இந்தியாவின் நடுவணரசில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் 27 சதவீத ஒதுக்கீட்டில், மதச் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதத்தை தனியே உள் ஒதுக்கீடு செய்ய ஒப்பதல் அளித்துள்ளது.
இந்த முடிவு விரைவில் நடக்க இருக்கும் உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டது என்று ஒரு புறமும், மக்கள் தொகையில் சுமார் 20 சதம் இருக்கும் சிறுபான்மையினருக்கு வெறும் 4.5 சதவீதத்தை ஒதுக்குவது மிகவும் குறைவானது என்று மறுபுறமும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதேநேரம் கல்வி ரீதியாக முன்னேறியதாகக் கருதப்படும் கிறிஸ்தவர்களையும், பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களாக பார்க்கப்படும் பார்சிகள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற மத சிறுபான்மையினரை முஸ்லீம்களுடன் ஒன்றாக இணைத்து இட ஒதுக்கீடு அளிப்பது சிக்கலானது என்கிற விமர்சனமும் வைக்கப்படுகிறது.
இந்தப் பின்னணியில், நடுவணரசின் முடிவு ஒரு ஏமாற்று வேலை என்கிறார் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம் எச் ஜவாஹிருல்லா. மண்டல் குழுவின் பரிந்துரையின் பேரில் ஏற்கனவே முஸ்லீம்கள் அனுபவித்துவரும் இட ஒதுக்கீட்டைவிட தற்போதைய தனி ஒதுக்கீடு எந்த விதத்திலும் சிறந்ததல்ல என்கிறார் அவர்.
பிபிசி தமிழோசையின் செய்தியாளர் எல்.ஆர. ஜெகதீசனுக்கு தமுமுக தலைவர் இன்று (டிசம்பர் 24, 2011) அளித்த பேட்டியை கேட்க இங்கே சொடுக்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக