

ஆம்புலன்ஸ் குறித்த சில தகவல்கள் :
த மு மு க வின் இந்த ஆம்புலன்ஸ் சேவை தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பங்கு ஆற்றுகின்றது .ஏன் என்றால் இந்த ஆம்புலன்ஸ் சேவை இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் செயல் படுகின்றது .தமிழக அரசின் 108.சேவைக்கு முன்பாகவே சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் 108.சேவையை உடனே தொடர்பு கொள்ள முடியாது ஏனெனில் 108.க்கு தொடர்பு கொண்டால் வாடிக்கையாளர் மையத்திற்கு சென்ற பிறகு தான் ,தொடர்பு கொள்ள முடிகின்றது .ஆனால் த மு மு க வின் ஆம்புலன்ஸ் சேவையை யார் வேண்டுமானாலும் உடனடியாக ஓட்டுனரை தொடர்புகொள்ள முடியும்
.நீடூர் நெய்வாசல் ஆம்புலன்ஸ் அழைப்பு எண்:74025660016, 9750189669 [மயிலாடுதுறை அருகில் உள்ள அணைத்து சமுதாய மக்கள் பயனடைவார்கள் ]
.
நீடூர் நெய்வாசல் ஆம்புலன்ஸ் அழைப்பு எண்:74025660016, 9750189669
தலைவர்களின் பேச்சில் சில துளிகள் :
சகோ .மாயவரம் அமீன் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒத்துமையாக இருக்க வேண்டும் என்றும் பழைய நிகழ்வுகளை பேசியது நிகழ்ச்சி ஹைலைட்டாகஇருந்து நமது MLA சகோதரர் பாலருட்செல்வன் நமக்கு எதிரானவர் என்றாலும் இன்று இறைவன் அவரையும் நமது அம்புலன்ஸ் அற்பணிப்பு விழா நிகழ்ச்சியில் வர வைத்தது அந்த இறைவந்தனே அவனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா என்றார் .
சகோ .கோவை ஜாஹீர் :இந்த ஆம்புலன்ஸ் சேவையை நாம் பெருமைக்காகவோ ,அல்லது விளம்பரத்திற்காகவோ செய்யவில்லை ,மாறாக இந்த ஆம்புலன்ஸ் சேவை மூலம் அல்லாஹ்விற்கு அஞ்சி மறுமைக்கு கூலியை தேடிகொள்ளுங்கள் . பெண்கள் தற்கொலை பற்றியும் நமது மாவட்டத்தில் அதிகமாக நடப்பது சம்பந்தமாகவும் விளக்கமாக கூறினார்.
திரு .பால அருள்செல்வன் M.L.A.,:தமிழகத்தில் த மு மு க வின் சேவை அற்புதமானது என்றும் இந்த ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் முழுவதும் விரிவு படுத்தவேண்டும் என்றும் ,விரைவில் தன் சொந்த செலவில் ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி தருவேன் என்றும் சூளுரைத்தார் .நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமான நீடூர் -நெய்வாசல் ஜமாத்தார்களுக்கு என்றென்றும் கடமை பட்டிருகின்றேன் என்றும் ,எந்த நேரத்திலும் எந்த உதவிகளையும் செய்ய தயாராக இருக்கின்றேன் என்றார் .மேலும் சகோ .கோவை ஜாஹீர் அவர்கள் பேசும் போது இந்த வாய்ப்பினை கொடுத்த இறைவனுக்கு இம்மையில் சேவையை செய்து மறுமையில் கூலியை தேடிகொள்ளுங்கள் என்ற அவரது பேச்சு மிக சரியானது என்று கூறி தானும் முயற்சிபதாக கூறினார் .மேலும் அவர் பேசும்போது பெரம்பூர் -மங்கை நல்லூர் இடையே ஒரு பேருந்து கவிழ்ந்த போது நான் த மு மு க வினரிடம் தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் வர ஏற்பாடு செய்ய சொல்ல, உடனே அவர்கள் ஆம்புலன்ஸ் உடன் வந்தார்கள் கொஞ்சம் கூட அருவெறுப்பு இல்லாமல் ஆட்களை ஏத்தி சென்றது என்று நினைவு கூர்ந்தார் .அந்த அளவிற்கு த மு மு க வின் ஆம்புலன்ஸ் சேவை விரைவானது என்றார் .
பேராசிரியர் .ஜவஹிருல்லாஹ் :தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் ஜெனிவாவில் அமெரிக்க கொண்டுவந்துள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றார் .இல்லையேல் காங்கிரஸ் ஆட்சி பேரிழப்பை சந்திக்க நேரிடும் என்றார் பத்திரிக்கையாளர்கள் மின்சாரத்தைபற்றி பேசுவார்கள்என்று எதிர்பார்த்தோம்உங்கள் தலைவர் பேசவில்லை ஏன் என்றனர் அனால் கூடன்குளம்அனல்மின் நிலையம் பற்றி மிக தெளிவாக கூறினார்...........

நன்றி.கிளியனூர் நெட்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக