#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

31 டிசம்பர், 2011

தடுமாறிய தமிழக தலைவர்கள் இந்த வருடத்தில் 2011



ஜெயலலிதா
தமிழக முதல்வர், அதிமுக பொதுச் செயலர்
தமிழக அரசியலில் இந்த வருடத்தின் மாஸ் அரசியல்வாதி என்றால், அவர் அதிமுக-வின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று சொல்லப்படுகிற ஜெயலலிதாதான். முந்தைய ஆட்சியில் கருணாநிதி கொடுத்த இலவசங்களை ஏகத்துக்கும் விமர்சனம் செய்தார். ஆனால், தனது தேர்தல் அறிக்கையில் இலவசத்துக்கு எதிர் இலவசம் என சகட்டுமேனிக்கு இலவசங்களை அள்ளி வீசினார். ஆட்சியில் அமர்ந்ததும் ஆறு மாதத்தில் தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றிக்காட்டுவேன் என்றார். ஆனால், இன்றுவரை மந்திரிசபை குழப்பங்கள் கூட தீர்க்கவில்லை.

ஆட்சி ஏறியதும் 'நில அபகரிப்பு'களை மீட்பதற்காக, பல முன்னாள்களை தூங்க விடாமல் செய்தார். முந்தைய ஆட்சியின் அடையாளங்கள் என்று தலைமைச் செயலகம், சமச்சீர் கல்வி, அண்ணா நூற்றாண்டு நூலகம், சாலைப் பணியாளர்கள் என ஏகத்துக்கும் 'மாற்றங்களுக்கு' வித்திட்டார்.
நீதிமன்ற தீர்ப்புகள், அரசாணைகளை திருத்தினாலும் ஜெயலலிதா தனது பிடிவாதத்தை திருத்தி கொள்பவரில்லை என்பது வரலாறு.
ஜெயலலிதாவின் சமீபத்திய அதிரடி.. 30 வருட தோழி சகிகலாவை கட்சியை விட்டும், தோட்டத்தை விட்டும் நீக்கியது. இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவின் பிடிவாதம் எந்த அளவுக்கு என்பது அவர் மட்டுமே அறிந்தது. 2011-ல் அதிக தலைப்பு செய்திகளில் அடிபட்டது ஜெயலலிதாவாகத்தான் இருக்கும்.
மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் முயற்சி, கூடங்குளம், முல்லைப் பெரியாறு முதலிய விவகாரங்கள், அதிமுக அரசின் விலையேற்ற நடவடிக்கை, 'மாற்றங்கள்' முதலான அதிருப்திகளுக்கு அம்னீஷியாவானது அவரது அதிர்ஷ்டம்!
கருணாநிதி
திமுக தலைவர், முன்னாள் முதல்வர்
இந்த வருட சோக கீதத்தின் கதாநாயகன். ஆட்சி அதிகாரம் இழப்பு, கனிமொழி கைது, முன்னாள் மந்திரிகள் கைது என ஏகத்துக்கும் பின்னடைவு.
அறிக்கைகள் குறைந்தன. கூட்டணிக்கு குடைச்சல் கொடுக்குமளவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வாக்கு இருந்தும் மௌனராகம் பாடுகிறார். பல்வேறு பிரச்னைகளுக்காகவும் மக்கள் குரல் கொடுக்கும் போதெல்லாம் அறிக்கையோடு நிறுத்திக்கொள்வதுதான் தற்போதைய நிலையாக இருக்கிறது.
எம்.பி.களை வைத்து அடிக்கடி அரசியல் பூச்சாண்டி காட்டுவது, கனி கைதுக்கு பிறகு மறந்து போனது.
பாராட்டு கூட்டங்களும் இல்லை, வசனம் எழுத வேலையில்லை, குடும்ப குடைச்சல் என செம்மொழி நாயகனுக்கு செம சறுக்கல் ஆண்டு.
விஜயகாந்த்
தேமுதிக தலைவர், பேரவை எதிர்கட்சித் தலைவர்
ஆட்சி மாற்றம் என்கிற அரசியல் சுனாமியில் எதிர்பாராத விதமாக எதிகட்சித் தலைவர் என்கிற உசசம் பார்த்து விட்டார், இந்த கறுப்பு எம்.ஜி.ஆர்.
பெரும்பாலான திரைப்படங்களில் போலீஸ் அதிகாரியாகவே நடித்துவிட்டதால், இந்த வேட்டி சட்டை நாட்டாமை வேலை பொருந்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதிரிபுதிரியாக தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து ஒரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த பின் சைலன்ட் ஆனார்.
இந்த வருட தேர்தலில்தான் அதிமுகவோடு கூட்டணி கும்மாளம் போட்டார். அதிமுக ஆட்சியை ஆறு மாதங்கள் கண்காணிப்போம், அதற்கு பிறகுதான் ஆட்டத்தை ஆரம்பிப்போம் என்றார். இடையில் ஜெயலலிதா ஆடிய பல பல்லாங்குழி ஆட்டங்களின் போதும் கேப்டனை காணோம்.
அவ்வப்போது தனது கட்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ வெளுத்தெடுப்பதும், கூட்டத்தில் தொண்டர்களை வறுத்தெடுப்பதும் பொழுதுபோக்கு. ஆக மொத்தமாக எல்லா பிரச்னைகளுக்கும் சேர்த்து, செவி சாய்க்காத மத்திய அரசை கண்டித்து சென்னை வந்த பிரதமருக்கு கருப்பு கொடி காட்டியதுதான் இந்த வருடத்தில் தனது கட்சிக்காக கேப்டன் கொடுத்த கடைசி கால்ஷீட்.
வைகோ
மதிமுக பொதுச் செயலர்
எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் 'என்ன எதிர்காலமோ' என சோகப்பட்டு பாடாமல் ரூட்டை மாற்றியது வைகோவின் அரசியல் சாமர்த்தியம் மட்டுமல்ல, அரசியல் வாழ்க்கையும் அதில்தான் இருக்கிறது. ஆளாளுக்கு ஒதுங்கியிருக்கும் பிரச்னைகளில் முன்னின்று கலந்துகொண்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார்.
மூவர் தூக்கு, முல்லை பெரியாறு, கூடங்குளம், பரமகுடி என சகல பிரச்னைகளிலும் அசராமல் வண்டியோட்டுகிறார் இந்த அண்ணன். வைகோ வந்த பிறகுதான் சூடு காண்கிறது ஒவ்வொரு களமும் என்கிறார்கள் கூட்டங்களில். கூடும் கூட்டம் குடும்பத்துக்கு ஒரு ஓட்டு என குத்தியிருந்தால்கூட டெபாசிட் வாங்கியிருப்பார்.
என்றாலும் தற்போதைய நிலையில் எல்லா பஞ்சாயத்துக்களிலும் அரசியல் ஐகானாக வைகோ மாறியிருப்பதால் பாஸிட்டிவ் நெகட்டிவ் இரண்டும் கலந்த ஆண்டு அண்ணனுக்கு.
ராமதாஸ்
பாமக நிறுவனர்
சபதங்கள், சூளுரைகள் என ஏகத்துக்கும் தொண்டர்களை டெம்ப் ஏற்றியதில் நொடிந்து போனது ராமதாஸ் வண்டி. 2011-ல் எங்கள் ஆட்சி என சூடம் கொளுத்தி சத்தியம் செய்தார். ஆனால் ஒற்றை இலக்க எம்.எல்.ஏ.க்களைதான் சட்டமன்றம் அனுப்ப முடிந்தது. திரும்ப
எந்த வருடத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று சொல்ல முடியாத அளவுக்கு காயம் இருந்தாலும், திராவிட கட்சிகளோடு இனி எக்காலத்திலும் கூட்டு கிடையாது என சலம்புகிறார். உள்ளாட்சித் தேர்தலில் கழட்டிவிடப்பட்ட பாமக, இந்த ஆண்டு காணாமல் போனவர்கள் பட்டியலில் இணைந்தது. எனினும், அரசியல் நையாண்டி பிரியர்களுக்கு தங்கபாலுவை விட அதிக தீனி கொடுத்த பெருமையை இவருக்குத் தந்தது 2011.
ஞான தேசிகன்தமிழக காங். தலைவர்
யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் லக்கி பிரைசாக தலைவர் பதவி தேடி வந்தது தேசிகனுக்கு. முன்னணி தலைவர்களுக்கு சுற்று முறையில் தலைவர் பதவி வரும் என்றாலும், இந்த சைலன்ட் சைரனுக்கு வந்தது ஆச்சர்யம்தான். தற்போது எல்லா கோஷ்டிகளும் அடக்கி வாசிப்பதாக தெரிவதற்கு காரணம் இவர்தானா என்று புருவம் உயர்த்துகிறார்கள் பலரும்.
பல கோஷ்டிகளையும் ஒருங்கிணைத்து கைபிடிக்க வைத்தது இந்த வருட சாமர்த்தியம். கோஷ்டிகளை ஒட்ட வைக்க வந்த பேஸ்டா அல்லது காங்கிரஸ் நாற்காலியில் ஒட்டிக்கொண்டிருக்கும் பேஸ்டா என்பது போகபோகத்தான் தெரியும்.
பொன் ராதாகிருஷ்ணன்
தமிழக பிஜேபி தலைவர்
''பாதையே இல்லாத ஊருக்கு டவுன்பஸ் ஒட்டுறதுண்ணா சும்மாவா'' என்று கடைசி நேரத்தில் வரும் போலீஸாக தமிழக அரசியலில் அவ்வப்போது எண்ட்ரீ கொடுக்கிறார். தனித்தே போட்டியிட்டாலும் தனக்குதானே ஓட்டுப்போடாத தமிழக பாஜக&வுக்கு ஒரு
தலைவராவது இருக்க வேண்டும் என்கிற சம்பிரதாயம் தாண்டி வேறு எதற்கும் விவரமான ஆளாக இல்லை ராதாகிருஷ்ணன்.
தேர்தல் தவிர எல்லா நாட்களிலும், ஒரு ரெடிமேட் அறிக்கைகூட இல்லாமல் எப்போதுமே சைலன்ட் மோடுதான்.
திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்
சூறாவளி, தனிவழி என எந்த சுழலிலும் 'தம்' கட்டும் திருமாவுக்கும் இந்த வருடம் எக்குதப்பாகத்தான் இருந்தது. காங்கிரஸ் எனது எதிரி, காங்கிரசோடு கூட்டணி வைத்திருக்கும் சூரியன் எனக்கு எதிரியில்லை என நம்பிய தம்பிகளை அடுக்குமொழியில் அடக்கினார். எதிரியின் நண்பன் நமக்கு எதிரியா? நண்பனா? என குழம்பியது தம்பிகள் மட்டுமல்ல, தமிழக வாக்காளர்களும்தான்.
அவ்வப்போது அறிக்கைகளும், அரைக்கை சட்டைகளுமாக காட்சிதரும் கலாசாரத்தை அண்ணன் விட வேண்டும் என குமுறுகிறார்கள் ஆதரவு தம்பிகள். 2011ல் சிறுத்தைகள் ஆண்டாக இருக்கும் என சீறிய திருமா திமுக கூட்டணியில் சிக்கி வெறுமா ஆனதுதான் மிச்சம்.
கண்ணாடி பார்த்து மீசை முறுக்குவதை குறைத்துக்கொண்டு வீதியில் இறங்கினால்தான் அரசியல் வாழ்க்கை இருக்கிறது இந்த அண்ணணுக்கு. ஆனால், இப்போதும் எழுந்திரிப்பதாக தெரியவில்லை. எப்போது எழுவார் என்பது தொண்டனுக்கும் தெரியவில்லை.
தா.பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்
''இவரு நல்லவரா இல்ல ரொம்ப நல்லவரா'' என ஜெயலலிதாவே குழம்பி போகும் அளவுக்கு ஜால்ராவாகி போனதில் தொண்டர்களைவிட இவருக்கே கூட குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது.  அடிக்கடி மதி மயங்கி ஆமாம் போடுவதும், பின்பு அப்படி சொன்னேன், இப்படி சொன்னேன் என ஆட்டம் போடுவதும் சகஜமாகி விட்டது தா.பாண்டியணுக்கு. கூட்டணி பேரத்துக்காக போயஸ்கார்டனுக்கு நடையாய் நடந்ததில் ரெண்டு ஹவாய் செப்பல்களாவது தேய்ந்து போயிருக்கும். கதவை சாத்தி கார்டன் கண்ணாமூச்சி காட்டியதால் கண்ணில் பூச்சி பறக்க, கேப்டனை 'கேப்டன்' ஆக்கினார் கூட்டணி கப்பலுக்கு.
தனியாக நிற்கலாம் என்றான் மானமுள்ள தொண்டன். மடக்கி மடக்கி பேசி கார்டனை மனமிறங்க வைத்ததிலிருந்து இப்போது வரை மனங்கோணாமல் அறிக்கை விட்டு கிலுகிலுப்பு காட்டுகிறார். 2011 பல வகைகளிளும் பஞ்சரான வருடம் தா.பாண்டியனுக்கு.
ஜி.ராமகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர்
"அப்பிராணி பூச்சி.. இவரா உங்க தலைவரு?" என கேட்கத்தோன்றும் பாவனைதான் என்றாலும் செயல்களும் அவ்வாறே இருப்பது வேதனைதான். பல்வேறு பிரச்னைகளின்போதும் அறிக்கைகள் அல்லது ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டம் என முடித்துவிடுகிறார்கள் தொண்டர்கள்.
கூடங்குளம், முல்லை பெரியாறு பிரச்னைகளில் தெளிவு இல்லை. ''இருக்கு ஆனா இல்ல" என்று அறிக்கை விட்டு ஆஃப் ஆகிவிடுகிறார். அரசியல் அதகளங்கள் தவிர தனிப்பட்ட முறையில் குறையொன்றும் இல்லை கண்ணா என்றாலும், இப்படி அநியாயத்துக்கு அடக்கி வாசித்ததில் 2011 ஏமாற்றம்தான்.
தூசி படிந்த சிவப்பு துண்டை தோழர் உதறி போட்டுக்கொள்வது எதிர்காலத்துக்கு நல்லது.
தங்கபாலு
தமிழக காங். முன்னாள் தலைவர்
தடாலடி, அடாவடி, அடிதடி எல்லாவற்றையும் சமாளிப்பதற்கு தனித்திறமை கொண்டவர்கள்தான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க முடியும் என்பதற்கு தங்கபாலுதான் உதாரணம். 'வேட்டி கிழிந்தாலும் நாற்காலியில் இருப்பேண்டா' என்று சாதித்து காட்டினார்.
தமிழக காங்கிரஸின் கோஷ்டிகளை சமாளிக்க தனி கோஷ்டி வேண்டும், அல்லது தனி அதிகாரம் வேண்டும், இவை இரண்டும் இல்லாமல் வண்டியை ஓட்டியது, தேர்தல் கூட்டணி போட கருணாநிதிக்கே பெப்பே காட்டியது என தங்கபாலுவின் சாமர்த்தியங்கள்.
இந்த வருடத்தில் ஏராளம். என்றாலும் வீக்கான பில்டிங்கை தூக்கி நிறுத்தும் அளவுக்கு தங்கபாலுவிடம் தெம்பு இல்லை என்பதால் தேர்தலுக்கு பிறகு கல்தா வாங்கினார்.

சசிகலா மீது ஏன் ஜெயலலிதா விசாரணைக் கமிசன்
வைக்க வில்லை : நாஞ்சில்சம்பத் பேச்சுநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அந்நகரில் ம.தி.மு.க வின் இளைஞரணி பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் கொள்கை விளக்க அணித் தலைவர் நாஞ்சில் சம்பத்தின் பேச்சில் அனல் வீச்சு வெப்பத்தைக் கிளப்பியது     அவர்,   ’’ 100சதவிகிதம் பஸ் கட்டண உயர்வு சுமை தாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.   பிரச்சிணைகளைத் திசைதிருப்பவே சசிகலா விவகாரம் நடந்து வருகிறது. அப்படி என்றால் அவர்கள் மீது ஜெயலலிதா ஏன் விசாரணைக கமிசன் வைக்க வில்லை.
ஆய்ந்து அறிந்த பின்பு சமச்சீர் கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்தார் கலைஞர் ஆட்சிக்கு வந்த உடனேயே சமச்சீர்கல்விக்கு சமாதிகட்டிவிட்டீர்கள்.    ஓதாமல் ஓரு நாளும் இருக்க வேண்டாம் என்று சொன்ன தமிழ் நாட்டில், நீங்கள் இரண்டரை மாதம் ஓதவிடவில்லை.
சமச்சீர் பாட புத்தகத்தில் வள்ளுவர் படத்தை பச்சை அட்டை ஒட்டி மறைத்தீர்களே வள்ளுவர் என்ன தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளரா? அவர் என்ன குற்றம் செய்தார் உங்களுக்கு.
கலைஞர் ஆட்சியின் மகத்தான சாதனை செம்மொழி நூலகம் .   அந்த நூலகத்தை மூட நினைப்பது 4 சிறைச்சாலைகளை திறப்பதற்குச்சமம்.
தமிழ் நாட்டு நிதி நிலைமை பற்றாக்குறை என்கிறார். ஒருபற்றாக்குறை நாடு என்றால் அந்தப் பற்றாக்குறைக்கு என்ன காரணம் என்று ஒரு முதலமைச்சர் யோசிக்க வேண்டும்.    பற்றாக்குறை இருந்தால் ஒரு நாடு வளம்பெறாது நான் யாசித்துக் கேட்கிறேன்.
இந்த இடைத் தேர்தலில் ம.தி.மு.க.வை வேற்றி பெறச்செய்யுங்கள். சங்கரன்கோவில் தொகுதிக்கு ஒரு மரியாதை கிடைக்கும்.  இந்த அரசாங்கத்தை உரசிப்பார்ப்பதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்புத்தாருங்கள்’’ என்று பேசினார்.


கடந்த இருதினங்களாக தமிழகத்தை மிரட்டி வந்த தானே புயல் இன்று அதிகாலை புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே கரையைக கடந்தது. 130 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்த புயல் போகும் வழியெங்கும் கோர தாண்டவம் ஆடிவிட்டு போயிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி புதுவைக்கு 35 கிலோ மீட்டர் தூரத்தில் தென்மேற்கேயும், கடலூரிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் கிழக்கிலும் புயல் கடந்து கொண்டிருக்கிறதாம். இப்புயல் தமிழக உள் மாவட்டங்களுக்குள் செல்லச் செல்ல வலுவிலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக உள் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பபட்டுள்ளது.
தானே புயலுக்கு இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளனர். கடலூரில் புயலில் சிக்கிய ஒரு முதியவர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் கோட்டைக்குப்பம், நொச்சிக்குப்பம் ஆகிய பகுதிகளில் வீடு இடிந்து விழுந்து இரண்டு பேரும், புதுச்சேரியில் ஒருவரும் பலியாகியுள்ளனர்.
புயலின் கோர தாண்டவத்தில் தமிழகத்தில் பலத்த பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அதோடு உயிர்ச்சேதமும் ஏற்படுவது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக