"என்னாலே முடியல்லே...!!!இது தினமலர் தப்பா?? இல்லை அதன் வாசகர்கள் தரத்தை தினமலர் இந்த கீழ்நிலையில் வைத்திருக்க விரும்புகிறதா? இல்லை நமது தமிழக அரசின் முக்கிய அலுவல்கள் இந்த தரத்தில் தான் இருக்கின்றதா??அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
30 டிசம்பர், 2011
நிர்வாணச் சாமியார் சாபமிட்டால் ராஜபக்சே அழிந்து போவாரா?
"என்னாலே முடியல்லே...!!!இது தினமலர் தப்பா?? இல்லை அதன் வாசகர்கள் தரத்தை தினமலர் இந்த கீழ்நிலையில் வைத்திருக்க விரும்புகிறதா? இல்லை நமது தமிழக அரசின் முக்கிய அலுவல்கள் இந்த தரத்தில் தான் இருக்கின்றதா??
இதை எல்லாம் நம்பும் முட்டாள்கள் நாட்டில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்...!!! இப்படி சொன்னதற்கே ஆயிரம் வியாக்கியானம் சொல்ல "மேதாவிகள்" வரிசையில் நிற்பார்கள்...!!! ரொம்ப கஷ்டம் தான்...!!!"
எண்ணெய் கப்பல்களை வழி மறிப்போம்: ஈரான் எச்சரிக்கை!
உலகில் எண்ணெய்வளம் மிக்க முதல் 5 நாடுகளில் ஈரானும் ஒன்று. அங்குள்ள ஹார்மோஷ் துறைமுகம் வழியாகத்தான் அனைத்து எண்ணெய் கப்பல்களும் தற்போது சென்று வருகின்றன.
ஈரானின் அணு ஆயுத கொள்கையை எதிர்த்துவரும் அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக, பொருளாதார தடை மற்றும் எண்ணெய் வர்த்தகத்தை தடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவின் இந்தப் போக்குக்கெதிராக கடும் எரிச்சலடைந்துள்ளது ஈரான். இது குறித்து ஈரான் துணை அதிபர் முஹம்மது ரெஷா ரஹிமி விடுத்துள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவின் இந்தப் போக்குக்கெதிராக கடும் எரிச்சலடைந்துள்ளது ஈரான். இது குறித்து ஈரான் துணை அதிபர் முஹம்மது ரெஷா ரஹிமி விடுத்துள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது:
29 டிசம்பர், 2011
சிதம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
முல்லை பெரியார் அணையின் நீதி தமிழகத்திற்கு கிடைத்திடவும், உச்சநீதி மன்ற தீர்ப்பை அமுல்படுத்திடவும், மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்தும் 29.12.2011 இன்று மாலை சிதம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
மாவட்ட தலைவர் M.H.மேஹராஜுதின் தலைமை தாங்கினார்,த.மு.மு.க.மாநில செயலாளர் கோவை செய்யது கண்டன உரையாற்றினார்,
28 டிசம்பர், 2011
மக்கள் ஆதரவில்லை: சிறை நிரப்பும் போராட்டம் ரத்து- ஹஸாரே அறிவிப்பு!

மும்பை: மோசமான உடல்நிலை மற்றும் மக்களிடம் போதிய வரவேற்பின்மை காரணமாக தனது உண்ணாவிரதத்தை பாதியில் முடித்துக் கொண்ட அன்னா ஹஸாரே, சிறை நிரப்பும் போராட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
அன்னா ஹஸாரே தனது மூன்று நாள் உண்ணாவிரதம் முடிந்ததும், சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த இருந்தார். ஆனால் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்த கூட்டத்தின் அளவு அவரையும் அவரது கோஷ்டியையும் பெரும் ஏமாற்றத்துக்கும் விரக்திக்கும் உள்ளாக்கிவிட்டது.
26 டிசம்பர், 2011
சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
மத்திய இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை வஞ்சித்த காங்கிரஸ் அரசை கண்டித்தும், முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழக உரிமையை நிலை நாட்டிட மறுத்து மெத்தன போக்குடன் நடக்கும் மத்திய அரசை கண்டித்து, தமிழகம் வந்த பிரதமருக்கு தமுமுக வினர் சென்னையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி ஏராளமானோர் கைதாகினர்.
இதேபோல் காரைக்குடி வந்த பிரதமருக்கு தமுமுக வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி ஏராளமானோர் கைதாகினர்.
காரைக்குடியில் ..........

25 டிசம்பர், 2011
இந்தியாவின் முதல் பள்ளிவாயில்!

கேரள மாநிலத்திலுள்ள கொடுங்கலூர் என்ற ஊரில் அமைந்துள்ள பள்ளிவாயில் தான் இந்தியாவின் முதல் பள்ளிவாயில் என்று கூறப்படுகின்றது. கி.பி. ஆம் 621 ஆண்டு சேரமான் பெருமாள் என்ற மன்னரால் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த மஸ்ஜித் 1375 ஆண்டு காலமாக இருந்து வருகின்றது.
இறுதி இறைத்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களின் ஒன்றான சந்திரன் பிளவுபடுதல் நிகழ்ச்சியைக் கண்ணுற்று அதன் மூலம் இஸ்லாத்தை தழுவியதாக கூறப்படும் சேரமான் கட்டிய இந்த பள்ளிவாயிலை ரூபாய் பத்து கோடி செலவில் விரிவுபடுத்தப் போவதாக செய்திகள் கூறுகின்றது.
22 டிசம்பர், 2011
சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு மத்திய அரசின் அறிவிப்பு ஒரு மோசடி பிபிசி தமிழோசை வானொலிக்கு தமுமுக தலைவர் அளித்த பேட்டி
இந்தியாவின் நடுவணரசில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் 27 சதவீத ஒதுக்கீட்டில், மதச் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதத்தை தனியே உள் ஒதுக்கீடு செய்ய ஒப்பதல் அளித்துள்ளது.
இந்த முடிவு விரைவில் நடக்க இருக்கும் உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டது என்று ஒரு புறமும், மக்கள் தொகையில் சுமார் 20 சதம் இருக்கும் சிறுபான்மையினருக்கு வெறும் 4.5 சதவீதத்தை ஒதுக்குவது மிகவும் குறைவானது என்று மறுபுறமும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முல்லைபெரியாறு – கேரள அரசை கண்டித்து ம.ம.க. வாகனப் பேரணி – 400 பேர் கைது

கோவை:முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிடக் கோரியும், மனிதநேய மக்கள் சார்பில் வாகன ஊர்வலம் நடத்தப்பட்டது. இவ்வூர்வலத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் 400 பேரை காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசைக் கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிடக் கோரியும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வாகன ஊர்வலம் மற்றும் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்
“கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்” திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது.“இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு.
தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களானகட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.
1782 டிசம்பரில் ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32.
மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால் அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.
21 டிசம்பர், 2011
கொட்டாவி (Yawning) வர உண்மையான காரணம் என்ன!!!? ஆராய்ச்சி தகவல்
அவர் நாம் சொல்வதை கவனிக்கவில்லை, அல்லது அவர் தூக்கக்கலக்கத்திலோ, சோர்விலோ இருக்கிறார் என்று தானே நினைப்பீர்கள்!!?
உங்கள் நினைபெல்லாம் தவறாக இருக்கலாம், என்கிறது ஒரு புதிய ஆராய்ச்சி ஒன்று.
கொட்டாவியை தூக்கக்கலக்கம் மற்றும் சோர்வுடன் மட்டும் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய மூளை ரொம்ப சூடாக இருக்கிறது’ என்பதன் அறிகுறி அது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






