காற்றை விட வேகமாக பரவும் சக்தி படைத்தது வதந்தி. இதனால் ஏற்படும் விளைவுகள் பல நேரங்களில் விபரீதங்களை ஏற்படுத்தி விடுவது உண்டு. இப்போது செல்போன் வந்த பிறகு வதந்தி பரவும் வேகம் அதிவேகமாக உள்ளது. சமீபகாலமாக பரவும் வதந்திகள் அகில இந்திய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அசாம் இனகலவரம் வதந்தி இந்தியாவையே புரட்டிப் போட் டது. இதையடுத்து வெளி மாநிலங்களில் வாழும் அசாம்வாசிகள் வேலை, உடமைகளை விட்டு விட்டு சொந்த மாநிலங்களுக்கு கிடைத்த ரயில்களில் ஓட்டம் பிடித்தனர். இந்த வதந்தி வரிசையில் கடந்த 2 தினங்களாக பிறந்த குழந்தை பேசியதாக தமிழகத்தில் பரவியுள்ள வதந்தி மக்களை ஆட்டிப்படைக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட் டம் ஊத்தங்கரை பகுதியில் பிறந்த ஒரு குழந்தை 4 ஆயிரம் குழந்தைகளை பலி வாங்கி விடுவேன் என பேசியதாகவும் இதற்கு பரிகாரமாக குழந்தைகள் தலையில் தேங்காயை சுற்றி முச்சந்தியில் உடைக்க வேண்டும் என கூறப்படும் இந்த வத ந்தி தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லைக் கும் பரவிய இந்த வதந்தியால் நெல்லையில் தேங்காய் விற்பனை திடீரென சூடு பிடித்தது. பலர் தேங்காய் கடைகளில் குவிந்து விலை கேட்காமல் சொல்லும் விலைக்கு வாங்கிச் சென்றனர். பாளை ராஜகுடியிருப்பு, அசோக் தியேட் டர் பகுதி, திம்மராஜபுரம் போன்ற பல பகுதிகளில் மக்கள் தேங்காய்களை வாங்கி தங்கள் குழந்தைகளின் தலை களை சுற்றி விடலை போட்டனர். இதனால் வீதிகளில் தேங்காய் சிதறல்கள் காணப்பட்டது. இவர்களது இந்த செயலால் சில கடைகளில் 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காய் விலை ரூ.15 ஆனது.
நன்றி.தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக