அமைக்க முயற்சி எடுக்கப்படும். மண்டல அலுவலகம் இல்லாததால் புதிய வழித்தடங்களில் பஸ்கள், கிழக்கு கடற்கரை சாலையில் கூடுதல் பஸ்கள் இயக்குவதில் காலத்தாமதம் ஏற்படுகிறது. இதை சரிசெய்வதற்கு ராமநாதபுரத்தில் போக்குவரத்து மண்டலம் அவசியம் அமைக்க வேண்டும். இதற்காக நான் முழு முயற்சி எடுப்பேன். செட்டியார் சமூகத்தினருக்கு உள்ள வியாபார ரீதியாகவும், குடிநீர், சாக்கடை, மின்சாரம், போன்ற பிரச்னைகளும் தீர்க்கப்படும், என்றார். முத்தரையர் சங்க மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமையில் செயலாளர் செல்வம் முன்னிலையில் அச்சங்கத்தினர், ம.ம.க., வேட்பாளருக்கு ஆதரவு தருவதாக கூறினர். முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, அவைத்தலைவர் சேகர், துணை செயலாளர் முனியசாமி, தொகுதி பொறுப்பாளர் முருகேசன், இணை பொறுப்பாளர் தஞ்சி சுரேஷ்குமார், நகர்செயலாளர்கள் அங்குசாமி, துணை செயலாளர் ஆரிப்ராஜா, ஒன்றிய செயலாளர் அசேக்குமார், தே.மு.தி.க., நகர் செயலாளர் முத்தீஸ்வரன் உட்பட பலர் உடன் சென்றனர்.
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக