அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
30 ஏப்ரல், 2011
குறைந்து கொண்டே வரும் இளைஞர்கள்! தலைவர்கள் அதிர்ச்சி
ஒரு பக்கம் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் அதேசமயம் மறுபக்கம் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையிலும் நாம் இருவர் நமக்கொருவர் திட்டத்தைக் கைவிட தலைவர்கள் தயாராக இல்லை.
நன்றி.இந்நேரம்
சென்ற ஆண்டு சீனாவில் மக்கள் தொகைக் கணக்கிடும் பணி துவங்கியது. அதன் முடிவுகள், கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. அவற்றில் சில கணக்கெடுப்புகள் சீன தலைவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அமைந்துள்ளன. சீன மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிவுகளின்படி சீனாவின் தற்போதைய மொத்த மக்கள் தொகை 134 கோடியாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில், துருக்கி அல்லது அமெரிக்காவின் கலிபோர்னியா, டெக்சாஸ் அல்லது ஓகியோ மாகாணங்களைச் சேர்த்தால் வரும் மக்கள் தொகை அளவுக்கு சமமாக உள்ளது. அதாவது, 74 கோடி அதிகரித்துள்ளது.
ஒட்டு மொத்த மக்கள் தொகையில், 13.3 சதவீதம் பேர், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். கடந்த பத்தாண்டுகளில் இது, 3 சதவீதம் அதிகரித்துள்ளது. 14 ல் இருந்து துவங்கும் இளைஞர்கள் எண்ணிக்கை, 16.6 சதவீதம். கடந்த பத்தாண்டுகளில் இது, 6.3 சதவீதம் குறைந்துள்ளது.அதே போல், ஒட்டு மொத்த மக்கள் தொகையில், 49.7 சதவீதம் பேர், நகரங்களில் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் இது, 36 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய நாடான சீனா, தனது மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 1980ல் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தைத் திட்டத்தைக் கொண்டு வந்ததிதனால் ஏற்பட்ட நன்மைகளை விடத் கெடுதல்களே அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மக்கள் தொகை நிபுணர் வாங் பெங் கூறியதாவது: இந்த முடிவுகள் சீனா போன்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை. கடந்த பத்தாண்டுகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நான்கு கோடி பேர் அதிகரித்துள்ளனர். அதே போல், குழந்தைப் பேற்றுத் தன்மையும் குறைந்து கொண்டே வருகிறது. ஒரு தம்பதிக்கு 1.5 குழந்தை என்ற வீதமே காணப்படுகிறது. ஒரு குழந்தைத் திட்டத்தைக் கைவிடுவதில் தயக்கம் காட்டினால், ஒரு கட்டத்தில் மக்கள் தொகை என்பது நாட்டுக்குப் பெரும் சுமையாகி, வளங்கள் மிகவும் குறைந்து விடும்.
மிக வேகமான மற்றும் அதிகமான மக்கள் தொகை வளர்ச்சி தான், சீனாவில் கடந்தாண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியின் பின்னணியில் உள்ளன என்று பெரும்பாலான மக்களும், கொள்கை வகுப்பாளர்களும் கருதுகின்றனர். ஆனால், இந்த எண்ணம் ஒரு மாயையே. இவ்வாறு பெங் தெரிவித்தார் ஷாங்காயில் உள்ள பெங் ஷிஷே என்ற நிபுணர் கூறுகையில், "ஒரு குழந்தைத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். நாடு முழுவதும் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், அந்த மாற்றத்தை ஒரு சில பகுதிகளில் மட்டும் கொண்டு வரலாம்' என்றார்.
ஆனால் மக்கள் தொகை முடிவுகள் வெளியானவுடன் நிருபர்களுக்குப் பேட்டியளித்த சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, ஒரு குழந்தைத் திட்டம் எதிர்காலத்திலும் தொடரும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். ஆனால், இத்திட்டத்தில் விரைவில் மாற்றம் வரக் கூடும் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக