அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
12 ஏப்ரல், 2011
வாக்காளர்களே கவனியுங்கள்: 1 ஓட்டுக்கு ரூ.200 வாங்கினால் ஒரு நாளுக்கு 11 பைசாதான் லாபம்; திருச்சியில் விநியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு
ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தது. ஆனாலும் எல்லாவற்றிலும் வெற்றி பெற்ற தேர்தல் ஆணையத்தால் இதில் வெற்றி பெற முடியவில்லை.
தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பல தொகுதிகளில் வேட்பாளர்கள் வசதிகேற்ப ஒரு ஓட்டுக்கு ரூ.200, ரூ.500 முதல், ரூ.2000 வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் பரிசு பொருட்களும் சப்ளை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் ஓட்டுக்கு பணம் வாங்குவதை பல வாக்காளர்களும் தயங்குவதில்லை. ரூ.200,ரூ.500-க்கு ஆசைப்பட்டு திருச்சியில் 75 வயது மூதாட்டிகள் வரை தேர்தல் பறக்கும் படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை சில கட்சிகளோடு சமூக அமைப்புகளும் எதிர்த்து வருகின்றன. திருச்சியில் ஒரு பக்கம் அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படைக்கு புகார் தட்டிவிட சென்னை சேர்ந்த மக்கள் காப்பகம் தனியார் அமைப்பு ஒரு பரபரப்பு விழிப்புணர்வு நோட்டீசை தெரு தெருவாக விநியோகித்து வருகிறது.
அதில் ஓட்டுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை வாங்கி ஜனநாயகத்தை விலை பேசும் வாக்காளர்களே சிந்தியுங்கள். நீங்கள் 5 வருடத்துக்காக ஒரு ஓட்டுக்கு ரூ.500 வாங்கினால் ஒரு நாளைக்கு 27 பைசா வாங்குறீர்கள் என்று அர்த்தம். ஒரு ஓட்டுக்கு ரூ.200 வாங்கினால் ஒரு நாளைக்கு 11 பைசா வீதம் 5 வருடத்துக்கு ரூ.200 வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்
ரிசர்வ் வங்கி தற்போது 25 பைசா, 50 பைசாவுக்கு தடை விதித்துவிட்டது எனவே அவைகள் செல்லாது. இந்த நிலையில் ஒரு ஓட்டுக்கு ரூ.500, ரூ.200 வாங்குவது தினமும் 11 பைசா, 27 பைசா வாங்குவதற்கு சமம் செல்லாத காசை வாங்குகிறீர்கள்.
தற்போது யாசகம் பெறுகிறவர்கள் கூட 1 ரூபாய்க்கு குறைத்து வாங்குவதில்லை எனவே சிந்தியுங்கள் என அதில் கூறப்பட்டு உள்ளது. திருச்சியில் இந்த நோட்டீசு விநியோகத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே திருச்சியில் தேர்தலையே புறக்கணிக்ககோரி மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் நோட்டீசு ஓட்டியும், சுவர் விளம்பரம் எழுதியும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசார், வெங்கடேசு உள்பட 3 பேர்மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
நன்றி.மாலைமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக