இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நாளேடாக மணிச்சுடர் என்ற பத்திரிக்கை தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பத்திரிக்கையின் வெள்ளிவிழா இன்று மாலை 05 மணிக்கு பெரியார் திடலில் கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்லீக் கட்சியின் மாநிலத் தலைவர் பேரா. காதர்மொஹிதீன் தலைமை வகிக்கும் விழாவில், முஸ்லிம் லீக் கட்சியின் வேலூர் எம்.பி எம். அப்துல்ரஹ்மான் அறிமுக உரை நிகழ்த்துகிறார்.
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி வெள்ளிவிழா மலரை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான இ.அஹமது விழா மலரைப் பெற்றுக் கொள்கிறார்.
முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் பீட்டர் அல்ஃபோன்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, காயல் மகபூப் நன்றியுரை ஆற்றுகிறார்.
முஸ்லிம் லீக்கின் மாநில செயலாளர் கமுதி பஷீர், திருப்பூர் சத்தார், கே.எம்.நிஜாமுதீன், வடசென்னை மாவட்ட செயலாளர் ஏ.ஹெச்.எம்.இஸ்மாயில், மாவட்ட தலைவர் எம்.ஜெய்னுல் ஆப்தீன், தென் சென்னை மாவட்ட தலை வர் பூவை முஸ்தபா ஆகியோர் விழா ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக