தமிழ்நாட்டில் 'ஒரு முஸ்லிம்' ஆட்சி அமைக்க முடியும்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இது சாத்தியமே
அதற்கு வழி :-- அவர் சார்ந்த கட்சி பொதுத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வென்று அவரை முதலமைச்சராக்க வேண்டும்.
பீகாரில் 1973 - 1975 இல் அப்துல் கபூர் முதலமைச்சராக இருந்துள்ளார்.
1980 - 1982 இல் அப்துல் ரகுமான் அந்துலே மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்துள்ளார்.
செய்யிதா அன்வரா தைமூர் எனும் பெண்மணி 1980 - 1981 இல் அஸ்ஸாமில் முதல்வராக இருந்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் முதல்வர்களாக முஸ்லிம்களே இருந்துள்ளனர். ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா எனப் பரம்பரை முதல்வர்களே அங்குண்டு.
விடுதலை பெற்ற இந்தியா பல சமய சாதி மொழி இனம் அவற்றின் உட்பிரிவுகள் மற்றும் ஆயிரக்கணக்கான அரசியல் கட்சிகள் என வாழ்ந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு சமயச்சார்பற்ற ஜனநாயக நாடாகத் திகழ்கிறது. அதன் தென்னெல்லையான தமிழ்நாடும் மேற்சொன்ன பன்முகத்தன்மையோடுதான் திகழ்கிறது.
பொதுத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சி ஆட்சி அமைக்கும்போது ஒரு முஸ்லிம் உறுப்பினரை முதல்வர் ஆக்கினால் அவரது ஆட்சியும் அவர் சார்ந்த கட்சியின் ஆட்சியாக இருக்குமே தவிர முஸ்லிம் ஆட்சியாக இராது.
ஒரு முதல்வர் மாநிலத்தின் முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் இந்தியாவின் ஒருமைப்பாட்டிலும் சமயச்சார்பிமையிலும் அக்கறை கொண்டவராக விளங்கி மக்கள் பணியாற்ற வேண்டும்.அதுவே இந்திய ஜனநாயகத்திற்குச் செய்யும் மரியாதையாகும்.
நன்றி.இந்நேரம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக