திருமங்கலம், பெண்ணாசரம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக டெபாஸிட் இழந்திருந்த நிலையில், அதிமுக இனி தேறாது என அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தார்கள். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்று மு.க.அழகிரி கர்ஜித்தார். அதிமுகவின் பல இரண்டாம் கட்டத் தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிமுகவிலிருந்து விலக திமுகவல் ஐக்கியமாகிக் கொண்டிருந்தனர்.
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
30 செப்டம்பர், 2011
மனிதநேய மக்கள் கட்சி: உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டி ஏன்?
கடந்த சட்டமன்ற தேர்தலில் மிகவும் பலகீனமான நிலையில் அ.இ.அதிமுக&வின் அரசியல் களம் இருந்தது. அப்போது செல்வி.ஜெயலலிதா அவர்கள் அதிமுக சார்பில் மனிதநேய மக்கள் கட்சிக்கு அழைப்பு விடுத்தார். ஒன்றல்ல. இரண்டுமுறை!
திருமங்கலம், பெண்ணாசரம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக டெபாஸிட் இழந்திருந்த நிலையில், அதிமுக இனி தேறாது என அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தார்கள். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்று மு.க.அழகிரி கர்ஜித்தார். அதிமுகவின் பல இரண்டாம் கட்டத் தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிமுகவிலிருந்து விலக திமுகவல் ஐக்கியமாகிக் கொண்டிருந்தனர்.
29 செப்டம்பர், 2011
கொள்ளுமேடு மமக ஊராட்சிமன்ற வேட்பாளர் மனுதாக்கல் செய்தார்.
அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)
கொள்ளுமேடு மமக ஊராட்சிமன்ற வேட்பாளர் இன்று(28.09.2011) காட்டுமன்னார்குடி பாஞ்சாயத் யூனியனில் மனுதாக்கல் செய்தார்.அவருடன் மமக மாவட்ட தலைவர் மெஹ்ராஜ்த்தின்,தமுமுக மாவட்ட செயலார் அமானுல்லாஹ்,கொள்ளுமேடு ஜமாத்தார்கள் ,கிளைகழக நிர்வாகிகள்,பொதுமக்கள் பெரும்திரளாக சென்று மனுதாக்கல் செய்தார்.
" இன்ஷா அல்லாஹ் வெற்றிபெற தூவா செய்வோமாக"
27 செப்டம்பர், 2011
26 செப்டம்பர், 2011
25 செப்டம்பர், 2011
அப்பாவி இளைஞர் தீவிரவாதியாக கைது – போராட்டத்துக்குப் பின் விடுதலை
புதுடெல்லி:ஆஜம்கர் நகரைச் சேர்ந்த மஃபூஸ் அஹமது என்ற வாலிபர் ஒரு கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் காணாமல் போனார். தீவிரவாத எதிர்ப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பின்பு குற்றமற்றவர் என்று கடந்த சனிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
புரட்சியில் அன்னியத் தலையீடு கூடாது’: ஐ.நா.வில் மன்மோகன்சிங் வலியுறுத்தல்
ஐ.நா.சபை:சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டுவிட வேண்டும். வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றி அங்கே புதிய ஆட்சியைநேபாள விமான விபத்து: பலியான 8 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள்!
நேபாள விமான விபத்தில் பலியானோரில் 8 பேர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இருவர் முன்னாள் அமைச்சர்களின் உறவினர்கள் தகவல்கள் கூறுகின்றன.நேபாளத்தில் இன்று காலையில் இமய மலையின் மீது விமானம் மோதியதில் 19 பேர் பலியானார்கள். பலியானவர்களில் 8 பேர் திருச்சியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. விபத்தில் பலியான மீனாட்சி சுந்தரம் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் உறவினர் ஆவார். மற்றொருவர் முன்னாள் அமைச்சர் செல்வராஜின் உறவினர் ஆவார்.
மீனாட்சி சுந்தரத்துடன் சென்ற மணிமாறன், மருதாச்சலம், புகழேந்தி, கனகசபேசன், தியாகராஜன், காட்டூர் மகாலிங்கம்,ஆகியோரும் சென்று இருந்தனர். அவர்களும் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது.
இமயமலையை சுற்றிப் பார்க்க திருச்சியில் இருந்து இவர்கள் நேபாளத்துக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள். அனைவரும் திருச்சி கட்டுமான சங்க உறுப்பினர்கள் ஆவார்கள்.
நெல்லை மாநகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் காதர்பீவி!
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நெல்லை மாநகராட்சி மேயராக காதர் பீவி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ளார். இவரது கணவர் பெயர் சேக் செய்யது அலி. இவருக்கு ராஹீனா என்ற மகளும், முகமது கனி என்ற மகனும் உள்ளனர். காதர் பீவி கட்சியின் மகளிர் அணி செயலாளராக உள்ளார்.மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாட்டப்பத்து முகமது அலியின் மகளான இவர், துபாயில் உள்ள பன்னாட்டு சாப்ட்வேர் நிறுவன ஆராய்ச்சி பிரிவில் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் 10 வார்டுகளுக்கு போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
கேப்டன் மன்சூர் அலிகான் மரணம்!
சுவாசக்கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி, டெல்லி மருத்துவமனை ஒன்றில் சிகிட்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி, சுவாசக்கோளாறு காரணமாக டெல்லியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிட்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவருக்கு 70 வயதாகிறது.
1961 முதல், 1975 ம் ஆண்டு வரை, 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பட்டோடி, அவற்றில் 40 போட்டிகளுக்கு கேப்டனாக பணிபுரிந்திருக்கிறார். துடுப்பாட்டத்தில் மாத்திரமல்லாது, களத்தடுப்பிலும் 'புலி' என வர்ணிக்கப்படுபவர் பட்டோடி. வெளிநாடொன்றில் இந்திய அணிக்கு முதல் டெஸ்ட் வெற்றியை தேடி தந்தவர் அவரே. தனது 21 வயதில், 1961ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக முதன் முதலில் களமிறங்கினார்.
60 களில் புகழ்பெற்ற இந்திய சினிமா நடிகை ஷர்மிலா தாகூரை 1969ம் ஆண்டு மணம்முடித்தார். அந்நாளில் மிக பிரபலம் வாய்ந்த ஜோடியாக இவர்கள் திகழ்ந்தனர். 1993-96 வரையான காலப்பகுதியில் ஐசிசியின் போட்டி நடுவர் குழுவிலும் பட்டோடி கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

18 செப்டம்பர், 2011
நமதூர் இருளில் மூல்கி கிடந்த தெருக்கள் இப்பொழுது ஒளிவெள்ளத்தில்
அஸ்ஸலாமு அழைக்கும்(வராஹ்)
நமதூரில் கடந்த இரண்டு மாதங்களாக தெரு விளக்குகள் எரியாததால் தெருக்கள் இருளில் மூல்கி கிடந்தது தமுமுகவின் சேவையின் அடிப்படையில் அனைத்து தெரு கம்பங்களுக்கும் விளக்குகள் புதியதாகவும்,பழுது செறிப்பாக்கபட்டது. இந்த சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.மேலும் சில கோரிக்கைகள் வைத்துயிருக்கின்றனர்.இன்ஷா அல்லாஹ் அனைத்து கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்யப்படும்.
''எல்லாப்புகழும் இறைவனுக்கே''

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)