அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
06 ஏப்ரல், 2011
மீனவர் பிரச்னைக்கு குரல் கொடுப்போம் : ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லா உறுதி
ராமநாதபுரம் : ""தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரத்தர தீர்வு காண குரல் கொடுப்போம் ,'' என, ராமநாதபுரம் ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லா பிரசாரத்தின் போது பேசினார். மண்டபம் ஒன்றியம் வாலாந்தரவை உள்ளிட்ட கிராம பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது: தமிழகத்தில் மின்தடை பொது மக்களை மிகவும் பாதித்திருக்கிறது. பெரிய அளவிலான கம்பெனிகளுக்கு கமிஷன் பெற்று கொண்டு மின்சாரத்தை வழங்குவதால், பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதை பற்றி அரசு கண்டு கொள்ளவில்லை. தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது அவர்களது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மீனவர்களை காப்பாற்ற வேண்டிய, பாதுகாப்பு தரவேண்டிய மத்தியில் உள்ள காங்., அரசும் மாநிலத்தில் கருணாநிதி அரசும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையை மாற்றி நமது மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரால் எவ்வித துன்பமும் ஏற்படாது வகையில் மீனவர்கள் பாதுகாப்பு படை அமைக்கப்படும் என அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முஸ்லிம்களுக்காக ஐந்து சதவீதம் இடஓதுக்கீடு செய்யப்படும் என்ற கருணாநிதியின் வாக்குறுதி பொய்யானது. ஆட்சியில் இருப்பவர் வாக்குறுதி தரக்கூடாது அதை செய்து முடிக்க வேண்டும். கருணாநிதி சிறுபான்மை மக்களை ஏமாற்றுகிறார். அ.தி.மு.க., தலைமையிலான ஆட்சி அமையும்போது, கமிஷன் தீர்ப்பு அடிப்படையில் எத்தனை சதவீதம் சொல்கிறதோ அத்தனை சதவீதம் இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் என கூட்டணி தலைவர் ஜெயலலிதா அறிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்திற்கு எதிராக கருணாநிதி அரசு கொண்டு வந்துள்ள கட்டாய பதிவு திருமணம் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டணி தலைவர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண டில்லியில் லோக்சபா முன்பு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் உள்ள ம.ம.க., சேவை செய்வதற்காகவே துவங்கப்பட்ட கட்சி. ஏற்கனவே செய்து வரும் சேவையை ,எம்.எல்.ஏ., என்ற பதவியுடன் இரண்டு மடங்காக பணியாற்ற மக்கள் பெரும் வாய்ப்பு தரவேண்டும், என்றார். முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, மாவட்ட அவைத்தலைவர் சேகர், துணை செயலாளர் முனியசாமி, தொகுதி செயலாளர் முருகேசன், பேரவை செயலாளர் பாலசிங்கம், மீனவரணி தர்வேஸ், மண்டபம் ஒன்றிய செயலாளர் தங்கமரைக்காயர், நகர் துணை செயலாளர் ஆரிப்ராஜா ஆகியோர் உடன் சென்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக