#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

18 ஏப்ரல், 2011

வயிற்றுப்போக்கால் 1.25 லட்சம் குழந்தைகள் பலி- ஆய்வில் அதிர்ச்சி தகவல்






இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்குட் பட்ட - ஏறத்தாழ 1,25,000 குழந்தைகள், ரோடா வைரஸ்  கேஸ்ட்ரோ என்டரிட்டிஸ்  என்ற கிருமியின் பாதிப்பினால் உண் டாகும் வயிற்றுப்போக்கால் இறப்பதாக  மத்திய நோய் கட்டுப் பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும்  வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி ஆகியவை  கூட்டாக இணைந்து நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


இந்த கிருமி பாதிப்பினால் உலகம் முழுவதும் 5லட்சத்து 27 ஆயிரம் குழந் தைகள் ஆண்டுதோறும் இறக்கின்றன. இதில் 23 விழுக்காடு  மரணங்கள் இந்தியாவில் நிகழ்கின்றன. இந்தியாவில் இந்த இறப்பு விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்றால், தேசிய அளவில் ரோடா கிருமி தடுப்பு மருந்து திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று இந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது.



ரோடா கிருமி என்பது, சமூக-பொருளாதார ஏற்றத் தாழ்வின்றி அனைத்து தரப்பு குழந்தைகளையும் பாதிக்கக்கூடிய  கிருமியாகும். இளம் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உண்டாக முக்கியக் காரணியாக இக்கிருமி விளங்குகிறது.


பாதிக்கப்பட்ட குழந் தைகளுக்கு வாய்வழி நீர்ச் சத்தளிக்கும் சிகிச்சையை  வழங்குவதன் மூலம் ரோடா வைரஸை எதிர்ப் பதற்கான பொது சுகாதாரப் பிரச்சாரங்கள் இருந்தாலும், இந்த உயிர்க் கொல்லி கிருமியைத் தவிர்ப்பதற்கான தடுப்பு மருந்து திட்டம் ஏதும் இது வரை வரையறுக்கப்படவில்லை. இந்தியா முழுவ தும் ஒருங்கிணைந்த தேசிய ரோடா வைரஸ் தடுப்பு மருந்துத் திட்டம் நடை முறைப் படுத்தப்பட்டால், ஆண்டுக்கு 44,000 மரணங் களை தவிர்க்கமுடியும். மேலும் 2 லட்சத்து93,000  குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதியாவதையும் தடுக்கமுடியும். 3 லட்சத்து 28,000 புறநோயாளிகளையும் தவிர்க்கலாம்.

மேலும் ஆண்டுதோறும் 20.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மிச்சப்படுத்த லாம் என்றும் ஆய்வின் படைப்பாளரும், கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சிப்பிரிவு துணைத் தலைவருமான டாக்டர். ககன்தீப்காங்  கூறுகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக