#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

27 பிப்ரவரி, 2011

234 தொகுதிகளிலும் அதிமுக.,கூட்டணி பெறும் : தமுமுக பொது செயலாளர் பேட்டி

புளியங்குடி : "அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்' என தமுமுக மாநில பொது செயலாளர் ஹைதர்அலி தெரிவித்தார்.

புளியங்குடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த தமுமுக மாநில பொது செயலாளர் ஹைதர்அலி முன்னதாக நிருபர்களுக்கு அளித்த பேட்டடியில் கூறியதாவது: - தமிழகத்தில் திமுக ஆட்சியில் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. மாநிலம் முழுவதும் உள்ள ஆற்றுப்படுகைகளில் தொடர்ந்து மணல் திருடப்பட்டு வருகிறது. மேலும் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க இந்திய கம்யூ., கட்சியின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் நல்லகண்ணு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அதிமுக ஆட்சியில் அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.


மேலும் சென்னை நகரின் குடிநீர் தாகத்தை தீர்க்க வீராணம் ஏரியிலிருந்தும் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. திமுக அரசு ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் தமிழகத்திற்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டது. ஒரு காலத்தில் மதராசிகள் என்றால் அறிவாளிகள் என எண்ணப்பட்டனர். ஆனால் இந்த கொள்ளைகள் மூலம் மதராசிகளை கொள்ளையர்களாக அண்டை மாநிலத்தார் பார்க்கின்றனர்.

மேலும் அதிமுக கூட்டணியில் தற்போது தேமுதிக வந்துள்ளது. அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். அதிமுக ஆட்சி காலத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வந்து சட்டம் ஒழுங்கினை சிறப்பாக பேணி வந்தனர். ஆனால் இன்று ரவுடிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் அவர்கள் செய்யும் தவறுகளை காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.

மேலும் தேர்தலை கருத்தில் கொண்டு முன்கூட்டியே போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தேர்தலை மனதில் வைத்து செய்யப்பட்ட மாறுதலாகும். எனவே தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் போலீஸ் அதிகாரிகளை மீண்டும் பணியிடமாற்றம் செய்ய வேண்டும். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் ஜமீலாபீவிக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆனால் அதன் பின்பும் போதிய டாக்டர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து டாக்டர்களை நியமிக்க வேண்டும். எங்களுக்கு இதுதான் முதல் தேர்தல். அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் ஒரு தொகுதி கேட்டுள்ளோம். அது பரிசீலனையில் உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம். வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ம.ம.க.மேற்கு மாவட்ட தலைவர் மைதீன்சேட்கான், தமுமுக மேற்கு மாவட்ட செயலாளர் நயினா முகம்மது, புளியங்குடி மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் செய்யது அப்துல்ரகுமான், நகர தலைவர் முகைதீன், பசீர்அலி, அசன், முகைதீன்அலி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

நன்றி.தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக