அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
20 நவம்பர், 2010
மாலேகான் குண்டு வெடிப்புக் குற்றவாளி சுவாமி ஆசிமானந்த் கைது!
சுவாமி ஆசிமானந்த் கடந்த இரண்டு நாள்களாக சிபிஐ மற்றும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினர் ஆகியோரின் தேடுதல் வேட்டையில் சிக்காமல் தப்பித்து வந்தார்.
குஜராத் மாநிலம் டாங்ஸ் பகுதியில் வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற பெயரில் ஆசிமானந்த் ஆசிரமம் நடத்தி வருகிறார். நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கும் இந்த ஆசிரமத்தில் வைத்தே திட்டம் தீட்டப்பட்டது என காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தப் பகுதியில் பழங்குடியினருக்காக பள்ளி ஒன்றையும் ஆசிமானந்த் நடத்தி வருகிறார். கிறிஸ்தவ ஆதிவாசிகளை இந்து மதத்திற்கு மாற்றும் பணியையும் இவர் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
காவித் தீவிரவாத நெட்வொர்க்கின் மூளையாகக் கருதப்படும் சுனில் ஜோஷியுடன் ஆசிமானந்துக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ முன்னாள் அதிகாரி புரோஹித் மற்றும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா ஆகியோருடனும் ஆசிமானந்த்துக்கு தொடர்பு உள்ளதாகக் காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி.இநேரம்.காம்
16 நவம்பர், 2010
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்திய மாநில தலைவர் தியாக திருநாள் வாழ்த்துக்கள்
இத்திருநாள் உணர்த்தும் மகத்தான செய்தியான உண்மைக்காக நீதிக்காக சத்தியத்திற்காக சுதந்திரத்திற்க்காக எத்தகைய தியாகத்தையும் அகில உலகத்தையும் படைத்து இரட்சித்து பாதுகாத்து வரும் அல்லாஹ் வின் திருப்பொருத்தத்தை வேண்டி முஸ்லிம்கள் செய்ய முன் வர வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி அனைத்து மக்களின் நல்வாழ்விற்க்காக பாடுபட இந்நாளில் உறுதி ஏற்போம் .
அனைவருக்கும் பாப்புலர் பிரண்ட் டின் சார்பாக இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் இப்படிக்கு மு . முஹம்மது அலி ஜின்னா மாநில தலைவர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா
நன்றி.பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா.காம்ஊழல் மனப்பான்மை ஒழியட்டும், தியாக மனப்பான்மை வளரட்டும் தமுமுக தலைவர் வாழ்த்து

இறையன்பிற்காக எதையும் தியாகம் செய்யும் மனப்பான்மை எல்லோரும் பெற வேண்டும் என்பது தான் இருபெரும் இஸ்லாமியத் திருநாற்களின் ஒன்றானத் தியாகத்திருநாளின் நோக்கமாகும்.
இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்கள், ஏக இறைவன் வழங்கிய வாழ்க்கை நெறியை பூமியில் போதித்தார்கள். அதற்காக அளவிலாத் துன்பங்களையும், சோதனைகளையும் சகித்தார்கள். தனது பேரன்பிற்குரிய மகன் இஸ்மாயில் (அலை) அவர்களையும் தியாகம் செய்ய முன்வந்தார்கள்.
இவ்வுலகின் மீதும், செல்வ சுகங்களின் மீதும் மனிதமனம் கொள்கின்ற வரம்பு கடந்தப் பேராசையின் விளைவாகவே குழப்பங்களும், போர்களும், நிம்மதியின்மையும் ஏற்படுகிறது. பொது வாழ்வில் இலட்சோபலட்சம் கோடிகளில் ஊழல் பெருகுவதற்கும் இத்தகைய மனப்பான்மையேக் காரணமாக உள்ளது. தனியுடமை, பொது உடமை ஆகியக் கொள்கைப் போராட்டங்களினிடையே இஸ்லாம் இறையுடமைக் கோட்பாட்டை வலியுறுத்துகிறது.
நம்மிடம் உள்ள செல்வங்கள் அனைத்துக்கும் நாமே முழு உரிமையாளர்கள் அல்ல, உண்மையில் நாம் அதன் அறங்காவலர்களே... எனவே செல்வத்தின் மீது வரம்பு கடந்த பற்று கொள்ளாமல் அவற்றை அறவழியில் செலவிட வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.
இருபெரும் இஸ்லாமிய பெருநாள்களான ஈகைப் பெருநாளும், தியாகத் திருநாளும் இப்பண்புகளையே நினைவூட்டுகின்றன.
தியாகத் திருநாள் அன்று சுமார் 25 லட்சம் முஸ்லிம்கள் பல்வேறு தேசங்களிலிருந்தும் வந்து மக்காவில் கூடுகின்றனர். இன, மொழி, நிற வெறிகளை மிதித்துப் புதைத்து விட்டு சர்வதேச சகோதரத்துவத்தை அங்கே பறை சாற்றுகின்றனர். வசதியுள்ள முஸ்லிம்கள் குர்பானி இறைச்சியை ஏழை எளியோருக்கு பங்கிட்டு அளித்து இன்புறுகின்றனர்.
கூடி மகிழ்வதும், கொடுத்து மகிழ்வதும் படைத்த இறைவனை வணங்கி மகிழ்வதும், இந்த நன்னாளின் சிறப்புகளாகும்.
தனிவாழ்விலும், பொது வாழ்விலும், ஊழல் மனப்பான்மை ஒழிந்து தியாக மனப்பான்மை பெருகவும், சகோதரத்துவம் வளரவும் இத் தியாகத் திருநாளில் உறுதிகொள்வோம்.
நன்றி.தமுமுக.காம்
ஓர் மரண அறிவிப்பு
15 நவம்பர், 2010
ஆ.ராசாவின் கடைசி நேர விலகல் காலதாமதமான முடிவு கடும் நடவடிக்கை தேவை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:-
ஒட்டு மொத்த இந்திய தேசத்தையும் ஆ.ராசாவின் ஊழல் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டில் நாட்டிற்கு 1.77 இலட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய மிகப் பெரிய ஊழலாக அறியப்படுகிறது. ஆ.ராசாவின் ஊழலால் அரசிற்கு பேரிழப்பு ஏற்பட்டிருப்பதை மத்திய தலைமை கணக்காயம் (CAG) தனது அறிக்கையில் உறுதிபடுத்தியிருக்கிறது அனைத்து எதிர் கட்சிகளும் ஆ.ராசா பதவி விலக வேண்டுமென வலியுறுத்திய போதும் ஒட்டுமொத்த ஊடகங்களும் இந்த ஊழலை அம்பலபடுத்திய பிறகும் கடைசிவரை ஆ.ராசா பதவிலேயே ஒட்டிக் கொண்டிருக்க அனைத்து விதமான முயற்சிகளையும், திமுக எடுத்தது வெட்கத்திற்குரியது.
அதிமுக பொதுச் செயலாளா; ஜெயலலிதா எடுத்த அதிரடி முடிவும் Times Now ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதை அறிவித்ததும் ராசாவை பதவி விலக செய்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
பதவி விலகலோடு பிரச்சனையை முடித்து விடாமல் நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பிற்கு பரிகாரம் காணும் வகையில் மத்திய அரசு விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும் மீண்டும் தொலைதொடா;புத் துறையை திமுகவிடம் வழங்ககூடாது. 2ஜி அலைகற்றை ஒதுக்கீடு ஊழலை சி.பி.ஐ. விரைந்து விசாhpக்க வேண்டும்
2ஜி அலைகற்றை ஒதுக்கீடு வெளிப்படையான ஏல முறையை வேண்டுமென்றே தவிர்த்து முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற முறையை பின்பற்றி நாட்டிற்கு பேரழிப்பை ஏற்படுத்தியுள்ளவர்களை தண்டிக்காமல் விடுவிப்பது ஊழழுக்கு ஊக்கமளிக்கும் தேச விரோத செயலாக மக்களால் பாh;க்கப்படும் என மத்திய அரசு உணரவேண்டும்.
இந்த ஊழல் விசாரணை குறித்து மத்திய அரசு மற்றும் சிபிஐ வழக்குறைஞ்சர்கள் கூட்டத்தில் ஆ.ராசாவின் வழக்குறைஞ்சரும் கலந்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது இது விசாரணையின் நேர்மை மீதும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.
இத்தகைய தவறுகள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது 2ஜி அலைகற்றை பெற்ற நிறுவனங்கள் அவற்றின் பிண்ணனி மேலும் இதில் லாபம் அடைந்தவர்கள் பற்றிய விவரமான அறிக்கை நாட்டு மக்களுக்கு சமர்பிக்கப்பட வேண்டுமென்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் வலியுறுத்துகிறது.
(எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்)
14 நவம்பர், 2010
தியாகத் திருநாள் வாழ்த்து

"(...ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைச் சேமித்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் சாலச்சிறந்தது இறையச்சமாகும். எனவே, நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள்" (அல்குர்ஆன் 2:197).
13 நவம்பர், 2010
அறிந்ததும் அறியாததும்!
அல்லாஹ்வின் திருப்பெயரால்... |
|
|
| இஸ்லாத்தின் அடிப்படையான சில விஷயங்கள், உலக அதிசயங்கள் சில இங்கே சிறார்களின் அறிதலுக்காக வேண்டி பதிக்கப்படுகிறது. 1. திருக்குரானில் குறிப்பிடப்பட்டுள்ள நபிமார்கள் யார்? ஆதம், இத்ரிஸ், நூஹ், ஹூத், ஸாலிஹ், இபுராஹிம், லூத், இஸ்மாயில், இஷ்ஹாக், யாஹிப், யூஸுப், அய்யூப், சுஹைப், மூஸா, ஹாரூண், யூனுஸ், தாவூத், சுலைமான், இல்யாஸ், அல்யஸவு, ஜக்கரியா, யஹ்யா, ஈஸா, முஹம்மத்(ஸல்), துல்கிப்லு ஆகியோர். 2. இஸ்லாத்தின் வழிகாட்டிகள் எவை? இஸ்லாத்தின் வழிகாட்டிகள் இரண்டு.
ஒன்று திருக்குர் ஆன். முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளிய திருமறைதான் திருக்குர்ஆன். நபியவர்களின் பெயரை எழுதும்போது "ஸல்" என்று சேர்த்து எழுதுவது வழக்கம். "ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்பதன் சுருக்கமே 'ஸல்' என்பது. "நாயகம் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகுக" என்பது அதன் பொருள். 2.சூனியம் செய்வது. 3.அல்லாஹ் எந்த உயிரைக் கொலை செய்வதைத் தடுத்து இருக்கிறானோ அந்த உயிரை நியாயமின்றி கொலைசெய்வது. 4.வட்டியை உண்பது. 5.அநாதைகளின் சொத்துக்களை அபகரிப்பது. 6. போர் நடந்துக்கொண்டிருக்கும் தினத்தன்று புறமுதுகு காட்டுதல். 7.விசுவாசியான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது.
நன்றி- சத்தியமார்க்கம்.காம்,
|
11 நவம்பர், 2010
துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்
ஆதாரம் : புகாரி
ஓர் மரண அறிவிப்பு
09 நவம்பர், 2010
கோவையில் 2 குழந்தைகளை கடத்தி கொடூரமாக கொன்ற கொலையாளி என்கவுன்டரில் சுட்டுக் கொலை
பள்ளிக்கு செல்லாமல், குழந்தைகளின் தந்தை ரஞ்சித்திடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் இருவரையும் கடத்தி சென்றார். பொள்ளாச்சி அங்கலகுறிச்சியில் உள்ள தனது நண்பன் மனோகரனையும் அழைத்துக்கொண்டு உடுமலையில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள சர்க்கார்புதூர் பிஏபி வாய்க்கால் பகுதிக்கு சென்றனர். ரஞ்சித்துடன் போனில் பேச முயன்றுள்ளனர். ஆனால் தொடர்பு கொள்ள முடிய வில்லை. பின்னர் சர்க்கார்புதூர் பிஏபி வாய்க்கால் பாலத்தில் இருந்து முஸ்கானையும், ரித்திக்கையும் வாய்க்காலில் தள்ளி கொலை செய்தனர். வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குழந்தைகளின் பாட்டி கமலாபாய் தெரிவித்த தகவலின் அடிப்படையில் டிரைவர் மோகன்ராஜையும், கூட்டாளி மனோகரனையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
பிரேதப் பரிசோதனையில் சிறுமி முஸ்கான் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மோகன்ராஜையும், மனோகரனையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு, கோவை 5வது ஜுடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் நேற்று மனு செய்தனர். 2 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி கோபிநாத் அனுமதி வழங்கினார். 11ம்தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து மோகன்ராஜும், மனோகரனும் நேற்று இரவு 7 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இரவு முழுவதும் அவர்களிடம் விசாரணை நடந்தது. உதவி கமிஷனர் குமாரசாமி தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
குழந்தைகள் கொலை செய்யப்பட்ட உடுமலை சர்க்கார்புதூருக்கு 2 பேரையும் அடையாளம் காட்டச் சொல்வதற்காக அழைத்து செல்ல போலீசார் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை 5 மணிக்கு மோகன்ராஜ் ஒரு வேனிலும், மனோகரன் ஒரு வேனிலும் அழைத்து செல்லப்பட்டனர். மனோகரன் சென்ற வேன் முதலில் சென்றது. பின்னால் சென்ற வேனில் மோகன்ராஜுடன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, எஸ்ஐக்கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர் இருந்தனர். வேனை டிரைவர் ஏட்டு அண்ணாதுரை ஓட்டினார்.
பொள்ளாச்சி ரோட்டில் ஈச்சனாரி ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தால், மாற்றுப்பாதையாக வெள்ளலூர் வழியாக அழைத்து சென்றனர். காலை 5.30 மணிக்கு வெள்ளலூர் குப்பை கிடங்கு அருகே சென்றபோது, மோகன்ராஜ் திடீரென எஸ்ஐ முத்துமாலை இடுப்பில் வைத்திருந்த ரிவால்வரை சடாரென உருவி, ‘வேனை திருப்புடா’ என டிரைவரிடம் கூறினான். எஸ்ஐ முத்துமாலை துப்பாக்கியை பறிக்க முயன்றபோது அவரை மோகன்ராஜ் துப்பாக்கியால் சுட்டான். அவரது இடுப்பில் குண்டு பாய்ந்தது. தடுத்த எஸ்ஐ ஜோதியையும் சுட்டான். அவருக்கு இடது கையில் குண்டு பாய்ந்தது. இருவரும் மயங்கி கீழே சாய்ந்தனர்.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தனது துப்பாக்கியால் மோகன்ராஜை சுட்டார். இதில் தலையில் கண் அருகே 2 குண்டும், மார்பில் ஒரு குண்டும் பாய்ந்தது. அதே இடத்தில் மோகன்ராஜ் சுருண்டு விழுந்து இறந்தார். உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே வேனில் மோகன்ராஜ் சடலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. காயமடைந்த எஸ்ஐக்கள் முத்துமாலையும், ஜோதியும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஆபரேஷன் நடந்தது. பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்த மோகன்ராஜ், சுட்டுக் கொல்லப்பட்டது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
