அரக்கோணத்திலிருந்து, நேற்று இரவு, காட்பாடி சென்ற பயணிகள் ரயில், சித்தேரி அருகே, சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது, சென்னை,
கடற்கரையிலிருந்து வேலூர் சென்ற புறநகர் மின்சார விரைவு ரயில், நின்று கொண்டிருந்த ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், ஐந்து ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. மூன்று பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. இதில், நின்று கொண்டிருந்த ரயிலின் கார்டும், மோதிய ரயிலின் டிரைவர் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் பலியானதாக அஞ்சப்படுகிறது. மேலும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து நடந்த இடத்திற்கு, சென்னையிலிருந்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ரயில் விபத்தால், சென்னை சென்ட்ரலிலிருந்து இரவு 9 மணிக்கு மேல் புறப்படும் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மீட்புப்பணிகள் பாதிப்பு: அரக்கோணம் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்ததால், மீட்புப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. விபத்து குறித்த விவரங்களுக்கு அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 044 25347771, 25357398 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம், என, தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
நிவாரணம் அறிவிப்பு : ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் நிவாரண உதவியாக அளிக்கப்பட உள்ளது.
இன்று அமைச்சர் வருகை : ரயில் விபத்து நடந்த சம்பவ இடத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி இன்று வர உள்ளார். டி்லலியில் அவர் சம்பவம் குறித்து கூறியதாவது, இந்த விபத்து, தம்மை மிகவும் பாதித்து விட்டது. விபத்திற்கான காரணம் குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீட்புப்பணி நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணை : சிக்னலை கவனிக்காமல் சென்றதால் தான் விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நன்றி. தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக