கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய செயல்பாடுகள் குறித்தும், தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்தும் பேசப்பட்டது. அதன்பின், கட்சி வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., கூட்டணியில்,
முஸ்லிம் லீக் கட்சி நான்கு முறை போட்டியிட்ட போதும், தனிச் சின்னம் ஒதுக்கப்படவில்லை. உதயசூரியன் சின்னத்தில் தான் எங்கள் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அ.தி.மு.க., தன்னுடைய சின்னத்தில் முஸ்லிம்கள் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தவில்லை. அவர்கள் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தனிச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எந்தக் கட்டுப்பாடுமின்றியும், சுதந்திரமாகவும் கட்சியினர் இயங்க ஜெயலலிதா அனுமதித்துள்ளார். இட ஒதுக்கீட்டிலும் அவரால் எந்தளவுக்கு உயர்த்தி தரமுடியுமோ, அந்தளவுக்கு உயர்த்தி கொடுக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார். இதனால், வரும் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவளிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக