இந்தக் கவலைகளைப் போக்குவதற்கு 'யுனிக்கோட்' தமிழ் பிறந்துள்ளது.
வருங்காலத்தில் 'யுனிக்கோட்' தமிழே நிலைக்கும் 'யுனிக்கோட்' தமிழின் அருமை அறிந்தும் இவற்றைச் சீர்படுத்த சென்ற திமுக அரசு தவறிவிட்டது. தகவல் தொழில்நுட்பத் துறையும் தமிழ்வளர்ச்சித் துறையும் கூட்டாக யுனிகோட் தமிழுக்கு முயற்சி எடுக்காதாலேயே நாம் சீரழிவைச் சந்திக்க நேர்கிறது. ஆனால் யுனிகோட் சம்பந்தமாகப் பிரச்சினைகளைச் சந்தித்தால் சென்ற திமுக ஆட்சி உடனடியாகப் பணிக் குழுவைப் உருவாக்கிப் பிரச்சிணைகளைச் சமாளிக்க முயன்றார்கள். ஆனால் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் எண்ணம் செம்மொழி மாநாட்டிற்கு கோடிக்கணக்கில் செலவழித்த அந்த ஆட்சிக்கு இருக்கவில்லை தமிழ் இணையப் பல்கலைக்கழகம்தான் தமிழக அரசின் தமிழ்க் கணினிப் பணிகளை செய்வதாக கூறுகின்றார்கள், அந்நிறுவனத்தின் தமிழ் கணினிப் பணி தொய்வு நிலையிலேயே உள்ளது. கல்விப் பணியை மட்டும் அந்நிறுவனத்துக்கு ஒதுக்கி தமிழக அரசின் தமிழ் கணினிப் பணிக்காக தகவல் தொழில்நுட்ப துறையும் தமிழ் வளர்ச்சித் துறையும் இணைந்து தனிவாரியமோ அல்லது அரசு நிறுவனமோ தொடங்கவேண்டும்.
யுனிகோட் கன்சார்ட்டியத்தில் தமிழக அரசு உறுப்பினராக வேண்டும் உறுப்பினராக இருந்தால் மட்டுமே பன்னாட்டு அறிஞர்களின் அறிவையும் நம் மொழிக்குப் பெறமுடியும். நம்மொழி சார்ந்த பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய முடியும்.
தமிழக அரச 9.75 இலட்சம் லேப்டாப்பளை தேர்தல் அறிக்கையின் படி அளிக்கவுள்ளது மாணவர்கள் பலன் பெறவுள்ள வரவேற்க வேண்டிய திட்டமாகும். இந்த லேப்டாப்களில் தமிழ் மென்பொருள்கள் அளிக்கப்படுகின்றன. லேப்டாப்பின் அடிப்படை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை தமிழில் அளிக்க இந்த அரசு முன்வரவேண்டும் லேப்டாப்பில் உள்ள கீ-க்கள் தமிழில் இருந்தால் குறைந்தபட்சம் 20 சதவீதம் தமிழக மாணவர்களாவது தமிழ் தட்டச்சு அறிவைப் பெறுவார்கள் லேப்டாப்பை டெண்டர் அடிப்படையி;ல விநியோகிக்கும் நிறுவனங்களைத் தமிழக அரசாணைப்படி விசைமுறைகளைப் பெற்ற விசைகளுடன் லேப்டாப்களை தயாரிக்க உத்தரவிடவேண்டும்.
ஆசிய அளவில் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் செல்போன்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த செல்போன்களும் தமிழ் விசைளோடுதான் விற்கவேண்டும் என அரசு உத்தரவிடவேண்டும்.
தமிழ் கணினிப் பயன்பாடுகள் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்வேண்டும் பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு தமிழ் கணினி சேவைகளையும், கலைச்சொற்களையும் ஊட்டினால் சமுதாய மாற்றத்தைக் காணலாம்.
அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் தமிழக அரசின் தமிழ் கணினி அரசாணையை தான் த்ததம் நாடுகளில் அமல்படுத்துகிறார்கள். சிறப்பான நலப்பணிகளைச் செய்துவரும் புதிய அரசு தமிழ்ப் பற்றுடன் கணினித் தமிழ்ப் பணிகளை முடுக்கிவிட வேண்டும், தமிழ் மொழி எழுத்துக்கள் ஆகியவற்றை கணினி பயன்பாட்டுக்கு ஒருங்குறி அட்டவணையில் அதாவது யுனிக்கோட் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வரின் தமிழ் கணினிப்பணி உலகத் தமிழ் மக்களிடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக