
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நெல்லை மாநகராட்சி மேயராக காதர் பீவி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ளார். இவரது கணவர் பெயர் சேக் செய்யது அலி. இவருக்கு ராஹீனா என்ற மகளும், முகமது கனி என்ற மகனும் உள்ளனர். காதர் பீவி கட்சியின் மகளிர் அணி செயலாளராக உள்ளார்.
மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாட்டப்பத்து முகமது அலியின் மகளான இவர், துபாயில் உள்ள பன்னாட்டு சாப்ட்வேர் நிறுவன ஆராய்ச்சி பிரிவில் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் 10 வார்டுகளுக்கு போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக