நன்றி.தினமலர்
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
08 ஏப்ரல், 2011
காட்டுமன்னார்கோவிலுக்கு துணை ராணுவ படை வருகை
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை ராணுவப் படையினர் 84 பேர் வந்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 216 ஓட்டு சாவடிகள் உள்ளது. வரும் தேர்தலில் ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கமாண்டர் உமைத் கான் தலைமையில் 84 பேர் பாதுகாப்புப் பணிக்கு வந்துள்ளனர். இவர்கள் காட்டுமன்னார்கோவில் தொகுதிக்குட்பட்ட சேத்தியாத்தோப்பு, குமராட்சி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீ முஷ்ணம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொகுதிக்குட்பட்ட முக்கிய நகரங்களில் டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் நடத்தப்பட்டது. மேலும் துணை ராணுவத்தினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனை, ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பல இடங்களில் துணை ராணுவத்தினர் துப்பாக்கியுடன் வலம் வர துவங்கியுள்ளதால் பரபரப்படைந்துள்ளது.
நன்றி.தினமலர்
நன்றி.தினமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக