நன்றி. தினமலர்
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
03 ஏப்ரல், 2011
ஜாதி, மதம் பாராமல் ம.ம.க.,சேவை : வேட்பாளர் ஜவாஹிருல்லா உருக்கம்
ராமநாதபுரம் : ""ஜாதி மதம் பாராமல் சேவையாற்றிய ம.ம.க.,வினரை பிரதமரே பாராட்டி உள்ளதாக ,'' ராமநாதபுரம் தொகுதி ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லா கூறினார். மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுமடம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது: மக்களுக்கு சேவை செய்வதே உண்மையான அரசியல் பணி என்ற நோக்கத்துடன்தான் மனித நேய மக்கள் கட்சி உருவாக்கப்பட்டது. ஜாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ரத்ததான சேவை, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் சேவை, பேரிடர்கள் மற்றும் விபத்துகளின் போது மீட்பு பணி, மாணவர்களுக்கு கல்வி உதவி என சேவையாற்றும் ஓர் இயக்கத்தின் பிரதிநிதியாகத்தான் நான் போட்டியிடுகிறேன். எங்கள் இயக்கத்தின் கொள்கைகளுக்கு நேர் எதிரான கருத்துடைய பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., காரர்களுக்கு கூட ரத்ததானம் அளித்துள்ளோம். சுனாமி போன்ற பேரிடர்களின் போது எங்கள் இயக்கம் ஜாதி மதம் பாராமல் பணியாற்றியதை பிரதமரும் பாராட்டியுள்ளார். இப்படிபட்ட சிறப்பான மனிதநேய சேவைகளை செய்துவரும் எங்களை தீவிரவாத முத்திரை குத்துவதற்கு ஹசன்அலி முயன்று வருகிறார். ""இலங்கையில் ஆயிரத்திற்கும் மேலான தமிழர்கள் கொன்று குவித்து, தமிழக மீனவர்களை நடுக்கடலில் சித்திரவதை செய்யும் ராஜபக்சே என்ற போர்க்குற்றவாளியின் நண்பர் என கூறிகொள்வதில் ஹசன்அலி'' வெட்கப்படுவதில்லை.தோல்வி பயத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புகின்றனர். தன்னை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களை சற்றும் கண்டுகொள்ளாத ஹசன்அலிக்கு, இந்த தேர்தலில் மக்கள் தக்கப்பாடம் புகட்டுவர். மக்கள் பிரச்னைகளுக்கு ஜனநாயக ரீதியான தீர்வுகளை மட்டுமே காண வேண்டுமென்பதில் ம.ம.க., உறுதியாக இருக்கிறது . தீவிரவாதிகளுக்கு எதிரான கோட்பாடுகளை கொண்டுள்ள எங்கள் கட்சி சமூக நல்லிணக்கத்திற்கு அன்றாடம் பாடும்படும் , என்றார். முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, அ.தி.மு.க.,முன்னாள் மாவட்ட செயலாளர் முருகேசன், துணை செயலாளர் முனியசாமி, அவைத்தலைவர் சேகர்,ஒன்றிய செயலாளர் தங்கமரைக்காயர், மீனவரணி செயலாளர் தர்வேஸ், ஜெ.,பேரவை செயலாளர் பாலசிங்கம், தே.மு.தி.க., சக்திவேல், ஜான்சிராணி உட்பட பலர் உடன் சென்றனர்.
நன்றி. தினமலர்
நன்றி. தினமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக