கன்னியம் போரிந்திய அல்லாவின் நல்லடியார்களே உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்று என்றும் நிலவட்டுமாக'
கடந்த உள்ளாட்சிமன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்கு அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
மமகவின் கண்மணிகளே!!
நாம் தளத்தை இழந்தாலும் பலத்தை இழக்கவில்லை
தலைவர் தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நாம் செய்த பொதுசேவைகளை கண்டு மக்கள் நமக்கு வாக்கு அளித்துவுள்ளார்கள் வாக்கு அளித்த மக்கள் மனதை வென்றுஇருக்கின்றோம். நாம் எந்த ஒரு ஜமாஅத் வேட்பாளராக தேர்தல் களம் காணவில்லை. நாம் தனித்தன்மை காணவேண்டும் என்பதற்காக மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் என்று அடையாளம் படுத்தினோம். அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளையும் நேரில் சென்று ஆதரவு கேட்டோம் எந்த ஜமாத்தையும் நாம் புறக்கணிக்கவில்லை. அனைத்து மக்களிடம் சென்று நாம் செய்த சேவையை சொல்லியும்,செய்ய போகும் சேவையை சொல்லிவும் வாக்கு சேகரித்தோம். தலைவர் தளத்தை இழந்தாலும் நல்வுள்ளம் படைத்த மக்களை இழக்கவில்லை.
!!அல்ஹம்துலில்லாஹ்!! .
குர் ஆன் ; வசனம்; நிங்கள் மனம் தளர்ந்து விடாதீர்கள் கவலையும் கொள்ளாதீர்கள் நிங்கள் இறை நம்பிக்கை உடையோராயின் நிங்கள் வெற்றி அடைவீர்கள் . குர் ஆன்;3 .139 .
கால வாரி ஜமாஅத்
ஒரு ஜாமத்தை சார்ந்த ஒருவர் உள்ளாட்சிமன்ற தலைவர் தேர்தலில் களம் கண்டார்.அவர் முழுமையாக அந்த ஜாமாத்தை நம்பி நின்றார்.சிலர் அவரிடம் யாரை நம்பி தேர்தலில் நிற்கிறாய் என்று கேட்டபோது நான் அனைத்து மக்களிடமும் நற்பெயர் பெற்றவன் . அதுமாத்தரமில்லை என்னுடைய ஜாமாத்து எனக்கு வாக்குகளை வாரி இறைக்கும் நான் வெற்றிபெறுவேன் என்று நம்பிக்கையுடன் சொன்னார் .ஆனால் அந்த ஜாமாத் அவரை எதிர்த்து நின்றவருக்கு வாக்கு அளித்துவிட்டு இவரை கால வாரி விட்டது . இனிமேலாவது இவர் விழிப்போடு இருக்கட்டும் .யாரை நம்புவது யாரை நம்ப கூடாது என்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக