காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் அரசு வழங்கும் மண்ணெண்ணெயை கள்ள மார்க்கெட்டில் வாங்கியவரிடம் இருந்து 75 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. காட்டுமன்னார்கோவில் பெரியார் நகர் எம்.ஆர்.கே., தெருவில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மண்ணெண்ணெய் வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது கடையில் அரசு விலையில் மண்ணெண்ணெய் வாங்கிய சிலரிடம் அதே இடத்தில் சற்று தள்ளி நின்று லிட்டர் 24 ரூபாய்க்கு கள்ள மார்க்கெட்டில் ஒருவர் வாங்கிக்கொண்டிருந்தார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஜாகீர் என்பவர் வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன் மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்தனர். அதிகாரிகளை கண்டவுடன் கள்ள மார்க்கெட்டில் மண்ணெண்ணையை வாங்கிக்கொண்டிருந்த நபர் தப்பி ஓடினார். அவர் விட்டுச் சென்ற 75 லிட்டர் மண்ணெண்ணெய், அளவு குடுவை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
நன்றி. தினமலர்
நன்றி. தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக