சென்னையின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் அதி வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் 2013 ல் இயக்கத்தை துவங்கும் வகையல் பணிகள் யாவும் விரிவுபடுத்தப்பட்டு நடாத்தப்படுகின்றன.
கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலான மெட்ரோ ரயில் வழி தடத்தில், கோயம்பேடு, கோயம்பேடு புறநகர், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், கே.கே.நகர், சிட்கோ (கிண்டி), ஆலந்தூர் ஆகிய எட்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன.