#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

15 டிசம்பர், 2011

+2 கல்வித் தகுதிக்கு இந்திய விமானப்படையில் பணியாற்றலாம்!!!




ஏர்மேன் (Airman)

இந்திய விமானப்படையில் Airman Group X (Technical) Trades மற்றும் Group Y Trades பிரிவில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் பணியாற்றலாம்.
Indian airman group x group y
கல்வித் தகுதி(Educational Qualification)

பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றுத்தேர்ச்சி பெற்றிருப்பதுடன், இயற்பியல் மற்றும் கணிதப் பாடத்தை பயின்றிருக்க வேண்டும்.  (அல்லது) அரசு ஆங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக்கில் ஏதாவதொரு பொறியியல் டிப்ளமோ, குரூப் Y பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் 50 சதிவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.  எந்தப் பாடப் பிரிவில் (Any Group) படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு(Age Limit)

17 முதல் 22 வயதுக்குள்

தேர்வு முறை(Type of Exam)

இந்திய விமானப்படை இதற்காக அவ்வப்போது இந்தியாவின் 14 முக்கிய நகரங்களில் Recruitments Rallies நடத்துகிறது.  இது குறித்த விளம்பரம் அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் வெளியாகும்.  தென்னிந்தியாவைப் பொறுத்தவரை சென்னை, பெங்களூரு, கொச்சி மற்றும் செகந்தாரபாத் ஆகிய இடங்களில் Recruitments Rallies நடைபெறுகிறது.  விண்ணப்பிக்க விரும்புவர்கள் நேரடியாக seletion Test நடைபெறும் இடத்திற்கு அனைத்துச் சான்றிதழ்களுடனும் ஆஜரானால் போதும்.  தேர்வு முறை குறித்த விளக்கங்கள் அங்கேயே வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு(written exam)

Group X Trade (Technical) பிரிவில் English, Physics, Mathematics பகுதிகளிலிருந்தும், Group Y பிரிவில் English and Reasoning மற்றும் பொது அறிவுப் பகுதியிலிருந்தும் கேள்விகள் அமையும். தேர்வு எழுதிய நாளன்றே தேர்வு முடிவுகள் அளிக்கப்படும். இதற்கு கீழ்க்கண்ட புத்தகங்களைப் படிக்கலாம்.

1. Airman Group X Examination, 2. Airman Group Y Examination ஆகிய புத்தகங்களைப் படிக்கலாம்.  இவற்றின் விலை தலா ரூ. 150/-

2. Arihant Publications (P)Ltd. 14/140, Garhiya Hakiman Gali, Hospital road, Agra.

எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் உடற்கூறு தகுதித் தேர்விற்கு (Physical fitness test ) அனுமதிக்கப்படுவர்.
Indian_airman
இதற்கு அடுத்து, இன்டர்வியூ மற்றும் மருத்துவப் பரிசோதனை நடைபெறும். மேலும் Group X trade Technical பிரிவை தேர்வு செய்தவர்களுக்கு Trade Allocation Test நடைபெறும்.  இதற்குப் பிறகு Mechanical அல்லது Electronic Trade ஒதுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.


நன்றி.தங்கம் பழனி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக