அதிமுக அரசு தம் மீதும், உதயநிதி மீதும் தொடர்ந்துள்ள வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். அந்தப் புகாரில் எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இரண்டு கோரிக்கைகளை அவர்களிடம் எடுத்துக்கூறியுள்ளோம். ஒன்று, என் மீது போடப்பட்டிருக்கிற வழக்கு பொய் வழக்கு. கடைந்தெடுத்த பொய் வழக்கு. அதாவது நிலஅபகரிப்பு என்ற பெயரிலே சொல்லப்பட்டிருக்கிற அந்த வழக்கைப் பொறுத்தவரையில் அந்த சொத்துக்கும் எனக்கும், எனக்குமட்டுமல்ல என்னுடைய குடும்பத்தில் உள்ள யாருக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. வேண்டுமென்றால் அந்த
வீட்டைப்பொறுத்த வரையில், என்னுடைய மகன் உதயநிதி அவர்கள் வாடகை அடிப்படையிலே அவர் தொழில் செய்துக்கொண்டிருக்கிற சினிமா கம்பெனி பெயரிலே, வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அதிலே என்னுடைய மகளும், மருமகனும் குடியிருக்கிறார்களே தவிர, வேறு எந்த தொடர்பும் அந்த வீட்டைப் பொறுத்தவரையில் எங்களுக்கு நிச்சயமாக கிடையாது.எனவே வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு பொய் வழக்கை மிரட்டியோ, அச்சுறுத்தியோ அல்லது பணம் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்திலோ அல்லது அரசியல் நோக்கத்தோடோ, ஏன் அதையும் தாண்டி காவல்துறையை தவறான வகையில் பயன்படுத்தி, இதற்காக அவர்களை பயன்படுத்தி மிரட்டி அந்தப் புகாரை பெற்றிருக்கிறார்கள். எனவே அந்த புகார் தந்திருக்கக்கூடிய அந்த நபர் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த கோரிக்கையை எடுத்துச் சொல்லியிருக்கிறேன் என்றார்.
மேலும் பேசிய அவர், ஃபஸ்ட் இன்ஃப்ரமேஷன் ரிப்போர்ட் தற்போது ஃப்ராட் இன்ஃப்ரமேஷன் ரிப்போர்ட்டாக மாறி இருக்கிறது. எப்.ஐ.ஆர். பதிவு செய்தால் கைது செய்ய வேண்டாமா? ஆனால் இதுவரை கைது செய்யவில்லை.
என்னை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்பதற்காகத்தான் வந்தேன். அதை கேட்டதும் கூடுதல் டி.ஜி.பி.யால் பதில் சொல்ல முடியவில்லை. நில அபகரிப்பு வழக்கை பொறுத்தவரை தி.மு.க.வினர் மீது புகார் கொடுத்தால் உடனே வழக்குப்பதிவு செய்து விடுகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது கூட நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
நன்றி.உறவுப்பாலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக