அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
03 ஏப்ரல், 2011
கடல் அட்டைக்குத் தடையை நீக்க முயற்சிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு;கீழக்கரை சிறுதொழில் மீனவர்கள் சங்கம்
கடல் அட்டைக்குத் தடையை நீக்க முயற்சி செய்யும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக கீழக்கரை சிறுதொழில் மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கீழக்கரை சிறுதொழில் மீனவர்கள் சங்கச் செயலர் நல்ல இபுராஹீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2011-ம் ஆண்டு மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகம் 53 வகையான கடல் பொருள்களை எடுப்பதற்குத் தடை விதித்திருந்தது. பின்னர் 23 வகை கடல் பொருள்களின் தடையை நீக்கியது. ஆனால் கடல் அட்டை மீதான தடையை நீக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக தடையை நீக்கக்கோரி போராடி வருகிறோம். கடல் அட்டை ஆண்டுக்கு இருமுறை 10 லட்சம் வீதம் 20 லட்சம் குஞ்சுகளைப் பொறித்து இன விருத்தி செய்வதாக மத்திய மீன் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே மீன் வளத்துறை தடையை நீக்க சிபாரிசு செய்துள்ளனர். ஆகவே அரசு கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும். இத்தேர்தலில் இப்பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் இப்பிரச்னைக்கு முன்னுரிமை தருகிறார்களோ, அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
கடல் அட்டை பிடிப்பதற்கு மீனவர்களுக்கு உரிய அனுமதி பெற்று தர போராடுவேன்,'' என ராமநாதபுரம் தொகுதி ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லா பிரசாரத்தில் பேசியது :
ராமநாதபுரம் தொகுதியில் சாத்தான்குளம், பெருங்குளம், உச்சிப்புளி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து அவர் பேசியதாவது: மீனவர்கள் பிரச்னை தீர்க்ககூடியதாக இருந்தாலும், இதுவரை சரியாக யாரும் அணுகாததால் மீனவர்களின் பிரச்னை கிடப்பில் உள்ளது. மீனவர்கள் நலன் காப்பதில் தி.மு.க., அரசு தவறிவிட்டது. மத்தியில் ஆளும் காங்., அரசும் மீனவர் நலன் காக்காததால் ஏராளமான மீனவர்கள் தொழிலுக்கு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து கடல் அட்டை பிடித்து செல்கின்றனர் .ஆனால் இங்குள்ள மீனவர்கள் கடல் அட்டை பிடிப்பதற்கு தடைவிதித்துள்ளனர். இது எந்த வகையில் நியாயம். கடல் அட்டை பிடித்ததாக அப்பாவி மீனவர்களை கைது செய்து கொடுமை படுத்துகின்றனர். அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா கண்டிப்பாக முதல்வராவார். அவர் முதல்வரானவுடன் மீனவர்களின் நலன் காக்கும் திட்டங்கள் வகுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலோர பகுதிகளில் கடல்சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கப்படும், கடல் அட்டை பிடிப்பதற்கான உரிய அனுமதி பெற்றுதர போராடுவோம், மீனவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும். கருணாநிதி ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. ஆனாலும் கச்சத்தீவில் மீனவர்கள் வலைகளை காயப்போடுவதற்கும், தங்குவதற்கும் உரிமை உண்டு. இந்த உரிமைகூட தற்போது தட்டிபறிக்கப்பட்டுள்ளது. ஜெ., முதல்வரானவுடன் கச்சத்தீவு மீட்பதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் .அதற்கு ம.ம.க., முழு முயற்சி எடுக்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன். தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் .அதன்படி சரியான தீர்வை தரஉள்ளனர். ராமேஸ்வரம் பகுதியில் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளதால் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதற்கு தகுந்த தீர்வு எடுக்கப்படும்.மக்கள் சேவை செய்வதில் ம.ம.க., தீவிரமாக உள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக