விருத்தாசலம்:விருத்தாசலத்தில் கடலூர் மாவட்ட ஜமா அத்துல் உலமா சபையின் தேர்தல் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் நூருல் அமீன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில ஜமா அத்துல் உலமா சபை தலைவர் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் மாவட்ட கவுரவத் தலைவராக நூருல் அமீன், மாவட்டத் தலைவராக சபியுல்லா மன்பயீ, பொதுச் செயலராக அப்துல் ரஜாக், பொருளாளராக சைபுதீன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.மதுரையில் நடந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட அப்துல் ரஹ்மான், அப்துல் காதர், முஹம்மது தாஹா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
நன்றி.தினமலர்
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக