அறிவிப்பாளர்: அபூதர் (ரலி) .முஸ்லிம்
அறிவிப்பாளர்: அபூதர் (ரலி). முஸ்லிம்
குறிப்பு:
இதே ஹதீஸை, "மூவகையானோரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; (அவர்களது பாவங்களை மன்னித்து) அவர்களைத் தூய்மைப்படுத்த மாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு" என்ற தொடக்கத்தோடு ஸுலைமான் (ரஹ்) அவர்களிடமிருந்து செவியுற்றதாக பிஷ்ருப்னு காலித் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில் காணப் படுகிறது.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி). முஸ்லிம்
குறிப்பு:
அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்" என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
(மக்கள் கடைவீதியில் அதிகமாகக் கூடுகின்ற) அஸ்ருத் தொழுகைக்குப் பின்னர் தன் வியாபாரச் சரக்கை விற்பதற்காக, வாங்கிய உண்மையான விலைக்கு மாற்றமான (கூடுதல்) விலைக்கு வாங்கியதாக அல்லாஹ்வின் மீது பொய்யாக ஆணையிட்டு நம்ப வைப்பவன்,
ஓர் ஆட்சித் தலைவருக்கு தன் உலகாதாயத்திற்காக உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்து, தனக்கு நன்மை பயப்பதாக இருப்பவற்றில் அவருடைய சொல்படி நடந்து, தனக்கு நன்மை ஏதுமில்லாத ஏவல்களைப் புறந்தள்ளி விடுபவன்
ஆகிய மூவகையானோரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; (அவர்களது பாவங்களை மன்னித்து) அவர்களைத் தூய்மைப் படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி). முஸ்லிம்
குறிப்பு:
ஜரீர் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பான வியாபாரியைப் பற்றிய தகவலில், "ஒருவர் (ஏற்கனவே) இன்னவிலைக்கு இதைக் கேட்டு விட்டார் என்று (பொய்) கூறுவது" என்று இடம் பெற்றுள்ளது. அபூஸாலிஹ் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில் "ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்ளும் தீய நோக்கத்துடன் (பொய்ச்) சத்தியம் செய்தவர்" என்பதாக இடம் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக