அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
28 ஆகஸ்ட், 2012
அதிவிரைவாக நடக்கும் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் – அடுத்த வருடம் சென்னை போக்குவரத்தை எளிதாக்கும் !!!
சென்னையின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் அதி வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் 2013 ல் இயக்கத்தை துவங்கும் வகையல் பணிகள் யாவும் விரிவுபடுத்தப்பட்டு நடாத்தப்படுகின்றன.
கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலான மெட்ரோ ரயில் வழி தடத்தில், கோயம்பேடு, கோயம்பேடு புறநகர், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், கே.கே.நகர், சிட்கோ (கிண்டி), ஆலந்தூர் ஆகிய எட்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன.
26 ஆகஸ்ட், 2012
பிறந்த குழந்தை பேசியதாக வதந்தி தேங்காய் விலை திடீர் உயர்வு
காற்றை விட வேகமாக பரவும் சக்தி படைத்தது வதந்தி. இதனால் ஏற்படும் விளைவுகள் பல நேரங்களில் விபரீதங்களை ஏற்படுத்தி விடுவது உண்டு. இப்போது செல்போன் வந்த பிறகு வதந்தி பரவும் வேகம் அதிவேகமாக உள்ளது. சமீபகாலமாக பரவும் வதந்திகள் அகில இந்திய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அசாம் இனகலவரம் வதந்தி இந்தியாவையே புரட்டிப் போட் டது. இதையடுத்து வெளி மாநிலங்களில் வாழும் அசாம்வாசிகள் வேலை, உடமைகளை விட்டு விட்டு சொந்த மாநிலங்களுக்கு கிடைத்த ரயில்களில் ஓட்டம் பிடித்தனர். இந்த வதந்தி வரிசையில் கடந்த 2 டெல்லியில் புதுமை கொசுவை ஒழிக்க சிறப்பு ரயில்
தலைநகர் டெல்லியில் கொசுவை ஒழிப்பதற்காக மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு தோள் கொடுக்கும் வகையில், வடக்கு ரயில்வே நிர்வாகமும் கொசுவை ஒழிப்பதற்கான சிறப்பு ரயிலை உருவாக்கி உள்ளது. ரயில் பாதைகளின் அருகில் இருக்கும் நீர்நிலைகளில் வாழும் கொசுக்களை ஒழிப்பதற்கான பூச்சி மருந்து, இந்த ரயில் மூலம் நேற்று இருபுறமும் தெளிக்கப்பட்டது. தலைநகரில் உள்ள புதுடெல்லி, நிஜாமுதின், சப்தர்ஜங், குர்கான், டெல்லி கன்டோன்மென்ட், சாராய் ரோகிலா ஆகிய ரயில் நிலையங்களின் வழியாக நேற்று இந்த ரயில் இயக்கப்பட்டு, மருந்து தெளிக்கப்பட்டது. கொசுவை ஒழிக்க இயக்கப்படும் சிறப்பு ரயில் என்பதால், இதற்கு ‘கொசு கொல்லி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.அஸ்ஸாம் - மீண்டும் வன்முறை; 5 பேர் குத்திக்கொலை..
அஸ்ஸாம் மாநிலத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டதில் 5 பேர் குத்திக் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, கலவரத்தில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்தது.
அஸ்ஸாம் மாநிலத்தில் கோக்ரஜார், சிராங் உள்ளிட்ட சில மாவட்டங்களில் போடோ இன மக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டனர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். கலவர பகுதிகளில் மாநில போலீசாருடன் மத்திய படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். என்றாலும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அஸ்ஸாம் மாநிலத்தில் கோக்ரஜார், சிராங் உள்ளிட்ட சில மாவட்டங்களில் போடோ இன மக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டனர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். கலவர பகுதிகளில் மாநில போலீசாருடன் மத்திய படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். என்றாலும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
1992ல் "பாபரி மஸ்ஜித்" இடிக்கப்பட்டது!...... 2012 ல் "அக்பரி மஸ்ஜித்" இடிக்கப்படுகிறது!!
உயர்ஜாதி இந்துக்குக்களால் 1992ல் அயோத்தியில் "பாபரி பள்ளிவாசல்" இடிக்கப்பட்டதென்றால், 2012ல் டெல்லியில் உள்ள "அக்பரி பள்ளிவாசலை" இடித்து தரைமட்டமாக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மசூதி இடிக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு நிலை சீர்கெடும் என்று போலீஸ் எடுத்துக்கூறியும், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் சஞ்சய்கிஷன் மற்றும் ராஜீவ் "எதை பற்றியும் தங்களுக்கு கவலை இல்லை, எப்பாடு பட்டாகிலும் சட்டம் நிலை நாட்டப்படவேண்டும்" என்று
24 ஆகஸ்ட், 2012
ஓர் வபாத் செய்தி
துபையில் (patchi company )எங்கள் கன்பெனியில் பணிபுரிந்த காரைக்கால் அம்பகரத்தூர் (Ambagarathur )சேர்ந்த நண்பர் ரஹ்மத் அலி இன்று காலை (24.08.12 ) தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என. கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
22 ஆகஸ்ட், 2012
இவர்களின் விவாதங்கள் தேவையானதா ?
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய,அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்)...
'அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவபடுத்திய ''அல்லாஹ்''விற்கே புகழ் அனைத்தும்..
அன்பார்ந்த சகோதர்களே !!
அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)
இறைத்தூதர் ஸல்... அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் இன்றைய அல்லாஹ்வை நம்பிய சுன்னத் ஜமாஅத்காரர்களை விட மோசமான யூத-கிறிஸ்தவ-முஸ்ரிக்குக்களை சந்தித்தார்கள். அவர்களில் நாம் அறிந்தவரை ஈசா நபி அலை... அவர்கள் தொடர்பாக நஜ்ரான் பகுதி கிறிஸ்தவர்களிடம் ஒரு முபாஹலாவுக்கு தயாரானது நீங்கலாக, வேறு யாருடனும் விவாதம் என்றோ முபாஹலா என்றோ காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கவில்லை. அழகிய உபதேசங்கள் வாயிலாகவே அல்லாஹ்வின் மார்க்கத்தை வளர்த்தார்கள்.
20 ஆகஸ்ட், 2012
ஓர் வபாத் செய்தி
நமதூர் மாமரத்தார் ஜெகரியாவின் மகன் சலாஹுத்தீன் அவர்கள் இன்று (20.08.12 )கத்தாரில் தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள்,தமுமுக கழக சகோதர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என. கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
19 ஆகஸ்ட், 2012
கொள்ளுமேடு தமுமுகவின் 2012 பிஃத்ரா விநியோகம்
தமுமுக &அல் ஹைராத் சமுக சேவை மையத்தின் சார்பில் இந்த ஆண்டும் பிஃத்ரா என்னும் தர்ம்மம் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலான குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது . மேலும் இந்த ஆண்டு சிறப்பு அம்சங்களாக காய்கறிகள் சேர்த்து வழங்கப்பட்டதை மக்கள் மிகவும் சந்தோசம் வரவேற்றனர் . இதுவரை யாரும் செய்திடாத வகையில் தமுமுக சிறப்பாக விநியோகம் செய்துயுள்ளதை தமுமுகவிற்கு நிகர் தமுமுகதான் என்று மக்கள் பாராட்டினர் .
எல்லா புகழும் இறைவனுக்கே !
18 ஆகஸ்ட், 2012
இன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்!
சமுதாய சொந்தங்களுக்கு ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள்.. இந்நன்னாளில் இறைவா உலக மக்கள் அணைவரையும் மனதார மகிழ்வுர வைப்பாயாக. ஏழை பனக்காரன் என்ற வித்தியாசத்தை துடைத்து, இயக்க வேறுபாடுகளை மறந்து சகோதர பாசத்தோடு ஒருவரைக்கொருவர் வாழ்த்தி மகிழ்வோம். ஏழை மக்களுக்கு கொடுத்து உதவுவோம் அவர்களின் மகிழ்விலும் பங்கெடுப்போம். நம்மை படைத்த இறைவன் உலக மக்கள் அணைவருக்கும் அமைதியையும், மன மகிழ்வையும் கொடுத்து வேறுபாடுகள் இல்லா மனிதர்களாக வாழ வழிவகுப்பானாக...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


.jpg)

