#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

12 டிசம்பர், 2011

தமிழக-கேரள எல்லையில் பதட்டம், மோதல், போலீஸ் தடியடி


protest border
குமுளி:முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக தமிழக-கேரள எல்லையில் பதட்டம் தீவிரமடைந்துள்ளது. குமுளிக்கு பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த தமிழக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீது போராட்டத்தில் ஈடுபட்டோர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். மலையாளிகளின் வாகனங்கள் மற்றும் அலுவலகங்கள் தகர்க்கப்பட்டன.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள அரசு மற்றும் போராட்டக் குழுவினரின் நடவடிக்கைகளைக் கண்டித்து, கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய பகுதிகளில் இருந்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குமுளியில் உள்ள கேரள எல்லையை நோக்கி 2-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேரணி நடத்தினர்.
கேரள எல்லையை நோக்கி பேரணி செல்ல பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் குவியத் தொடங்கினர். கம்பம், கூடலூர் ஆகிய இடங்களில் இருந்து காலை 10 மணிக்கு லோயர்கேம்பை அடுத்துள்ள கேரள எல்லையை நோக்கி 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நடந்தும், வாகனங்கள் மூலமும் பேரணி செல்லத் தொடங்கினர். கம்பத்தில் கம்பம்மெட்டு சாலை வழியாக கேரள எல்லைக்குச் செல்வதற்கு முயன்றவர்களை போலீஸார் தடுத்து அனுப்பினர்.
தடையை மீறிய பொதுமக்கள்: கூடலூர்-லோயர்கேம்ப் ஆகிய இடங்களுக்கு இடையே உள்ள குருவனூத்து ஆற்றுப் பாலம் அருகே காவல் துறையினர் வாகனங்களை நிறுத்திவைத்து, பொதுமக்கள் செல்வதற்குத் தடை ஏற்படுத்தினர். அந்த இடத்தை ஒட்டியுள்ள பயன்பாடற்ற பழைய பாலம் வழியாக பொதுமக்கள் லோயர்கேம்ப் நோக்கிச் சென்றனர்.நன்றி thoothu online 
லோயர்கேம்ப் அருகே கேரள வனத் துறை கட்டுப்பாட்டில், மனம் திருந்திய வனக் குற்றவாளிகள் மூலம் செயல்பட்டுவரும் சுற்றுலாத் தகவல் மையம் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை வனப் பகுதிக்குள் அழைத்துச் செல்வதற்கு பயன்படுத்தும் 2 மாட்டு வண்டிகள் ஆகியவற்றை தீயிட்டு எரித்துச் சேதப்படுத்தினர்.
லோயர் கேம்ப்பில் இருந்து காவல்துறை தடையை மீறி வனப் பகுதி வழியாகவும் குமுளி சாலையிலும் பொதுமக்கள் கேரள எல்லையை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
பிற்பகல் ஒரு மணிக்கு கேரள எல்லையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தமிழக எல்லையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை பகுதிக்குச் சென்ற பொதுமக்களைத் தடுத்து, தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸ், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் சமரசம் செய்தனர். கேரள அரசைக் கண்டித்தும், கோரிக்கையை வலியுறுத்தியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும், தமிழகத்தில் இருந்து கேரளத்துக்குச் செல்லும் அனைத்து பாதைகளையும் அடைக்க வேண்டும், பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும், தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைக்கவும் சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் நடத்த முதல்வர் அறிவித்துள்ளதாகவும், எல்லையில் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பொதுமக்களிடம் ஆட்சியர் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் இருந்து கேரளத்துக்குச் செல்லும் சாலைகளை அடைக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக போராட்டக்காரர்கள் கூறினர்.
இந்நிலையில், தமிழக எல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தும் பொதுமக்களைச் சந்திப்பதற்கு பிற்பகல் 4.15 மணிக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றார். காரில் இருந்து இறங்கி தென் மண்டல ஜ.ஜி., மாவட்ட ஆட்சியர் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த காவல் துறை தடுப்புப் பகுதியை நோக்கிச் சென்ற அமைச்சர் மீது சிலர் கல் வீசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் தடியடி நடத்தி, பாதுகாப்பு அரண் ஏற்படுத்தி உத்தமபாளையத்துக்கு அமைச்சரை அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட தமிழகக் காவல்துறை வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்தனர். மாலை 5 மணிக்கு தமிழக எல்லையில் இருந்து லோயர்கேம்ப் வரை சாலையில் கற்கள் மற்றும் மரக்கட்டைகளைப் போட்டு காவல் துறையினர் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் செல்ல முடியாமல் தடை ஏற்படுத்தியவாறு பொதுமக்கள் திரும்பச் சென்றனர்.
கேரளாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் கேரள மாநிலம் கோட்டையத்தை சார்ந்த தாமச்சன் என்பவரின் கயிறு தொழிற்சாலை மற்றும் இரண்டு லாரிகளை தீயிட்டு கொளுத்தினர். கேரள வனத்துறையின் கீழ் செயல்படும் இக்கோ டெவலப்மெண்ட் கமிட்டி அலுவலகமும் சேதப்படுத்தப்பட்டது. இந்திராகாந்தி காலனியில் மலையாளிகளின் குடிசைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. லோயர் கேம்பில் சுற்றுலா பயணிகள் உலாவரும் மாட்டு வண்டிகளும், அலுவலகமும் தகர்க்கப்பட்டன. வன்முறை சம்பவங்கள் குறித்து கேரள போலீஸ் தமிழக போலீசுடன் நிலைமைகளை குறித்து விவாதித்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக