#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

25 பிப்ரவரி, 2011

தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது : மனிதநேய மக்கள் கட்சி

மார்த்தாண்டம் : தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது என மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாஹ் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாஹ் வந்தார். இரவிபுதூர்கடையில் நிருபர்களிடம் கூறியதாவது: மனிதநேய மக்கள் கட்சி 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த பார்லி., தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். 15 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். முதல் முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்கிறோம். அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்று விஜயகாந்த் கூறி வருகிறார். இதனால் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வருவதை நாங்கள் வரவேற்கிறோம்.

மனிதநேய மக்கள் கட்சிக்கு அ.தி.மு.க., கூட்டணியில் மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும். எங்கள் கட்சி தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட உள்ளோம். 1991க்கு பிறகு சிறுபான்மை கட்சிக்கு மூன்று இடம் ஒதுக்கப்படுவது இது தான் முதல் முறை ஆகும்.

அரசியலை சேவையாகவே நாங்கள் கருதுகிறோம். இதனால் வேட்பாளர் செலவை கட்சியே ஏற்றுக்கொள்ளும். தேர்தல் செலவுகள் தனிநபரை சார்ந்து இருக்காது. தமிழகத்தில் எங்கள் இயக்கம் சார்பில் 96 ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி ஏற்பட்ட போது மீட்பு பணியில் எங்கள் பங்கு முக்கியமானதாக இருந்தது.

தி.மு.க., அரசு பல்வேறு துறைகளில் தோல்வி அடைந்துள்ளது. போலீஸ் துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தி.மு.க., நிர்வாகிகள் தலையீடு அதிகரித்து விட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை சதாரண மக்களையும் பாதித்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் கொலை, கொள்ளை, கடத்தல் அதிகரித்துள்ளது. கலைஞர் ஆட்சி மன்னர் ஆட்சி என்று சொன்னாலும் மிகையாகாது.

தொழிற்துறை, டி.வி., சினிமா துறைகளில் முதல்வர் குடும்பத்தின் தலையீடு அதிகரித்து விட்டது. சாதாரண மக்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கு நடந்த பிறகும் அதை நியாயப்படுத்துகிறார்கள். இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும்.

அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும். இதற்காக நாங்கள் அயராது பாடுபடுவோம். தி.மு.க., ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தாலும் வெளி மாநிலங்களுக்கு அரிசி கடத்துவது தொடர்கிறது. சிறுபான்மை பள்ளிகளுக்கு 1990ம் ஆண்டு பிறகு மானியம் வழங்கப்படவில்லை. இதற்கு நாங்கள் குரல் கொடுப்போம்.

இலங்கை அரசு தமிழக மீனவர்களை சுட்டு கொன்றுள்ளது. இதற்கு இந்திய அரசு ராணுவ நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. மத்திய அரசும், தி.மு.க., அரசும் தமிழக மீனவர் பிரச்னையில் தோல்வி அடைந்துள்ளது. இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாஹ் கூறினார்.

பேட்டியின் போது மாநில துணை பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, த.மு.மு.க., மாநில துணைச்செயலாளர் கோவை சாதிக், காதர்மைதீன், மாவட்ட செயலாளர் முகம்மது சபிக், மாவட்ட தலைவர் பீர்முகம்மது, மாவட்ட செயலாளர் செய்யதுஅலி ஆகியோர் உடனிருந்தனர்

நன்றி,தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக