#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

30 நவம்பர், 2010

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா


அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு தடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.

நமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.




ஒகே ரெடி ஸ்டார்ட்.

முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்
https://passport. gov.in/pms/ Information. jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்
Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து

Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா
என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும்
From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்

உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்

File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

[] கண்டிப்பாக எழுதவும்
[] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்


அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
  • ரேசன் கார்டு
  • குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • வாக்காளர் அடையாள அட்டை
  • வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
  • துணைவின் பாஸ்போர்ட்


பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_
  • 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
  • பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
  • கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதல்கள்
  • 10வது மேல் படித்திருந்தால் ECRமுத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.

  • உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.

  • பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.



அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.

அவ்வளவுதான் முடிந்தது
மேலும் தகவல்களுக்கு

மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.

சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.
.
by Shaik Dhawood


அயோத்தி தீர்ப்பும் மதசார்பின்மையும் – கருத்தரங்கம்-புகைப்படங்கள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


தமுமுக தென் சென்னை சார்பில் நவம்பர் 25 அன்று சென்னையில் “அயோத்தி தீர்ப்பும் மதசார்பின்மையும் – கருத்தரங்கம்” சென்னை தியாகராயர் நகரில் உள்ள பி.டி.தியாகராயர் அரங்கில் (கண்ணதாசன் சிலை அருகில்) 25.11.2010 வியாழனன்று, மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.

தமுமுக தலைவர் பேராசிரியர் எம்..ஹெச்.ஜவாஹிருல்லாஹ் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார். தமுமுக தென் சென்னை மாவட்டத் தலைவர் ஜெ.சீனி முகமது வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கத்தை பேரா.ஜெ.ஹாஜாகனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கோ.முத்துக்கிருஷ்ணன், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத்தின் நிர்வாகி கென்னடி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இறுதியாக தமுமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜனாப் முகமது அபுபக்கர் (எ) கோரி நன்றியுரை கூறினார்.

book-relese 1.jpg

book2.jpg

book4.jpg

book3.jpg

book6.jpg

book7.jpg

book13.jpg

book10.jpg

book5.jpg

நன்றி. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,
துபாய்.

துபைக்கு விசிட் விசாவில் வருவோர் கவனத்திற்கு..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

தாங்கள் தங்களது உறவினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ துபை விசிட் விசா எடுத்து அனுப்பினால் அவர்கள் எந்த விமானத்தில் துபாய் வர இருக்கின்றார்களோ அந்த விமான அலுவலகத்தின் துபை கிளையில் விசிட் விசாவின் நகலில் பயணசீட்டின் (E-Ticket) நம்பரோ அல்லது பயணசீட்டின் பதிவு (Booking Reference/PNR) நம்பரையோ அதில் எழுதி பயண நேரத்திற்க்கு 24 மணி நேரம் முன்பாக தொலைநகல் அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ சென்று கொடுத்துவிட வேண்டும்.

நாம் விசா நகலை கொடுத்த பிறகு விமான அலுவலகத்தின் பணியாளர்கள் விசாவின் அனைத்து விபரங்களையும் நாம் குறிப்பிட்டுள்ள பயணசீட்டின் (E-Ticket) நம்பர் அல்லது பயணசீட்டின் பதிவு (Booking Reference/PNR) நம்பரில் கணிணியின் வாயிலாக பதிவு செய்து விடுவார்கள். அவ்வாறு விசாவின் விபரங்கள் கணிணியில் பதிவு செய்யபட்டிருந்தால் மட்டுமே இங்கு வரவிருப்பவர்களுக்கு ஊரில் உள்ள விமான நிலையத்தில் இருக்கை அட்டை (Boarding Pass) வழங்குவார்கள். இல்லையென்றால் திருப்பி அனுப்பிவிடுவார்கள்.

இந்த தகவலை தாங்களும் நினைவில் வைத்துகொண்டு தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் தெரியபடுத்தவும்.

வஸ்ஸாலம்
என்றும் அன்புடன்,

தகவல் : பதுருதீன் முகம்மது காசீம், துபை.


நன்றி.INTJ

28 நவம்பர், 2010

வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையில்வெள்ளப் பெருக்கெடுத்தது






வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையில் சனிக்கிழமை காலை 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளப் பெருக்கெடுத்தது.இந்நிலையில் வழக்கமாக சனிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறும் இடத்திலும் வெள்ள நீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள் சாலையின் இருபுறமும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்தனர்.








வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையில் அதிகளவு நீர் திறந்துவிடப்பட்டதால் காட்டுமன்னார்கோவில் அருகே 25 கிராமங்களை நீர் சூழ்ந்தது. 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.வீராணம் ஏரிக்கு அதிகளவு நீர்வரத்து: பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் பெய்து வரும் மழை நீர் சுமார் 6 ஆயிரம் கன அடி அளவுக்கு செங்கால்ஓடை, கருவாட்டுஓடை, பாபாக்குடி ஓடை உள்ளிட்ட காட்டாறுகள் மூலம் வீராணம் ஏரிக்கு வருகிறது.அதிகளவு நீர் வருவதால் வீராணம் ஏரியிலிருந்து சனிக்கிழமை அதிகாலை வெள்ளியங்கால் ஓடையில் 5 ஆயிரம் கனஅடி நீரும், சேத்தியாத்தோப்பு விஎன்எஸ் அணைக்கட்டுக்கு ஆயிரம் கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 74 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரியில் 45.5 அடி நீர் தேக்கிவைக்கப்பட்டு உபரியாக வரும் மழைநீர் 6 ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதனால் காட்டுமன்னார்கோவில் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இவையல்லாமல் காட்டாறுகள் மூலம் வரும் மழைநீர் மணவாய்க்கால் மற்றும் வெள்ளியங்கால்ஓடையில் சுமார் 12 ஆயிரம் கனஅடி அளவுக்கு கலக்கிறது. இதனால் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருநாரையூர், சிறகிழந்தநல்லூர், தொரக்குழி, எடையார், நந்திமங்கலம், பிள்ளையார்தங்கல், அதங்குடி உள்ளிட்ட கிராமங்களை நீர் சூழ்ந்தது. திருநாரையூர் செல்லும் சாலையை கடந்து வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் படகுமூலம் ஊருக்குள் செல்கின்றனர்.திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு: காட்டுமன்னார்கோவில் அருகே திருச்சி செல்லும் சாலையில் வெண்ணங்குழி ஓடை உடைப்பெடுத்ததால் வீராணந்தபுரம் எனுமிடத்தில் சாலை துண்டித்தது. இதனால் காட்டுமன்னார்கோவிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று நாரைக்கால் ஏரி உடைப்பெடுத்ததால் காட்டுமன்னார்கோவிலிருந்து பாப்பாக்குடி வழியாக திருச்சி செல்லும் சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 25 கிராமங்களில் நீர் சூழ்ந்தது: அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழைநீர் பாபாக்குடிஓடை, வெண்ணங்குழிஓடை வழியாக வடவாற்றில் கலப்பதால் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பழஞ்சநல்லூர், கருணாகரநல்லூர், வெங்கடேசபுரம், மடப்புரம், மணிக்குழி, அறந்தாங்கி, சித்தமல்லி, வா.புத்தூர், மணவெளி, அகரபுத்தூர், கண்டமங்கலம், வீராணந்தபுரம், வில்வகுளம், சப்பாணிக்கோட்டை உள்ளிட்ட சுமார் 25 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து தீவு போல் காட்சியளிக்கிறது.மேலும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா சாகுபடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதில் 5 ஆயிரம் ஏக்கரிலான நெற்பயிர் பூ பருவத்தில் மூழ்கியுள்ளதால் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேலும் நிலங்களில் உடனடியாக தண்ணீர் வடியாமல் 3 நாளுக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கியிருந்தால் மீதமுள்ள பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்படும் என நாரைக்கால் ஏரிப்பாசன விவசாய சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்தார்.


நன்றி.நஸ்ருல்லா,அஹ்மத் .

26 நவம்பர், 2010

நிரம்பி வழிகிறது வீராணம் ஏரி : 25 கிராமங்கள் மூழ்கும் அபாயம்

சென்னை: மழையால் வீராணம் எரி நிரம்பி வழிகிறது. இதனால் வீராணத்தில் இருந்து வெளியேறும் நீரால் 25 கிராமங்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 6000 கன நீர் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தொடர் மழையால் நெய்வேலி நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் நிலக்கரி போதிய கையிருப்பு உள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்படாது என்.எல்.சி. தெரிவித்துள்ளது.

நன்றி.தினமலர்

25 நவம்பர், 2010

தமுமுக பொதுச் செயலாளரின் அக்கா மகன் உமர் ஷரீப் மரணம். நாளை காலை சார்ஜாவில் நல்லடக்கம்



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி அவர்களின் அக்கா மகன் உமர் ஷரீப் நேற்று காலை (24-11-2010) ஷார்ஜாவில் நடைபெற்ற ஒரு விபத்தில் காலமானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அனனாருக்கு வயது 29. தொண்டியைச் சேர்ந்த அவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளார்கள்.

சகோதரர் - உமர் சரீஃப் அவர்களின் உடல் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளி கிழமை 26-11-2010 காலை சரியாக 9மணியலவில் அன்னாரின் ஜனாஸா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்யப்படும்.


தமுமுக வின் தொடக்க காலம் முதல் சமுதாய பணிகளில் சகோதரர் உமர் ஷரீப் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் தற்போது முமுக துபை மண்டல நிர்வாகியாகவும் பணியாற்றி வந்தார்.

தமுமுகவின் தலைமை நிர்வாக குழு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இம்மரணச் செய்தி வந்ததால் நிர்வாக குழு ஒத்தி வைக்கப்பட்டது. தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் உட்பட அனைத்து நிர்வாகிகளும் பொதுச் செயலாளருக்கு நேரில் ஆறுதல் சொ்ன்னார்கள்.

சகோ.அவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் மற்றும் உறவினர் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்யுங்கள்.

அவரது ஜனாஸா நானை காவைல 9 மணிக்கு ஷார்ஜாவில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


இடம் :-
மஸ்ஜிதுல் ஸஹாபா
அல் காசிமியா மருத்துவமணை அருகில்
ஷார்ஜா

மேலும் விபரங்களுக்கு : நஜீர் - 050 1736892, ஹாரிஸ் - 055 4128182.


நன்றி.தமுமுக.காம்

23 நவம்பர், 2010

அபுதாபியில் 24 மணி நேர இந்திய தொழிலாளர்கள் உதவி மையம் திறப்பு

அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் வாழும் இந்திய தொழிலாளர்களுக்கு 24 மணி நேர உதவி மையத்தினை இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தொடங்கி வைத்தார். 5 நாள் அரசுமுறைப்பயணமாக ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு சென்றிருந்த இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், இந்திய தொழிலாளர்கள் 24 மணி நேர உதவி ‌மையம் ஓன்றை திறந்து வைத்தார்‌. அங்கு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: இங்குபணியாற்றும் இந்திய தொழிலாளர்களுக்கு இந்த மையத்தினை அர்ப்பணிக்கிறேன். இவர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனே தங்க‌ளது குறைகளை நிவர்த்தி செய்ய குழு ஒன்று இந்த உதவிமையத்தில் இயங்கி வருகிறது. இந்த குழு தகுந்த நேரத்தில் இந்திய தொழிலாளர்களுக்கு உதவிடும் என்றார். இங்கு 1.75 மில்லியன் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு 24 மணி நேரமும் உதவிட இந்திய வெளிநாட்டு வாழ் விவகாரத்துறை அமைச்சகத்தின் ‌முயற்சியால் இந்த ‌மையம் தொடங்கப்பட்டுள்ளது.


நன்றி.தினமலர்

30 ஆயிரம் குழந்தைகளுக்கு மருத்துவசேவை அளிக்க யு.ஏ.இ. முடிவு

அபுதாபி: உலகம் முழுவதும் 9 நாடுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் ஏழை குழந்தைகளுக்கு சுகாதார தி்ட்டம் ஒன்றை அறக்கட்டளை மூலம் ஐக்கிய அரபு ‌எமிரேட் நாடு வழங்கியுள்ளது. மொராக்‌‌கோ, ஹெய்தி, லெபனான், எகிப்து, போஸினியா, சிரியா, ஈரிடிரியா, இந்தோ‌னேஷியா என உலகம் முழுவதிலும் உள்ள 9 நாடுகளில் போதிய மருத்துவ வசதி, சுகாதார வசதியின்றி பலமில்லியன் ஏழை குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு சர்வதேச மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ வசதி அளிக்கும் நோக்குடன் ஐக்கிய அரபு எமிரேட் நாடு அறக்கட்ட‌‌ளை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறக்கட்டளையின் நோக்கம் மூலம் 30 ஆயிரம் குழுந்தைகளுக்கு சேவை செய்ய நடமாடும் மருத்துவமனைகள் அமைப்பது, இவர்களுக்கு மருந்து பொருட்களை தேவையான அளவு விநியோகிப்பது, அவசரகால மருத்துவ சேவை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவுள்ளது. இதற்காக மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர்களையும் நியமிக்கவுள்ளது.

நன்றி.தினமலர்

20 நவம்பர், 2010

மனித சுக வாழ்வுக்கு.. தவிர்க்க கூடாத பத்து உணவுகள்:

நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து உணவுகள்.

வெள்ளைப் பூண்டு:

பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

வெங்காயம்:

வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

காரட்:

நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.

ஆரஞ்சு :

வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.

பருப்பு வகைகள் :

பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

கோதுமை ரொட்டி :

நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இறால் மீன் மற்றும் நண்டு :

அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

தேநீர் :

தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.

பாலாடைக்கட்டி :

சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.

முட்டைக்கோஸ் :

குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.


நன்றி.செய்தி.காம்

பேஸ்புக்கில் எப்போதுமே போடக்கூடாத பத்து விடயங்கள்:

பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட.இதில் சில படங்களையோ, தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.

'data mining' எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள் உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். இது குற்றவாளிகளுக்குக் கிடைத்துள்ள தங்கத் துகிள் போன்றது. பேஸ்புக்கில் எப்போதுமே போடக்கூடாத பத்து விடயங்கள் பற்றி டேவிட்வைட்லெக் குறிப்பிட்டுள்ளார்.

பிறந்த திகதியும் இடமும் :- இது உங்கள் அடையாளங்கள் திருடப்படக்கூடிய மிக ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். உங்களது கடவுச் சொல்லை மீளமைக்கும் இணையத்தளங்களில் இது பொதுவாகக் கேட்கப்படும் பாதுகாப்புக் கேள்வி. ஒரு குற்றவாளி இதை மீளமைத்தால் அவர் உங்கள் வங்கிக் கணக்கில் பிரவேசிப்பது உட்பட எதைவேண்டுமானாலும் செய்யலாம்.

தாயின் கன்னிப் பெயர் :- பல இணையத்தளங்கள் உங்களது தாயின் கன்னிப் பெயரை உங்களுக்கு அங்கீகாரம் வழங்கப் பயன்படுத்துகின்றன. நீங்கள் கற்ற பாடசாலையின் பெயரையும் அவை பொதுவாக பாதுகாப்புக் கேள்வியாகப் கேட்டு பயன்படுத்துகின்றன. எனவே இதையும் பேஸ்புக்கில் போடாதீர்கள்.

விலாசம் :- நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்புகின்றீர்களா? இது அடையாள மோசடியில் மீண்டும் உங்களைத் தள்ளிவிடும். மோசடியாளர்களும் மற்றவர்களைப் பின் தொடர்பவர்களும் இவற்றைப் பாவிக்க இடமுண்டு.

விடுமுறைகள் :- உங்களது விடுமுறைத் திட்ங்களை நீங்கள் பேஸ்புக்கில் வெளியிடுவது, உங்கள் வீட்டைக் கொள்ளையிட வருமாறு நீங்களே கொள்ளையர்களுக்கு அழைப்பு விடுப்பது போன்றது.

வீட்டிலிருந்து புறப்படும் குறுகிய பயணங்கள் :- இதுவும் நீங்கள் பின் தொடரப்படவும் கொள்ளையிடப்படவும் கூடிய ஆபத்துக்களை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் பொருள் கொள்வனவுக்காகச் செல்லும் இடங்கள், நண்பர்களோடு உணவருந்தச் செல்லும் இடங்கள். அதைப்பற்றிய தினம் நேரம் போன்ற விவரங்கள். இது உங்களைப் பின்தொடருபவருக்கு நீங்களே அழைப்பு விடுப்பது போன்றதாகும். பேஸ்புக்கின் மூலம் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து அச்சுறுத்தியது சம்பந்தமாக ஒரு வழக்கும் அண்மையில் பதிவாகியுள்ளது.

முறையற்ற படங்கள் :- பேஸ்புக்கை பலரும் பார்ப்பதால் இத்தகையப் படங்களைப் போடுவது மோசமானது. அது உங்களைப்பறறிய தவறான ஒரு எண்ணத்தை ஏறபடுத்திவிடும். அதே போல் உங்கள் வீட்டின் மாதிரித் தோற்றத்தைக் காட்டக்கூடிய மற்றும் உங்களிடமிருக்கும் பெறுமதியான பொருள்களைக் காட்டக்கூடிய படங்களையும் போட வேண்டாம்.

ஒப்புதல்கள் :- இதுவும் உங்களை வேலையிழக்கச் செய்து உங்கள் எதிர்காலத்தையே பாதித்துவிடக்கூடும்.நீங்கள் மற்றவர்களுடன் வைத்திருக்கின்ற உறவு மற்றும் வெட்கக்கேடான செயல்களை பேஸ்புக்கில் மூலம் ஒத்துக் கொள்வது ஆபத்தானது. விளம்பரங்கள்:- நீங்கள் பேஸ்புக்கில் போடுகின்ற எல்லாமே உங்களால் அழிக்கப்பட்ட பின்னரும் கூட அதில் இருக்கும்.

தொலைபேசி இலக்கம் :- உங்களோடு அவசியம் தொடர்புகொள்ள வேண்டிய நிலைமைகள் தவிர இதைச் செய்ய வேண்டாம். இது 'data mining' திட்டத்தால் பெறப்பட்டு விளம்பரதாரர்களுக்கு வழங்கப்படலாம். மேலும் "Lost my phone" அல்லது "Need Ur number".போன்ற பேஸ்புக் பக்கங்களையும் பாவிக்க வேண்டாம்.

பிள்ளைகளின் பெயர்கள் :- இதுவும் அடையாளத்திருடர்களால் அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களால் பாவிக்கப்படக்கூடும். ஒரு பிள்ளையின் விவரங்களைத் திருடுவது மிகவும் இலேசானது.

பொதுவான முழு அளவிலான விவரங்களை வெளியிட வேண்டாம் :- பேஸ்புக்கில் இத்தகைய விவரங்கள் இருப்பதானது எந்த ஒரு தேடுதல் இயந்திரத்தினாலும் பாவிக்கப்படக்கூடியது. பெயரை மட்டும் வழங்கிவிட்டு ஏனைய எல்லாவற்றையும் மறைத்து வைத்திருப்பது மேலானது.

நன்றி.செய்தி.காம்

ஆயிரம் குழந்தைகளிடம் ஆய்வு..! முறையாகத் தூங்கினால் குழந்தைகள் படுசுட்டிகளாக இருப்பார்கள் என ஆய்வில் தகவல்


தினசரி முறையாகத் தூங்கும் பழக்கம் உடைய குழந்தைகள் படுசுட்டிகளாக விளங்குகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ இன்டர்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் 8 ஆயிரம் குழந்தைகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வுக்கு தலைமை வகித்த டாக்டர் எரிகா கெய்லர் கூறியதாவது:​ ​

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட குழந்தைகள் 9 மாத குழந்தைகளாக இருந்தபோதிலிருந்து எவ்வாறு தூங்குகின்றன என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

அதே குழந்தைகளுக்கு 4 வயதான பின்பும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

தினசரி இரவு சீக்கிரமே தூங்கச் செல்வதுடன் 11 மணி நேரம் தூங்கும் குழந்தைகள்,​​ சொல்வதை விரைவாகப் புரிந்து கொள்ளுதல்,​​ மொழிகளை எளிதாக கற்றுக் கொள்ளுதல்,​​ கணிதத்தில் புலியாக விளங்குதல் போன்றவற்றில் படுசுட்டிகளாக விளங்குகின்றன.

குறித்த நேரத்தில் தூங்கச் செல்லாததுடன்,​​ 11 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் குழந்தைகள் அவ்வளவு சுட்டிகளாக விளங்காததும் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே,​​ தினசரி இரவு சீக்கிரமே குழந்தைகளைத் தூங்கச் செய்வதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அளவு தூக்கத்தை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தூங்குவதற்கு முன் குழந்தைகளுடன் உரையாடுவது,​​ கதைகள் சொல்வது ஆகியவை பயனுள்ளதாக அமையும் என்றார். குழந்தைகளை சீக்கிரமே தூங்கச் செய்ய வேண்டும் என்பதையே இதற்கு முந்தைய ஆய்வுகளும் வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி.செய்தி.காம்

வீராணத்தில் வனத்துறை மரங்கள் : பறக்கும்படை அதிகாரி திடீர் ஆய்வு

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரிக்கரையில் வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் மரங்களை பறக்கும் படை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் கரை மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால், பாசன வாய்க்கால், வடிகால் கரை பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் படகை தேக்கு திட்டத்தின் கீழ் தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட இத்திட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.


இந்நிலையில் பொதுப்பணித் துறை சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள் நிலைமை குறித்து நேற்று வனத்துறை பறக்கும் படையைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட உதவி வன பாதுகாவலர் வெங்கடசாமி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. வீராணம் மேல் கரை பகுதி, செங்கால் ஓடை பகுதி, இ.பி., வாய்க்கால், புடையூர், மணவெளி, கருணாகரநல்லூர், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். சிதம்பரம் வனச்சரக விஜயன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.


நன்றி.தினமலர்

வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றம்

காட்டுமன்னார்கோவில் : தொடர் மழையால் வீராணத்திற்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் 425 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் ஏரிக்கு கீழணையில் பெறப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இருந்தும் அரியலூர் மாவட்ட பகுதியில் பெய்துவரும் மழையால் செங்கால் ஓடை வழியாக 200 கன அடியும் மற்ற ஓடைகள் வழியாக 200 கன அடி என மொத்தம் 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி ஏரியின் கொள்ளளவு 978.20 மில்லியன் கன அடி இருப்பு வைத்துக்கொண்டு உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. தற்போது பூதங்குடி பாசன வாய்க்கால் மூலம் 50 கன அடி, சென்னை குடிநீருக்கு 75 கன அடி அனுப்புவது போக வெள்ளாற்று வடிகால் மூலம் 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


நன்றி.தினமலர்

மாலேகான் குண்டு வெடிப்புக் குற்றவாளி சுவாமி ஆசிமானந்த் கைது!

மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படும் சுவாமி ஆசிமானந்தை சிபிஐ வெள்ளிக் கிழமையன்று கைது செய்தது.

சுவாமி ஆசிமானந்த் கடந்த இரண்டு நாள்களாக சிபிஐ மற்றும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினர் ஆகியோரின் தேடுதல் வேட்டையில் சிக்காமல் தப்பித்து வந்தார்.

குஜராத் மாநிலம் டாங்ஸ் பகுதியில் வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற பெயரில் ஆசிமானந்த் ஆசிரமம் நடத்தி வருகிறார். நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கும் இந்த ஆசிரமத்தில் வைத்தே திட்டம் தீட்டப்பட்டது என காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தப் பகுதியில் பழங்குடியினருக்காக பள்ளி ஒன்றையும் ஆசிமானந்த் நடத்தி வருகிறார். கிறிஸ்தவ ஆதிவாசிகளை இந்து மதத்திற்கு மாற்றும் பணியையும் இவர் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

காவித் தீவிரவாத நெட்வொர்க்கின் மூளையாகக் கருதப்படும் சுனில் ஜோஷியுடன் ஆசிமானந்துக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ முன்னாள் அதிகாரி புரோஹித் மற்றும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா ஆகியோருடனும் ஆசிமானந்த்துக்கு தொடர்பு உள்ளதாகக் காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நன்றி.இநேரம்.காம்

16 நவம்பர், 2010

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்திய மாநில தலைவர் தியாக திருநாள் வாழ்த்துக்கள்

jinna

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் தியாக திருநாள் வாழ்த்துக்கள் தியாகத் திருநாள கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்களை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் .

இத்திருநாள் உணர்த்தும் மகத்தான செய்தியான உண்மைக்காக நீதிக்காக சத்தியத்திற்காக சுதந்திரத்திற்க்காக எத்தகைய தியாகத்தையும் அகில உலகத்தையும் படைத்து இரட்சித்து பாதுகாத்து வரும் அல்லாஹ் வின் திருப்பொருத்தத்தை வேண்டி முஸ்லிம்கள் செய்ய முன் வர வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி அனைத்து மக்களின் நல்வாழ்விற்க்காக பாடுபட இந்நாளில் உறுதி ஏற்போம் .

அனைவருக்கும் பாப்புலர் பிரண்ட் டின் சார்பாக இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் இப்படிக்கு மு . முஹம்மது அலி ஜின்னா மாநில தலைவர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

நன்றி.பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா.காம்


ஊழல் மனப்பான்மை ஒழியட்டும், தியாக மனப்பான்மை வளரட்டும் தமுமுக தலைவர் வாழ்த்து

உலகெங்கும் தியாகத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் தமுமுக சார்பாக இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறையன்பிற்காக எதையும் தியாகம் செய்யும் மனப்பான்மை எல்லோரும் பெற வேண்டும் என்பது தான் இருபெரும் இஸ்லாமியத் திருநாற்களின் ஒன்றானத் தியாகத்திருநாளின் நோக்கமாகும்.

இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்கள், ஏக இறைவன் வழங்கிய வாழ்க்கை நெறியை பூமியில் போதித்தார்கள். அதற்காக அளவிலாத் துன்பங்களையும், சோதனைகளையும் சகித்தார்கள். தனது பேரன்பிற்குரிய மகன் இஸ்மாயில் (அலை) அவர்களையும் தியாகம் செய்ய முன்வந்தார்கள்.

இவ்வுலகின் மீதும், செல்வ சுகங்களின் மீதும் மனிதமனம் கொள்கின்ற வரம்பு கடந்தப் பேராசையின் விளைவாகவே குழப்பங்களும், போர்களும், நிம்மதியின்மையும் ஏற்படுகிறது. பொது வாழ்வில் இலட்சோபலட்சம் கோடிகளில் ஊழல் பெருகுவதற்கும் இத்தகைய மனப்பான்மையேக் காரணமாக உள்ளது. தனியுடமை, பொது உடமை ஆகியக் கொள்கைப் போராட்டங்களினிடையே இஸ்லாம் இறையுடமைக் கோட்பாட்டை வலியுறுத்துகிறது.

நம்மிடம் உள்ள செல்வங்கள் அனைத்துக்கும் நாமே முழு உரிமையாளர்கள் அல்ல, உண்மையில் நாம் அதன் அறங்காவலர்களே... எனவே செல்வத்தின் மீது வரம்பு கடந்த பற்று கொள்ளாமல் அவற்றை அறவழியில் செலவிட வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இருபெரும் இஸ்லாமிய பெருநாள்களான ஈகைப் பெருநாளும், தியாகத் திருநாளும் இப்பண்புகளையே நினைவூட்டுகின்றன.

தியாகத் திருநாள் அன்று சுமார் 25 லட்சம் முஸ்லிம்கள் பல்வேறு தேசங்களிலிருந்தும் வந்து மக்காவில் கூடுகின்றனர். இன, மொழி, நிற வெறிகளை மிதித்துப் புதைத்து விட்டு சர்வதேச சகோதரத்துவத்தை அங்கே பறை சாற்றுகின்றனர். வசதியுள்ள முஸ்லிம்கள் குர்பானி இறைச்சியை ஏழை எளியோருக்கு பங்கிட்டு அளித்து இன்புறுகின்றனர்.

கூடி மகிழ்வதும், கொடுத்து மகிழ்வதும் படைத்த இறைவனை வணங்கி மகிழ்வதும், இந்த நன்னாளின் சிறப்புகளாகும்.

தனிவாழ்விலும், பொது வாழ்விலும், ஊழல் மனப்பான்மை ஒழிந்து தியாக மனப்பான்மை பெருகவும், சகோதரத்துவம் வளரவும் இத் தியாகத் திருநாளில் உறுதிகொள்வோம்.

நன்றி.தமுமுக.காம்

ஓர் மரண அறிவிப்பு

நமதூர் சின்னத்தெருவை சேர்ந்த மைனர் தாஜுத்தினுடைய மனைவி ஹபிபுன்னிஷா அவர்கள் இன்று[16.11.10) காலை மரணம் அடைந்து விட்டார்கள்.இன்ன லில்லாஹி வ இன்ன இலிஹி ராஜுவுன் அன்னாரின் மாப்ராத்திர்க்காக துவா செய்வோமாக . மேலும் அன்னாரின் குடும்பத்தார்களுக்கு வல்ல இறைவன் மன அமைதி தந்து அருள்வானாக

15 நவம்பர், 2010

ஆ.ராசாவின் கடைசி நேர விலகல் காலதாமதமான முடிவு கடும் நடவடிக்கை தேவை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:-

ஒட்டு மொத்த இந்திய தேசத்தையும் ஆ.ராசாவின் ஊழல் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டில் நாட்டிற்கு 1.77 இலட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய மிகப் பெரிய ஊழலாக அறியப்படுகிறது. ஆ.ராசாவின் ஊழலால் அரசிற்கு பேரிழப்பு ஏற்பட்டிருப்பதை மத்திய தலைமை கணக்காயம் (CAG) தனது அறிக்கையில் உறுதிபடுத்தியிருக்கிறது அனைத்து எதிர் கட்சிகளும் ஆ.ராசா பதவி விலக வேண்டுமென வலியுறுத்திய போதும் ஒட்டுமொத்த ஊடகங்களும் இந்த ஊழலை அம்பலபடுத்திய பிறகும் கடைசிவரை ஆ.ராசா பதவிலேயே ஒட்டிக் கொண்டிருக்க அனைத்து விதமான முயற்சிகளையும், திமுக எடுத்தது வெட்கத்திற்குரியது.



அதிமுக பொதுச் செயலாளா; ஜெயலலிதா எடுத்த அதிரடி முடிவும் Times Now ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதை அறிவித்ததும் ராசாவை பதவி விலக செய்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

பதவி விலகலோடு பிரச்சனையை முடித்து விடாமல் நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பிற்கு பரிகாரம் காணும் வகையில் மத்திய அரசு விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும் மீண்டும் தொலைதொடா;புத் துறையை திமுகவிடம் வழங்ககூடாது. 2ஜி அலைகற்றை ஒதுக்கீடு ஊழலை சி.பி.ஐ. விரைந்து விசாhpக்க வேண்டும்

2ஜி அலைகற்றை ஒதுக்கீடு வெளிப்படையான ஏல முறையை வேண்டுமென்றே தவிர்த்து முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற முறையை பின்பற்றி நாட்டிற்கு பேரழிப்பை ஏற்படுத்தியுள்ளவர்களை தண்டிக்காமல் விடுவிப்பது ஊழழுக்கு ஊக்கமளிக்கும் தேச விரோத செயலாக மக்களால் பாh;க்கப்படும் என மத்திய அரசு உணரவேண்டும்.

இந்த ஊழல் விசாரணை குறித்து மத்திய அரசு மற்றும் சிபிஐ வழக்குறைஞ்சர்கள் கூட்டத்தில் ஆ.ராசாவின் வழக்குறைஞ்சரும் கலந்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது இது விசாரணையின் நேர்மை மீதும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

இத்தகைய தவறுகள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது 2ஜி அலைகற்றை பெற்ற நிறுவனங்கள் அவற்றின் பிண்ணனி மேலும் இதில் லாபம் அடைந்தவர்கள் பற்றிய விவரமான அறிக்கை நாட்டு மக்களுக்கு சமர்பிக்கப்பட வேண்டுமென்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் வலியுறுத்துகிறது.

(எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்)

நன்றி:தமுமுக.காம்

14 நவம்பர், 2010

தியாகத் திருநாள் வாழ்த்து

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அஸ்ஸலாமு அலைக்கும்,

சமுதாய சொந்தங்கள் அனைவருக்கும் அல் ஹைராத் சமுக சேவை மையத்தின் சார்பாக இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்களை மகிழ்வுடன் உளப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறோம்


"(...ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைச் சேமித்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் சாலச்சிறந்தது இறையச்சமாகும். எனவே, நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள்" (அல்குர்ஆன் 2:197).

13 நவம்பர், 2010

அறிந்ததும் அறியாததும்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...



இஸ்லாத்தின் அடிப்படையான சில விஷயங்கள், உலக அதிசயங்கள் சில இங்கே சிறார்களின் அறிதலுக்காக வேண்டி பதிக்கப்படுகிறது.


1. திருக்குரானில் குறிப்பிடப்பட்டுள்ள நபிமார்கள் யார்?

ஆதம், இத்ரிஸ், நூஹ், ஹூத், ஸாலிஹ், இபுராஹிம், லூத், இஸ்மாயில், இஷ்ஹாக், யாஹிப், யூஸுப், அய்யூப், சுஹைப், மூஸா, ஹாரூண், யூனுஸ், தாவூத், சுலைமான், இல்யாஸ், அல்யஸவு, ஜக்கரியா, யஹ்யா, ஈஸா, முஹம்மத்(ஸல்), துல்கிப்லு ஆகியோர்.

2. இஸ்லாத்தின் வழிகாட்டிகள் எவை?
இஸ்லாத்தின் வழிகாட்டிகள் இரண்டு.

ஒன்று திருக்குர் ஆன். முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளிய திருமறைதான் திருக்குர்ஆன்.

இஸ்லாத்தின் இரண்டாவது வழிகாட்டி, ஹதீஸ். நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், தம்முன் நடந்தவற்றை தடுக்காமல் அங்கீகரித்தது அனைத்துமே 'ஹதீஸ்' என்று அழைக்கப்படுகின்றது. இறைவனின் வழிகாட்டுதலின் பெயரிலேயே ஹதீஸ் அமைந்துள்ளதால், திருக்குர்ஆனோடு, ஹதீஸ்களையும் பின்பற்றி நடப்பது முஸ்லிம்களின் கடமையாகும்.

3. நபிகள் நாயகம் பெயருடன் (ஸல்) என்று இணைத்து எழுதுவது ஏன் தெரியுமா?

நபியவர்களின் பெயரை எழுதும்போது "ஸல்" என்று சேர்த்து எழுதுவது வழக்கம். "ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்பதன் சுருக்கமே 'ஸல்' என்பது. "நாயகம் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகுக" என்பது அதன் பொருள்.

4. நாயகம் தந்தத் திருமணப்பரிசு எது?
தன் மகள் பாத்திமாவின் திருமணத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்தத் திருமணப்பரிசு, தண்ணீர் எடுத்து வரும் தோல்பை, ஒரு குவளை, ஈச்சப்பாயால் பின்னப்பட்ட ஒரு கட்டில், இரண்டு தலையணை, வெள்ளி வளையல், ஒரு மாவரைக்கும் திருகை.

5. உலகின் உயரமான பள்ளிவாசல் எது?
மொராக்கோ நாட்டில், காஸாபிளாங்கோ என்ற இடத்தில் 'கிரேமஹசன்' என்னும் மசூதி உள்ளது. உலகில் உள்ள மசூதிகளிலேயே மிகவும் உயரமானது இதுதான். சுமார் 700 கோடி செலவில் கட்டப்பட்டது. மினாராவின் உயரம் 576 அடி. இது 1993-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. அநேகமாக இதுதான் உலகின் எட்டாவது அதிசயமாக இருக்கும்.

6. தானாக பக்கங்களைப் புரட்டிக் கொள்ளும் குர்ஆன் எங்கேயுள்ளது?
இது 700 ஆண்டுகளுக்கு முந்தைய குர் ஆன். கை விரல்கள் பட்டதும் தானாக பக்கங்கள் புரளக்கூடிய அளவிற்கு இதை வடிவமைத்து இருக்கிறார்கள். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இந்த நவீன தொழில்நுட்பக் குர்ஆன் வைக்கப்பட்டுள்ளது.

7. மிகச்சிறிய திருக்குர்ஆன் யாரிடமுள்ளது?
குன்னூரில் வசிக்கும் டாக்ஸி டிரைவர் சிராஜுத்தீன் என்பவரிடம் 40 ஆண்டுகளுக்கு முன் தயார் செய்யப்பட்ட மிகச்சிறிய குர் ஆன் உள்ளது. இக் குர்ஆனை சிராஜுதீன் பல வருடங்களாகப் பாதுகாத்து வருகிறார். இதன் உயரம் கால் செ.மீ மீட்டர், அகலம் 2 செ.மீ., நீளம் 2 3/4 செ.மீ. இதில் மொத்தம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 428 எழுத்துக்கள் உள்ளன. 'பே' என்ற அரபு மொழிச்சொல் மட்டும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 428 முறை உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது. மொத்தம் 86 ஆயிரத்து 430 வார்த்தைகள் உள்ளன. இறைக் கோட்பாடுகள் மட்டும் 6 ஆயிரத்து 666 உள்ளன. இதில் பதிவாகியுள்ள எழுத்துக்களை வாசிக்க லென்ஸ் தேவைப்படும்.

8. அழிவைத் தரும் 7 பாவங்கள் எவை?
1.அல்லாஹ்விற்கு இணை வைப்பது.

2.சூனியம் செய்வது.

3.அல்லாஹ் எந்த உயிரைக் கொலை செய்வதைத் தடுத்து இருக்கிறானோ அந்த உயிரை நியாயமின்றி கொலைசெய்வது.

4.வட்டியை உண்பது.

5.அநாதைகளின் சொத்துக்களை அபகரிப்பது.

6. போர் நடந்துக்கொண்டிருக்கும் தினத்தன்று புறமுதுகு காட்டுதல்.

7.விசுவாசியான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது.

9. நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய மூன்று முக்கிய பண்புகள் எவை?
1.தூய்மை, அவர்களின் தூய உள்ளத்தை உலகுக்குக் காட்டியது.
2.எளிமை, அவர்களின் ஏழ்மை வாழ்வை அகிலத்தாருக்கு அறிவித்தது.
3.பொறுமை, எத்தகைய இன்னல்களையும், இடர்ப்பாடுகளையும் இனிய முகத்தோடு ஏற்று, ஈடு இணையற்ற இஸ்லாத்தை உலகிற்கு காட்டியது.

இம்மூன்றும் நாயகம்(ஸல்) அவர்களோடு பின்னிப் பிணைக்கப்பட்டிருந்தன. அதிலும் பொறுமை அவர்களின் ஒப்பற்ற வாழ்விற்குப் பெரிதும்
அணிகலனாக விளங்கியது.

10. சுவனம் செல்ல தகுதியானவர்கள் யார் தெரியுமா?

1. "எவர் மூன்று பெண் மக்களையோ அல்லது மூன்று சகோதரிகளையோ அல்லது இரண்டு பெண் மக்களையோ வளர்த்து (அறிவையும்)
நல்லொழுக்கத்தையும் கற்பித்து அவர்களுடன் அழகிய முறையில் நடந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனரோ அவர்களுக்கு
சுவனம் உண்டு" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறி:அபுஸஈத்(ரலி) ஆதாரம் : திர்மிதீ

2. "பெருமை, மோசம், கடன் ஆகிய இம் மூன்றை விட்டும் எவர் அப்பாற்பட்டு இருக்கும் நிலையில் இறந்து விடுகின்றாரோ அவர்கள் சொர்க்கம் செல்வார்" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார். அறி :ஸவ்பான் (ரலி) ஆதாரம் : திர்மிதீ

11. மறுமை நாளில் அல்லாஹ் நோக்காதவர்கள் எவர் தெரியுமா?
"மூன்று விதமான நபர்கள் இருக்கின்றனர். அவர்கள் பக்கம் அல்லாஹ் மறுமை நாளில் நோக்க மாட்டான்" என்று அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.

1. பெற்றோருக்கு மாறு செய்பவன்.
2. ஆண் உடையை அணியும் பெண்.
3. ரோஷமும், சொரணையும் அற்றவன். அறிவிப்பாளர் :இப்னு உமர் (ரலி) ஆதாரம்: நஸாயி.

12. பெண்கள் பின்பற்ற வேண்டிய 8 கடமைகள் எவை?
1. திருக்குர் ஆனில் கூறப்பட்ட அல்லாஹ்வை மட்டுமே வணங்கிக் கொள்ளுங்கள்.
2. அல்லாஹ்வை இணை வைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இணை வைப்பதை அல்லாஹ் ஒருக்காலும் மன்னிக்க மாட்டான் என்பதை நினைவு கூருங்கள்.
3. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத புதியதாக ஒன்றை உண்டாக்கப்பட்டால் அது பித்அத் ஆகும். அதனால் அதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
4. ஐந்துநேர தொழுகையை முழுமையாக பேணிக் கொள்ளுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை தவிர்த்து விடாதீர்கள்.
5. ஹிஜாபினைக் கடைபிடித்துக் கொள்ளுங்கள்.
6. பெற்றோரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள். மேலும் அவர்களை நல்ல முறையில் பரிபாலித்து நல்லதைச் செய்யுங்கள். அவர்களுக்குச் சொல்லாலும், செயலாலும் துன்பம் கொடுக்காதீர்கள்.
7. கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களின் கூற்றினைக் கடைபிடித்துக் கொள்ளுங்கள்.
8. அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள்.

13. நரகவாசிகள் யார்?
"தொழுகையை வீணடிப்பவர்களுக்கு நரகம்தான் என்று அல்லாஹ் கூறுகின்றான். உங்களை "ஸகர்" என்னும் நரகத்தில் புகுத்தியது எது? என்று கேட்பார்கள்" (அதற்கு)தொழுபவர்களில்(உள்ளவர்களாக) நாங்கள் இருக்கவில்லை" என்று அவர்கள் கூறுவார்கள். அல்குர் ஆன் 74;42,43.

எனவே "உங்கள் குழந்தைகள் ஏழு வயது அடைந்துவிட்டால் தொழச் சொல்லுங்கள். பத்து வயது அடைந்ததும் (அவர்கள் தொழாமல் இருந்தால்) அவர்களை அடியுங்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அம்ருபின் ஷீஐபு(ரலி). ஆதாரம்: அஹமத், அபுதாவூத்.

14. ஆஷுரா நாளின் நன்மைகளில் இன்னும் ஒன்று!
"எவர் ஆஷுரா நாள் அன்று தம் குடும்பத்தாருக்குத் தாராளமாக செலவு செய்கின்றாரோ அவருக்கு இறைவன் அந்த ஆண்டு முழுவதும் அளவின்றி (வருமானம்) அளிக்கிறான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத் (ரலி).

15. திருக்குர் ஆன் படம் பிடுத்துக்காட்டும் மனிதர்களின் தீய குணங்கள் எவை?
1. தற்பெருமை கொள்ளுதல். 2. பிறரை கொடுமை செய்தல். 3. பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு அதற்கேற்ப பாவனை செய்தல். 4. பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல். 5. பொய் பேசுதல். 6. கெட்ட சொற்களைப் பேசுதல். 6. நல்லவர்களைப் போல் நடித்தல். 7. புறம் பேசுதல். 8. பாரபட்சமாக நடத்துதல். 9. தகாதவர்களுடன் சேருதல், அவர்களுக்கு ஆதரவு கொடுத்தல். 10. வாக்குறுதியை மீறல். 11. பொய் சாட்சி கூறுதல். 12. பொருத்தமற்றவர்களை புகழ்ந்து பேசுதல். 13. எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல். 14. சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல். 15. குறை கூறுதல். 16. வதந்தி பரப்புதல். 17. கோள் சொல்லுதல். 18. பொறாமைப்படுதல் 20. பெண்களைத் தீய நோக்குடன் பார்த்தல். 21. கோபப்படுதல்.

தொகுப்பு: சகோதரி. ஆர். நூர்ஜஹான் ரஹிம். (கல்லை)

நன்றி- சத்தியமார்க்கம்.காம்,

11 நவம்பர், 2010

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.
சிறப்புகள்
1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி

ஓர் மரண அறிவிப்பு

நமதூர் சின்னத்தெருவை சேர்ந்த அப்துல் காதருடைய மகன் மசூத்(11.11.2010) இன்று மாலை மரணம் அடைந்து விட்டார் இன்ன லில்லாஹி இன்னா இல்லிஹி ராஜுவுன்.என மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அன்னாரின் மாப்ரத்திர்க்காக துவா செய்வோமாக 'மேலும் அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல இறைவன் மன அமைதியை தந்து அருள்வானாக''

09 நவம்பர், 2010

கோவையில் 2 குழந்தைகளை கடத்தி கொடூரமாக கொன்ற கொலையாளி என்கவுன்டரில் சுட்டுக் கொலை

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
கோவை: கோவையில் பள்ளி குழந்தைகள் முஸ்கான், ரித்திக்கை கடத்தி சென்று கால்வாயில் தள்ளி கொலை செய்த வேன் டிரைவர் மோகன்ராஜ் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். விசாரணைக்காக வேனில் அழைத்து சென்றபோது, எஸ்.ஐ.க்களை சுட்டுவிட்டு தப்ப முயன்றபோது போலீசார் நடத்திய என்கவுன்டரில் மோகன்ராஜ் பலியானார். கோவை ரங்கே கவுடர் வீதியில் துணிக்கடை நடத்தி வருபவர் ரஞ்சித். இவரது மகள் முஸ்கான்(11), மகன் ரித்திக்(8). காந்திபுரம் சுகுணா ரிப்வி மெட்ரிக் பள்ளியில் முஸ்கான் 5ம் வகுப்பும், ரித்திக் 3ம் வகுப்பும் படித்து வந்தனர். தினசரி மாருதி வேனில் பள்ளிக்கு செல்வது வழக்கம். கடந்த 29ம் தேதி (வெள்ளி) காலை டிரைவர் மோகன்ராஜ் வேனில் முஸ்கானையும், ரித்திக்கையும் அழைத்து சென்றார்.

பள்ளிக்கு செல்லாமல், குழந்தைகளின் தந்தை ரஞ்சித்திடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் இருவரையும் கடத்தி சென்றார். பொள்ளாச்சி அங்கலகுறிச்சியில் உள்ள தனது நண்பன் மனோகரனையும் அழைத்துக்கொண்டு உடுமலையில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள சர்க்கார்புதூர் பிஏபி வாய்க்கால் பகுதிக்கு சென்றனர். ரஞ்சித்துடன் போனில் பேச முயன்றுள்ளனர். ஆனால் தொடர்பு கொள்ள முடிய வில்லை. பின்னர் சர்க்கார்புதூர் பிஏபி வாய்க்கால் பாலத்தில் இருந்து முஸ்கானையும், ரித்திக்கையும் வாய்க்காலில் தள்ளி கொலை செய்தனர். வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குழந்தைகளின் பாட்டி கமலாபாய் தெரிவித்த தகவலின் அடிப்படையில் டிரைவர் மோகன்ராஜையும், கூட்டாளி மனோகரனையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

பிரேதப் பரிசோதனையில் சிறுமி முஸ்கான் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மோகன்ராஜையும், மனோகரனையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு, கோவை 5வது ஜுடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் நேற்று மனு செய்தனர். 2 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி கோபிநாத் அனுமதி வழங்கினார். 11ம்தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து மோகன்ராஜும், மனோகரனும் நேற்று இரவு 7 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இரவு முழுவதும் அவர்களிடம் விசாரணை நடந்தது. உதவி கமிஷனர் குமாரசாமி தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

குழந்தைகள் கொலை செய்யப்பட்ட உடுமலை சர்க்கார்புதூருக்கு 2 பேரையும் அடையாளம் காட்டச் சொல்வதற்காக அழைத்து செல்ல போலீசார் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை 5 மணிக்கு மோகன்ராஜ் ஒரு வேனிலும், மனோகரன் ஒரு வேனிலும் அழைத்து செல்லப்பட்டனர். மனோகரன் சென்ற வேன் முதலில் சென்றது. பின்னால் சென்ற வேனில் மோகன்ராஜுடன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, எஸ்ஐக்கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர் இருந்தனர். வேனை டிரைவர் ஏட்டு அண்ணாதுரை ஓட்டினார்.
பொள்ளாச்சி ரோட்டில் ஈச்சனாரி ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தால், மாற்றுப்பாதையாக வெள்ளலூர் வழியாக அழைத்து சென்றனர். காலை 5.30 மணிக்கு வெள்ளலூர் குப்பை கிடங்கு அருகே சென்றபோது, மோகன்ராஜ் திடீரென எஸ்ஐ முத்துமாலை இடுப்பில் வைத்திருந்த ரிவால்வரை சடாரென உருவி, ‘வேனை திருப்புடா’ என டிரைவரிடம் கூறினான். எஸ்ஐ முத்துமாலை துப்பாக்கியை பறிக்க முயன்றபோது அவரை மோகன்ராஜ் துப்பாக்கியால் சுட்டான். அவரது இடுப்பில் குண்டு பாய்ந்தது. தடுத்த எஸ்ஐ ஜோதியையும் சுட்டான். அவருக்கு இடது கையில் குண்டு பாய்ந்தது. இருவரும் மயங்கி கீழே சாய்ந்தனர்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தனது துப்பாக்கியால் மோகன்ராஜை சுட்டார். இதில் தலையில் கண் அருகே 2 குண்டும், மார்பில் ஒரு குண்டும் பாய்ந்தது. அதே இடத்தில் மோகன்ராஜ் சுருண்டு விழுந்து இறந்தார். உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே வேனில் மோகன்ராஜ் சடலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. காயமடைந்த எஸ்ஐக்கள் முத்துமாலையும், ஜோதியும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஆபரேஷன் நடந்தது. பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்த மோகன்ராஜ், சுட்டுக் கொல்லப்பட்டது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓர் மரணம் அறிவிப்பு

நமதூர் மேலத்துவை சேர்ந்த டீகடை ஷேக்குடைய தந்தை டீகடை அன்சாரி அவர்கள் (07.11.2010) அன்று மரணம் அடைந்து விட்டார்கள் இன்ன லில்லாஹி வ இன்னா இல்லிஹி ராஜுவுன். மிகவும் வர்த்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.அன்னாரின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் வல்ல இறைவன் மனஅமைதியை தந்து அருள்வானாக ''மேலும் அன்னாரின் மாப்ரத்துக்காக் அனைவரும் துவா செய்வுமாறு கேட்டுகொள்கிறோம் .

08 நவம்பர், 2010

பச்சிளம் குழந்தையை வாஷிங் மிஷினில் போட்டு கொன்ற அமெரிக்க பெண் கைது

லண்டன் : இப்படியும் ஒரு தாய் இருப்பாளா! என்று யாவரும் பதைபதைக்கும் அளவுக்கு, லண்டனில் வசிக்கும் அமெரிக்க பெண் ஒருவர், பிறந்து 10 நாளேயான தனது பச்சிளம் குழந்தையை, வாஷிங் மிஷினில் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.


அமெரிக்காவை சேர்ந்தவர் லின்ட்சே பிட்லர். லண்டனில் ஒக்லஹோமாவில் உள்ள பார்லெஸ்வில்லியில் வசித்து வரும் இவருக்கு, 4 மற்றும் 3 வயதில் இரு மகன்கள் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன், மூன்றாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இதற்கு மேகி மே என்று பெயரிட்டுள்ளார். இருப்பினும் லின்ட்சேவுக்கு மேகியின் வரவு பிடிக்கவில்லை போலும். அதனால், யாருக்கும் தெரியாமல், வாஷிங் மிஷினில் அழுக்கு துணிகளோடு, பச்சிளம் குழந்தை மேகியையும் போட்டு, 40 நிமிடம் சலவை செய்துள்ளார். இதில் அக்குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.


வாஷிங் மிஷினில் இருந்து வித்தியாசமான சத்தம் வருவதை பார்த்து, பயந்து போய் ஓடி வந்த மேகியின் அத்தை, வாஷிங் மிஷினை திறந்த பார்த்த போது தான் அதிர்ச்சியில் உறைந்து போனார். "அடி படுபாவி, பச்சை பிள்ளையை, இப்படி துடிக்க துடிக்க கொல்ல உனக்கு எப்படி மனசு வந்தது' என கதறியபடி கேட்டார். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசாரும் மருத்துவ குழுவினரும் லின்ட்சே வீட்டுக்கு விரைந்து வந்தனர். வாஷிங் மிஷினில் பச்சிளம் குழந்தை கொடூரமான முறையில் சிதைந்து இருந்ததை பார்த்த, சில போலீசார் கண்ணீர் விட்டனர். உடனடியாக லின்ட்சேயை கைது செய்த போலீசார், அவர் வேண்டுமென்றே குழந்தையை கொலை செய்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


நன்றி:தினமலர்

07 நவம்பர், 2010

கடலூரில் சூறாவளி காற்றுடன் கனமழை: மரங்கள் முறிந்தன; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடலூர்:கடலூரில் நேற்று காலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது."ஜல்' புயல் காரணமாக, கடலூர் துறைமுகத்தில் நேற்று முன்தினம் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல், கடலில் சீற்றம்அதிகரித்தது. கடலூர், தாழங்குடா, சிங்காரத்தோப்பு, பரங்கிப்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சாமியார்பேட்டை மற்றும் கிள்ளை பகுதியில் முடசல் ஓடை, முழுக்குத்துறை, பட்டரையடி, மீனவர் காலனி உட்பட பல பகுதிகளில் கடல் நீர் புகுந்ததால், கடலோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.நேற்று அதிகாலை 4 மணி முதல், மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யத் துவங்கியது. காலை 7 மணி முதல் மழை தீவிரமடைந்து 9 மணிக்கு சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பகல் 12 மணிக்கு புயல் கடலூரை கடந்ததால், மழையின் தீவிரம் குறைந்தது.


கடலூர் - சிதம்பரம் சாலையில் மூன்று இடங்களிலும், கடலூர் - திருவந்திபுரம் சாலையில் கே.என்.பேட்டை மற்றும் நெல்லிக்குப்பத்திலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன.இதனால், சிதம்பரம், விருத்தாசலம் மற்றும் திருவந்திபுரம் சாலைகளில் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. இதேபோன்று பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.சூறாவளி காரணமாக கடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் கடலோரப் பகுதிகளில், காலை 11 மணிக்கு மின் வினியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.சிதம்பரம், காட்டுமன்னார் கோவிலில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டது. சிதம்பரம் பஸ் நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. நீர் நிலைகள் நிரம்பி, வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வேகமாக ஓடியது.மாவட்டம் முழுவதும் மீனவர்கள் மூன்றாவது நாளாக நேற்றும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாக, கடலூரில் இருந்து சென்னை, திருச்சி, சேலம், மதுரை, சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, விழுப்புரம், புதுச்சேரி போன்ற முக்கிய நகரங்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன; கிராமப் பகுதி பஸ்கள் பெருமளவில் இயங்கவில்லை.


சுவர் இடிந்து 3 @பர் காயம்: புவனகிரி அருகே நத்தமேடு கிராமத்தில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து, கலைவாணன் மனைவி உஷா(27) பலத்த காயமடைந்தார்.நெல்லிக்குப்பம் ஜீவா நகரைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் (25) வீட்டில் நேற்று மாலை மண் சுவர் மழையில் நனைந்து விழுந்தது. இதில் சிக்கிய ஹேமச் சந்திரன், இவரது மனைவி குணவதி (23) ஆகியோர் மீட்கப்பட்டு கடலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விழுப்புரம்: மாவட்டத்தில் நேற்று பெய்த தொடர் மழையில் 396 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.செஞ்சி 49 மி.மீ., திண்டிவனம் 67, விழுப்புரம் 62, திருக்கோவிலூர் 30, கள்ளக்குறிச்சி 15, சங்கராபுரம் 13, உளுந்தூர்பேட்டை 18, மரக்காணம் 64 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வானூரில் 78 மி.மீ., மழை பதிவாகியது. மாவட்டத்தில் மொத்தம் 396 மி.மீ., மழை பதிவானது. சராசரியாக 43.2 மி.மீ., பதிவாகியது.


நன்றி:தினமலர்


விசா கிடைக்காமல் "ஹஜ்' பயணிகள் ஏமாற்றம்: தனியார் டிராவல்ஸ் நிறுவனம் கைவிரிப்பு

கீழக்கரை: தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து, மத்திய அரசின் அங்கீகாரம் பெறாத தனியார் டிராவல்ஸ் மூலம் "ஹஜ்' பயணம் புறப்பட்ட ஏராளமானோர், "விசா' கிடைக்காமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர்.


முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாக "ஹஜ்' பயணம் உள்ளது. தமிழக "ஹஜ்' கமிட்டி வழியாக விண்ணப்பிப்பவர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் இடம் பெற விரும்பாதவர்கள், தனியார் டிராவல்ஸ் மூலம் கூடுதல் கட்டணம் செலுத்தி, "ஹஜ்' பயணம் செல்கின்றனர். மத்திய அரசு அனுமதி பெறாத தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தினர், மும்பையில் உள்ள அங்கீகாரம் பெற்ற டிராவல்ஸ் மூலமாக "விசா' பெற்று, "ஹஜ்' பயணிகளை அழைத்துச் சென்றனர். அவர்கள், அதிக தொகை வசூலிப்பதாக மத்திய அரசிற்கும், சவுதி தூதரகத்திற்கும் புகார்கள் சென்றன.


நடப்பாண்டில் "விசா' வழங்குவதற்கு முன், சவுதி தூதரக அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். இதில் திருப்தி ஏற்படாததால், தமிழகத்திலிருந்து "விசா'விற்கு அனுப்பப்பட்ட ஏராளமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால், தமிழகத்தில் 25க்கும் மேலான தனியார் டிராவல்ஸ்களில் பதிவு செய்த பலர், "விசா' கிடைக்காததால் "ஹஜ்' பயணத்தை தொடர முடியவில்லை.


கீழக்கரையில் இருந்து தனியார் டிராவல்ஸ் மூலம் விண்ணப்பித்து, ஏமாற்றமடைந்து திரும்பிய பயணி ஒருவர் கூறியதாவது: "ஹஜ்' பயணத்திற்காக ஏராளமானோர் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பயண தேதியை உறுதி செய்து, "விசா'வை எதிர்நோக்கி சென்னையில் உள்ள விடுதியில் தங்கியிருந்தோம். ஆனால், தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தினர், "விசா' கிடைக்கவில்லை என கைவிரித்து விட்டனர். இதனால், புனிதப் பயண கனவில் சென்ற பலர், ஏமாற்றத்துடன் ஊர் திரும்பி விட்டோம். சிலர் எப்படியும் "விசா' கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் சென்னையில் தங்கியுள்ளனர் என்றார்.

திமுக எம்.பி.யின் ராமர் கோயில் ஆசை

பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டும் கோரிக்கை மனுவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கையெழுத்திட்ட தகவல் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குள்ளான நிலத்தில் மூன்றில் இரண்டு பகுதியை சங்பரிவாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அலஹாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. முஸ்லிம்களின் உரிமை கோரிக்கையான பாபரி பள்ளிவாசல் நிலத்தில், பாபரி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்துத்துவா அமைப்பான வி.ஹெச்.பி. இந்தியா முழுவதும் கையெழுத்து இயக்கம் அறிவித்துள்ளது. இந்த பணியினை ஸ்ரீ அனுமன் சக்தி ஜாகரன் சமிதி என்ற அமைப்பு முன்னெடுத்து நடத்தி வருகிறது. அதன் தொடக்கப் பணியாக நாடு முழுவதும் கையெழுத்து வேட்டையை அந்த அமைப்பு தொடங்கியது. அந்த கையெழுத்து போடும் வைபவத்தில் தமிழ்நாட்டிலேயே முதல் கையெழுத்தை கன்னியாகுமரி திமுக எம்.பி. ஹெலன் டேவிட்சன் கடந்த 22ஆம் தேதி போட்டிருக்கிறார்.

சமிதி நிர்வாகிகள் கன்னியாகுமரி தி.மு.க.வை சேர்ந்த எம்.பி. ஹெலன் டேவிட்சனை அணுகி, ராமர் கோவில் கட்டுவது தொடர்பான விவரங்களை எடுத்துக்கூறி கையெழுத்து இயக்கத்தின் மனுவில் கையெழுத்து போடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அவரும் உடனடியாக முதல் கையெழுத்தாக தனது கையெழுத்து போட்டுக் கொடுத்ததாகவும் வெளிவந்த செய்தி குறித்து வி.ஹெச்.பி.யின் பொதுச் செயலாளரும் ஸ்ரீ அனுமன் சக்தி ஜாகரன் சமிதி பொறுப்பாளருமான காளியப்பன் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வேலாயுதம் உள்ளிட்ட சங்பரிவார பிரமுகர்கள் உடனிருந்திருக்கிறார்கள்.

இந்த பிரச்சனை கண்டிப்பாக தீர்க்கப்பட வேண்டும், அதனால் ¬யெழுத்திடுகிறேன் என முகம் நிறைந்த சிரிப்புடன் ஹெலன் டேவிட்சன் எம்.பி. புகைப்படத்துக்காக போஸ் கொடுத்திருக்கிறார். ராமர் கோயில் கட்ட சங்பரிவாரின் கொள்கைக்காக மிகுந்த ஈடுபாட்டுடன் திமுக எம்பி கையெழுத்திட்டுள்ள விதம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக சிறுபான்மை மக்களை அதிருப்தியிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது.

திமுக எம்.பி.யின் இந்த செயல் நீதிமன்றத்தை அவமதிக்கக் கூடியது. தீர்ப்புக்குப் பிறகு மேல் முறையீட்டு வாய்ப்பு இருக்கும்போது இப்படிப்பட்ட செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக&காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் வாய்ப்பு குறைவு. திருச்சியில் பேசிய சோனியாவும் திமுகவைப் பற்றி எதுவும் கூறவில்லை. தனி அடையாளம் கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் போராடி வருகிறது. காங்கிரஸ் தங்களை கைவிட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றத்தில் பாஜகவோடு கை குலுக்க திட்டமிடுகிறது என்பதை உணர்த்தத்தான் திமுக எம்.பி. கையெழுத்து போட்டாரா என்ற சந்தேகம் தங்களுக்கு உள்ளதாக இந்த சம்பவம் நிகழ்ந்தவுடன் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் தமுமுக தலைவர் அறிவித்தார்.

தமுமுக தலைவரின் பரபரப்பான பேட்டியினால் மதச்சார்பின்மை பூமியான தமிழகம் விழிப்படைந்தது. திமுக வாரி சுருட்டி எழுந்தது. சங்பரிவாரின் லட்சியத்துக்கு ஆதரவாக திமுக எம்.பி. முதல் கையெழுத்து போட்ட விவகாரம் அக்கட்சியை பெரும் சிக்கலில் ஆழ்த்தியது. அரசியல் ரீதியிலான நெருக்கடியில் அக்கட்சி சிக்கித் திணருகிறது. விரக்தியின் விளிம்பில் சென்றுள்ள அக்கட்சி தலைமையின் ஆவேசத்தில் மாட்டிக்கொண்ட திமுக எம்.பி. சங்பரிவாரின் முக்கியப் பிரமுகர்களின் தயவினை வேண்டி தஞ்சம் பெறுகிறார். ராமர் கோயிலுக்காக எம்.பி. கையெழுத்திடவில்லை என பாஜகவின் முக்கியப் பிரமுகர் அறிக்கை வெளியிட்டார்.

தங்களின் ஆதரவு எம்.பி. பாதிக்கப்படக்கூடாதே என்ற பதைபதைப்பு காவி முகாமுக்கு வந்தது. சங்பரிவாரம் எப்படி வேண்டுமானாலும் தனது வேடத்தை மாற்றிக்கொள்ளும் என்பதற்கு தற்போதைய எடுத்துக்காட்டு இதுவாகும். தங்களை நல்ல முறையில் உபசரித்து ஆதரவாக செயல்பட்ட ஹெலன் டேவிட்சனுக்கு அரசியல் நெருக்கடி ஏற்படாத வகையில் செயல்பட முடிவெடுத்திருக்கிறோம் என காவி முகாம் முக்கியப் பிரமுகர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், அந்த கையெழுத்து இயக்கம் ராமர் கோயிலுக்காக நடத்தப்பட்டது, அதில் கையெழுத்திட்ட திமுக எம்.பி.யின் செயலை வரவேற்கிறோம் என மாநில பாஜக தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் போட்டு உடைத்திருக்கிறார். ‘‘எல்லாத்துக்கும் தீர்வு வரணும்ல...’’ என்று கூறிக்கொண்டுதான் எம்.பி. கையெழுத்து போட்டுக் கொடுத்தார் என இந்து முன்னணி மாவட்டத் தலைவர் செல்லன் கூறியிருக்கிறார்.

திமுக தனது கட்சி எம்.பி.யிடம் விளக்க நோட்டீஸ் கேட்டிருக்கிறது, விளக்கெண்ணை கேட்டிருக்கிறது என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தேசிய அளவில் தமிழகத்தின் மதச்சார்ப்பின்மை தத்துவத்துக்கு ஊறு நேரும் வண்ணம் செயல்படும் வண்ணம் தனது கட்சி எம்.பி.க்கு துணிச்சலை திமுக தலைமை கொடுத்துள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.

நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்க முயலும் தீய சக்திகளுக்கு எதிராக குமரி மாவட்ட தமுமுக போராட்டத்தை அறிவித்திருக்கிறது.
பகிரங்கமாக விளக்கம் அளிக்க வேண்டிய கடமை திமுக தலைமைக்கு உண்டு. நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டிய கட்டாயத்தில் திமுக எம்.பி. ஹெலன் டேவிட்சன் இருக்கிறார்.

நன்றி- tmmk .in



தி.மு.க. எம்.பி.க்கு எதிராக போராட்டம் : த.மு.மு.க.வினர் கைது
தி.மு.க. எம்.பி.க்கு எதிராக போராட்டம் நடத்திய த.மு.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி தொகுதி தி.மு.க. எம்.பி.ஹெலன்டேவிட்சன். இவர் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் மனுவில் கையெழுத்திட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக எம்.பி.யிடம் கட்சி தலைமை விளக்கம் கேட்டது. ஆனால் எம்.பி.யிடம் மனுவில் கைöழுத்து பெறவில்லை என்று அனுமன் சக்தி அமைப்பு சார்பில் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் மறுத்தார். இந்நிலையில் ஹெலன்டேவிட்சன் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய கோரி த.மு.மு.க. சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டமாநில துணைத்தலைவர் காதர்மைதீன், மாவட்ட தலைவர் பீர்முகம்மது உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்களை போலீசார் கைது செய்தனர்.

நன்றி- தினமலர்

05 நவம்பர், 2010

சிறுவர்கள் வாழ்வோடு விளையாடும் "வீடியோ கேம்' : பெற்றோர்களே... உஷார்!




மதுரை :"வீடியோ கேம்' விளையாட்டுக்களில் சிறுவர்கள் ஆர்வம் காட்டினால் கண், மனநல பாதிப்புகளுக்கு ஆளாவர், என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பெருகி விட்ட நிலையில், சிறுவர்கள் வீடியோ கேம், கம்ப்யூட்டர், "டிவி'க்களில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். சில நேரங்களில் பெற்றோரை ஏமாற்றி, கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்று வீடியோ விளையாட்டுக்கு அடிமையாகின்றனர். "பளிச்'சிடும் திரை முன்பு பலமணி நேரம் செலவிடுவதால் அவர்களின் கண்ணும், மனமும் பாதிப்படைகிறது. மதுரை அரவிந்த் கண்ஆஸ்பத்திரியின் குழந்தைகள் பிரிவு மூத்த ஆலோசகர் டாக்டர் ஆர்.முரளிதர் கூறியதாவது:"டிவி', வீடியோ கேம்களில் ஈடுபடுவோர் கண்களை சிமிட்ட மறந்து போவார்கள். இதனால், கண்களில் அதிகம் நீர்வற்றிய நிலையில், அதிக சிரத்தை ஏற்பட்டு, உளைச்சல் ஏற்படும்.


தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதால், கண்கள் சிவந்து போகும். கண்களுக்கு களைப்பு ஏற்படும். இதனால், நேரம் வீணாவதுடன் தேவையின்றி கண்களுக்கு பாதிப்பை விலைக்கு வாங்குவதாக இருக்கும். கண்களில் பார்வை குறைவாக உள்ளவர்களை "மானிட்டர்'களின் முன் நெருங்கி அமர்ந்து ரசிப்பதை வைத்து கண்டு பிடிக்கலாம். இப்படி நெருங்கி அமர்ந்து ரசிப்பதால், மானிட்டர்களில் இருந்து வரும் ஒளி அதிகபட்சமாக "பளிச்'சிடுவதால் மாணவர்களின் கவனம் போகும். அவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சும் (எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன்) மூளைவரை பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆய்வுகளை மேற்கொள்வோர் சந்தேகிக்கின்றனர்.


தரமான மொபைல்களில், வெளிப்படும் கதிர்வீச்சின் அளவை குறிப்பிட்டு இருப்பர். பல சீன தயாரிப்புகளில் அவற்றை குறிப்பிடுவதில்லை. வீடியோ கேம்களில் ஆர்வம் காட்டும் சிறுவர்கள் இவற்றையெல்லாம் யோசிப்பதில்லை. பாதிப்பு ஏற்பட்ட பின்பே தெரியவரும். இதனால் சிறுவர்களிடம் மொபைல், "டிவி', வீடியோ போன்றவற்றை தரக்கூடாது. அவற்றை பயன்படுத்தும் அவசியம் இருந்தால், மானிட்டர்களில், ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடிகளை பயன்படுத்தி பார்க்க வேண்டும். இருட்டறையில் இருந்து அவற்றை பார்ப்பதை தவிர்த்து, வெளிச்சத்தில் இருந்தபடி பார்ப்பது கண்களுக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.


மதுரை அரசு ஆஸ்பத்திரியின் மனநல பிரிவு தலைமை பேராசிரியர் வி.ராமானுஜம் கூறியதாவது: வீடியோ கேம் விளையாடுவது, எந்நேரமும் "டிவி' முன் செலவிடுவது, போதைப் பழக்கத்தை போன்று நம்மை ஆக்கிரமித்து விடும். சிறுவர்கள் அவற்றிற்கு அடிமையாகி விட்டதையே குறிக்கும். இதனால் உடல், உள்ளத்தின் நலம் கெடும். படிப்பின் மீதான ஆர்வமும், கவனமும் கெடும். மொத்தத்தில் வாழ்க்கையே தொலைந்து போகலாம்.வீடியோ பழக்கத்தில் மூழ்கும் சிறுவர்கள் அதற்காக பெற்றோரை ஏமாற்றி பணம் பெறும் சூழ்நிலை உருவாகும். பின்னாளில் அது திருட்டு, மோசடி போன்ற தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்தும். மனதளவில் அதில் இருந்து மீளமுடியாமல் தவிப்பர். சுய கட்டுப்பாட்டை இழந்து போவர். பள்ளிக்கு போகாமல், போக்குக் காட்டிச் செல்வர். இவ்வாறு அவர் கூறினார்.


நன்றி:தினமலர்.காம்

பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு - இடைக்கால அறிக்கை!


அயோத்தி பயணம் மேற்கொண்டு விட்டு தமிழகம் திரும்பிய பேராசிரியர் அ.மார்க்ஸ் (தலைவர், மனித உரிமைக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு), கோ.சுகுமாரன் (செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி) ஆகியோர் கடந்த 02.11.2010மாலை 4.00 மணியளவில், சென்னையிலுள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளார்களைச் சந்தித்தனர். அப்போது பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை குறித்த நேரடி கள ஆய்வு - இடைக்கால அறிக்கையை வெளியிட்டனர்.

படங்கள்: கோ. சுகுமாரன்.



இடைக்கால அறிக்கை:
சென்ற அக்டோபர் 27, 28, 29, 30, 31 ஆகிய நாட்களில் லக்னோ, பைசாபாத், அயோத்தி ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்ற நாங்கள் பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினையில் முக்கிய வழக்காடிகளான (Litigants) அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ஃபரியாப் ஜிலானி (சுன்னி வக்ப் வாரியம்), உயிருடன் உள்ள மூத்த மனுதாரான முகமது அஷிம் அன்சாரி, ராம ஜென்ம பூமி நியாசின் தலைவர்களில் ஒருவரும், அயோத்தி முன்னாள் பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினருமான ராம் விலாஸ் வேதாந்தி, நிர்மோகி அகாராவின் மகந்த் பாஸ்கரதாஸ், விசுவ இந்துப் பரிசத் அயோத்தி தலைமையகத்தில் உள்ள கரசேவபுரம் அலுவலகத்தின் பொறுப்பாளர் மகேந்திர உபாத்யாய, பிரச்சினைக்குரிய பகுதியில் இருக்கும் நிலையை (Status Quo) மேற்பார்வை இடுவதற்கென உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் காலிக் அகமது, அயோத்தியில் உள்ள சரயுகுன்ஜ் ராம் ஜானகி மந்திரின் மகந்த்தும், ‘அயோத்தியில் பன்மைக் கலாச்சாராத்திற்கான அமைப்பு’ பொறுப்பாளருமான யுகல் கிஷோர் சரண் சாஸ்திரி, பைசாபாத் நகர பத்திரிகையாளர்களான கே.கே.பாண்டே (ஈ டிவி), பன்பீர் சிங் (ஆஜ்தக் டிவி), சுமன் குப்தா, பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததா எனக் கண்டறிய அகழ்வாய்வு செய்யவதற்காக உயர்நீதிமன்றம் ஆணையிட்ட போது அதை மேற்பார்வை இடுவதற்காக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான பேராசிரியர் முனைவர் அசோக் கே. மிஸ்ரா (வரலாற்றுத் துறைத் தலைவர், ராம் மனோகர் லோகியா பல்கலைக்கழகம், பைசாபாத்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ, லிபரேஷன்) உ.பி. மாநில தலைமையகச் செயலர் அருண் குமார், அகில இந்திய முற்போக்கு மகளிர் கழகத் தேசிய துணைத் தலைவரும், ‘டெகிரி-ஏ-மிஸ்வான்’ என்கிற அமைப்பின் பொறுப்பாளருமான தாஹிரா ஹாசன் மற்றும் பல இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோரையும் சந்தித்து விரிவாகப் பேசி பதிவு செய்துக் கொண்டோம்.

‘மேலே: அயோத்தியில் பன்மைக் கலாச்சாராத்திற்கான அமைப்பு’ பொறுப்பாளர் யுகல் கிஷோர் சரண் சாஸ்திரி.

கீழே: சரயுகுன்ஜ் ராம் ஜானகி மந்திர்…



முள்வேளியிட்டு, பலத்த பாதுகாப்புடன் பாபர் மசூதி இருந்த இடம்…

அயோத்தி நகரம், கரசேவபுரம், ராமர் கோயிலுக்கான தூண்கள் முதலிய கட்டுமானங்களை உருவாக்கி வைத்திருக்கும் வி.இ.ப. அலுவலகம், பெரும் பாதுகாப்புடன் அரசு கையகப்படுத்தி, இரட்டை முள்வேளியிட்டு மத்திய போலீஸ் பாதுகாப்பில் வைத்துள்ள 71.3 ஏக்கர் நிலம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இன்று உருவாக்கி வழிபாடு நடத்தப்படும் ராம் லல்லாவின் தற்காலிக கோயில் முதலிய பிரச்சினைக்குரிய பகுதிகளை நேரடியாகச் சென்றுப் பார்த்தோம்.

சட்டத்தின் ஆட்சி, அரசியல் சட்டத்தின் அடிப்படையிலான ஆளுகை, சமூக ஒற்றுமை, பன்மைத்துவம் காப்பாற்றப்படுதல் ஆகிய அடிப்படையான நோக்கங்களுடன் இந்த ஆய்வை நாங்கள் மேற்கொண்டோம். இப்பிரச்சினையில் சுமூகமான தீர்வு ஏற்படுதல், நீதி நிலை நாட்டப்படுதல் ஆகிய நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட எமது ஆய்வின் சுருக்கமான (Interim Report) முடிவுகள் பின் வருமாறு. விரிவான அறிக்கை பின்னர் வெளியிடப்படும்.

சட்ட அடிப்படைகளைப் புறந்தள்ளி இந்து மத நம்பிக்கை ஒன்றின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பென்ச் தீர்ப்பு சட்ட வல்லுநர்கள், அறிவுஜீவிகள் மத்தியில் கடும் சர்சையை ஏற்படுத்தி உள்ளது. முரண்பாடுகள் மிகுந்த ஒரு அகழ்வாய்வை நீதிமன்றம் பெரிய அளவில் சார்ந்திருந்ததும் வரலாற்று அறிஞர்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாபர் மசூதி இருந்த இடம் பிரித்துக் கொடுக்கப்பட ஆணையிடப்பட்டுள்ள மூன்று மனுதாரர்களும் (ராம் லல்லாவின் நெருங்கிய நண்பர், சுன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாரா) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்துக் கொண்டிருப்பதை மூன்று தரப்பினருமே எம்மிடம் தெரிவித்தனர்.

இன்னொரு பக்கம் முஸ்லிம் தரப்பு மூத்த மனுதாரரான அஷிம் அன்சாரிக்கும், நிர்மோகி அகாராவின் பாஸ்கர தாசுக்கும் இடையில் நீதிமன்றத்திற்கு அப்பால் சுமூகமான தீர்வு ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. ஜோதிர் மட சங்கராச்சாரியான ஸ்வருபானந்த சரசுவதிக்கும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திற்கும் இடையில் இதே நோக்கில் பேச்சுவார்த்தை நடந்துக் கோண்டிருப்பதாக இரு நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இன்னொரு பக்கம் இந்தியாவிற்குள்ளேயே பாபரின் பெயரில் இன்னொரு மசூதியை அனுமதிக்க மாட்டோம் என்கிறது ராம் ஜென்ம பூமி நியாஸ். அஷிம் அன்சாரி பாபர் மசூதி இருந்த இடத்தை விட்டுக் கொடுத்தாலும் கூட அப்படி விட்டுக் கொடுக்கும் அதிகாரம் வக்ப் வாரியம் உட்பட யாருக்குமே கிடையாது என முஸ்லிம் சட்ட வாரியத்தினர் கூறுகின்றனர்.

மூத்த வழக்காடி அஷிம் அன்சாரியுடன் நாங்கள்…



தீர்ப்பு முஸ்லிம்களுக்கு நீதியை மறுத்துள்ள போதிலும் அவர்கள் தரப்பில் காட்டப்படுகிற பொறுமையை அனைவரும் பாராட்டி உள்ளனர். அதே நேரத்தில் இந்த இறுக்கமான அமைதி சட்டத்தின் ஆட்சி, அரசியல் சட்ட ஆளுகை ஆகியவற்றில் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்ததன் அறிகுறிதான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப் பின்னணியிலேயே எங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முஸ்லிம் தரப்பினரின் கருத்துக்கள்:


பொதுவாக முஸ்லிம்களில் எல்லா தரப்பிலும் பெருத்த ஏமாற்றம் நிலவுவதை நாங்கள் கண்டோம். சட்டத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் வழக்கைப் பரிசீலிக்கும் எனவும், அந்த அடிப்படையில் தங்களுக்கு நீதி கிடைக்கும் எனவும் ஸ்ஃபரியாப் ஜிலானி மற்றும் காலிக் அகமது ஆகியோர் கூறினர். இடையில் அஷிம் அன்சாரியின் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவுகள் வருமாயின் அதை ஏற்க தமக்கு தடையில்லை எனவும் காலிக் அகமது கூறினார்.


பேச்சுவார்த்தையில் முனோக்கி நகர்ச்சி இல்லையாயினும் அது நடந்து கொண்டிருப்பதாகவும், 30 நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டிய நிபந்தனையின் காரணமாக அதற்கான வேலைகளுக்குத் தான் ஒப்புதல் அளித்து மனுவில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அஷிம் அன்சரி கூறினார். முஸ்லிம்களுக்குள் இரு கருத்து கிடையாது எனவும், எப்படியும் பாபர் மசூதி இருந்த இடத்தில் மசூதி கட்டித் தர வேண்டும் என்ற ஒரே கருத்துதான் உள்ளது எனவும், இரு கருத்துக்கள் உள்ளன என்பது ஊடகங்கள் கட்டுகிற கதை என்றும் ஜிலானி கூறினார். சுன்னி வக்ப் வாரியத்தின் முடிவுக்கு கட்டுப்படுவதாக அஷிம் அன்சாரி கையெழுத்திட்டுள்ளதாகவும் காலிக் அகமது கூறினார்.

வழக்கறிஞர் ஸ்ஃபரியாப் ஜிலானியுடன் நாங்கள்…

வழக்கறிஞர் காலிக் அகமதுவுடன் நாங்கள்…

இப்பிரச்சினை எப்படியாவது முடிந்தால் நல்லது என ஏற்கனவே பாதிக்கப்பட்ட அயோத்தி முஸ்லிம்களிடம் கருத்துள்ளதையும் காண முடிந்தது. லக்னோவிலிருந்து முஸ்லிம் பெண்கள் மத்தியில் பணிபுரியும் தாஹிரா ஹாசன் உ.பி. முஸ்லிம்கள் பெரும்பாலோர் கடும் வறுமையிலும், சுரண்டலிலும் உழல்வதைச் சுட்டிக்காட்டினார். பீடி சுற்றுவது, எம்பிராய்டரி செய்வது ஆகிய தொழில்களில் நாளொன்றுக்கு இருபது ரூபாய் வருமானம் கூட இல்லையெனவும், இவர்களுக்கு பாபர் மசூதி எல்லாம் பிரச்சினை இல்லை எனவும் குறிப்பிட்டார். எனினும், பாபர் மசூதி இருந்த இடத்தை விட்டுக் கொடுத்தால், அது தவறான முன்னுதாரணமாகி விடாதா, தொடர்ந்து காசி, மதுரா இன்னும் பல இடங்களில் இந்துத்துவவாதிகள் இதுபோன்ற பிரச்சினை உருவாக்க மட்டார்களா என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. உண்மைதான், உயிர் வாழும் உரிமையும், சட்டத்தின் ஆட்சி என்பதில் நம்பிக்கையும் இல்லாது போனால், பின் வாழ்வதில் அர்த்தம் என்ன என்றார் தாஹிரா. பொதுவாக முஸ்லிம்களிடம் சமூக ஒற்றுமை, அமைதி ஆகியவற்றில் கருத்தொருமிப்பு இருந்தது.

இன்றளவும் அயோத்தியில் உள்ள நூற்றுக்கணக்கான ராமர் கோயில்களில் வழிபாடு செய்வதற்குரிய பூ முதலிய பொருட்களை முஸ்லிம்களே கொடுத்து வருவதையும் நாங்கள் கண்டோம். தீர்ப்பு நாளன்று அச்சத்தின் காரணமாக அயோத்தி முஸ்லிம்கள் வீட்டை விட்டு வெளியேறி இரண்டு, மூன்று நாட்கள் கழித்துதான் ஊர் திரும்பியுள்ளனர். வக்ப் சொத்தை வாரியமே விரும்பினாலும்கூட மாற்றி அமைக்கவோ, யாருக்கும் கையளிக்கவோ முடியாது என்பதை முஸ்லிம் தலைவர்கள் சிலர் சுட்டிக்காட்டிய போதும், பொதுவான முஸ்லிம் மனநிலை தங்களது சட்டபூர்வமான உரிமையை நிலைநாட்டுவதும், மசூதி இருந்த இடத்தில் மீண்டும் மசூதியையே நிர்மாணிப்பதும் என்கிற அளவிலேயே உள்ளது. தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வருமானால் மசூதிக்கு அருகாமையில் ராமர் கோயில் கட்டுவதற்கு இடம் அளிக்கும் மனநிலை அவர்களிடம் உள்ளதைக் கண்டோம்.

இந்து தரப்பினரின் கருத்து:

இந்து தரப்பினர் என்பது பொதுவான இந்து மக்களைக் குறிப்பதல்ல என்பதை முதலில் குறிப்பிட விரும்புகிறோம். பொதுவான இந்துக்கள் மத்தியில் சமூக ஒற்றுமை, மசூதி, கோயில் இரண்டையும் கட்டிக் கொள்வது என்பதில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால், இதை அரசியலாக்கி முன்னெடுக்க கூடியவர்கள் மிகவும் தீவிரமான கருத்துகள் உள்ளவர்களாக உள்ளது எங்களுக்கு கவலை அளித்தது. டிசம்பர் 6, 1992-ல் மசூதியுடன் கூடவே உடைக்கப்பட்ட ராம் சபுத்ராவில் அனுபவ பாத்தியதை (Possession) உள்ள நிர்மோகி அகராவின் மகந்த் பாஸ்கரதாஸ் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் மட்டுமே கட்டியாக வேண்டுமெனவும், அரசு கையகப்படுத்தியுள்ள 71.3 ஏக்கருக்கு அப்பால் வேண்டுமானால் முஸ்லிம்கள் மசூதியைக் கட்டிக் கொள்ளலாம் எனவும், அதற்கு தாமே நிலம் தருவதாகவும் கூறினார். 400 ஆண்டுக் காலம் தொழுகை நடந்த இடத்தை எந்த அடிப்படையில் அவர்களுக்கு மறுப்பது என நாங்கள் கேட்ட போது 1939 முதல் அங்கு தொழுகையே நடக்கவில்லை என்றார் பாஸ்கரதாஸ். ஆனால், 1949 டிசம்பர் 22 வரை அங்கே தொழுகை நடந்துள்ளதை உ.பி. மாநில அரசு ஏற்று உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், பாஸ்கரதாஸ் அயோத்திக்குள் முஸ்லிம்கள் மசூதி கட்டிக் கொள்ளலாம் என்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில் விசுவ இந்து பரிசத், ராம ஜென்ம பூமி நியாஸ் ஆகியவற்றில் இருந்து வேறுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விசுவ இந்து பரிசத், ராம ஜென்ம பூமி நியாஸ் ஆகியன நிர்மோகி அகாரவிற்கு மூன்றில் ஒரு பங்கு நிலம் கொடுக்க ஆணையிடப்படுள்ளது தவறு எனச் சொல்கிறார்களே என நாங்கள் கேட்ட போது, “மொத்த நிலமும் எங்களுக்குச் சொந்தம், வி.இ.ப. உள்ளிட்டவர்களுக்கு இதில் எந்தவித சட்ட உரிமையும் கிடையாது. இந்துக்களின் பெயரால் அரசியல் செய்யும் உரிமையை இவர்களுக்கு யார் அளித்தது. விசுவ இந்துப் பரிசத் முதலியன வெளியில் இருந்து வந்து இங்குப் பிரச்சினை செய்கிறார்கள். அவர்கள் மட்டும் தலையிடாவிட்டால், எப்போதோ பிரச்சினை தீர்ந்திருக்கும். தீர்ப்பைப் பொறுத்தவரையில் நிலத்தை மூன்றாக பிரித்தது தவறு, எல்லாவற்றையும் எங்களுக்கே தந்திருக்க வேண்டும்” என்றார்.

நிர்மோகி அகாராவின் மகந்த் பாஸ்கரதாசுடன் நாங்கள்…


பைசாபத்திலுள்ள நிர்மோகி அகோரா தலைமையகம்…


திகம்பர அகாராவில் மகந்த் சுரேஷ் தாஸ் ஊரில் இல்லை எனவும் வேறு யாருடனும் நாங்கள் பேச இயலாது என்றும் கூறிவிட்டனர். வி.இ.ப. காரியாலயத்தின் பொறுப்பாளர் மகேந்திர உபாத்யாயா யார் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. உச்சநீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தாலும் கவலை இல்லை. மிகப் பெரிய ராமர் கோயிலை மட்டுமே அங்கே கட்ட வேண்டும். வேறு எதையும் கட்ட அனுமதிக்க மட்டோம் என்றார்.



ராமஜென்ம பூமி நியாஸ் காரியாலய பொறுப்பாளர் மகேந்திர உபாத்யாயாவுடன் நாங்கள்…பின்னணியில் ராமர் கோயில் கட்டுமாணங்கள்…


ராமர் கோயில் கட்டுவதற்கான கட்டுமாணங்கள்…

ராம ஜென்ம பூமி நியாசின் முக்கிய பொறுப்பாளரான ராம் விலாஸ் வேதாந்தி வாரணாசியில் இருந்ததினால் அவருடன் தொலைபேசியில் மட்டுமே உரையாட முடிந்தது. ராம் விலாஸ் வேதாந்தி கூறியதிலிருந்து: “அயோத்தியில் மட்டுமல்ல, இந்தியாவில் பாபரின் பெயரால் எந்த மசூதியும் கட்டவிட மட்டோம். அயோத்திக்குள் மசூதி கட்ட வேண்டுமானால், அயோத்தியின் கலாச்சார எல்லையைத் தாண்டித்தான் இருக்க வேண்டும். அதாவது 12 யோஜனை நீளம், 3 யோஜனை அகலத்திற்குள் எந்த மசூதி கட்டவும் அனுமதிக்கமாட்டோம்.(1 யோஜனை = 9 கி.மீ.). வேண்டுமானால், அவர்கள் மீர்பாகியின் கல்லறைக்குப் பக்கத்தில் மசூதியைக் கட்டிக் கொள்ளட்டும். (கல்லறை அயோத்தியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சாஹின்வா கிராமத்தில் உள்ளது). அதுவும் கூட பாபரின் பெயரல் இருக்கக் கூடாது. மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்தது உண்மையென்றால், தாங்கள் விட்டுக் கொடுத்துவிடுவதாக முஸ்லிம்கள் எழுதிக் கொடுத்துள்ளனர். இப்போது நீதிமன்றம் கோயில் இருந்ததை உறுதி செய்துள்ளது. அவர்கள் விட்டுவிட்டுப் போக வேண்டியதுதான்.”



நிர்மோகி அகாரா உங்களுக்கு இதில் உரிமை இல்லை எனக் கூறுகிறதே என நாங்கள் கேட்ட போது, 1 கோடியே 81 லட்சத்து 66 ஆயிரத்து 65 ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் பிறந்தார். இந்த நிர்மோகி அகாரா 400 ஆண்டுகளுக்கு முன் உருவானது. இவர்கள் யார் ராம ஜென்ம பூமிக்கு உரிமைக் கொண்டாடுவது என்று ஆவேசமாகப் பதிலளித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பின்படி ராம ஜென்ம பூமி எனச் சொல்லப்படுகிற இடம் ராம் ல்ல்லாவிற்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தாலும் நீங்கள் அங்கு கோயில் கட்ட முடியாதே எனக் கேட்டதற்கு, “நிர்மோகி அகாரா, அஷிம் அன்சாரி இருவருக்கும் ஜென்ம பூமிக்கு வெளியே தான் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் கூட எந்த இடம் எனத் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ராம் லல்லாவிற்கு மட்டும் தான் தெளிவாக வரையறுக்கப்பட்டு 130 x 90 அடி கொடுக்கப்பட்டுள்ளது. திருலோகி நாத் தான் ராம் லல்லாவிற்காக வழக்குத் தொடுத்தவர். அவர் இப்போது உயிரோடு இல்லை. ராம் லல்லாவின் கார்டியனாக இப்போது நியமிக்கப்பட்டுள்ள தேவகி நந்தன் அகர்வால் எங்களுக்காக வழக்காடுகிறார். நியாசும், பரிசத்தும் இதில் ஒரு வாதியாக இல்லையாயினும் திருலோகி நாத்திற்கோ அல்லது தேவகி நந்தனுக்கோ கொடுப்பது எங்களுக்குக் கொடுப்பதுதான். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார்.

ஒரு வேளை உச்சநீதிமன்றத் தீர்ப்பு நம்பிக்கை அடிப்படையில் இல்லாமல் சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என நாங்கள் கேட்ட போது, “உச்சநீதிமன்றத்திற்கு வேறு எந்தத் தேர்வுமே கிடையாது. எங்களுக்குத்தான் கொடுத்தாக வேண்டும். ஒரு வேளை தீர்ப்பு எதிராகப் போனால், இந்த நாடு வகுப்பு வன்முறையால் அழிவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த நாட்டில் சமூக ஒற்றுமை நிலவ வேண்டும் என உச்சநீதிமன்றம் விரும்புமானால், இந்துக்களுக்கு சார்பாகவே அது தீர்ப்பளிக்க வேண்டும். மொத்த நிலத்தையும் இந்துக்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்” எனக் கூறி முடித்துக் கொண்டார்.


ராமரை வழிபட பூசைப் பொருட்கள் விற்கப்படும் கடைகள்…



சர்ச்சைக்குரிய இடத்தில் ராமரை வழிபட செல்லும் பஜனை கோஷ்டி…

இதர தரப்பினர் கருத்து:



அரசியல் கட்சி ஒன்றின் ஊழியரான அருண் குமார் பேசும்போது அயோதிக்குள்ளேயே மசூதியை அனுமதிக்க இயலாது எனப் பேசுபவர்களுக்கு எதிராக மக்களைத் திரட்ட அரசியல் கட்சிகள் முன்வர வேண்டுமென்றார். உள்ளூர் பத்திரிகையாளர் சிலரிடம் பேசிய போது, மசூதியை அரசு கையகப்படுத்தி உள்ள 71.3 ஏக்கருக்கு அப்பால் மசூதி கட்டிக் கொள்ள அஷிம் அன்சாரி பாஸ்கரதாசிடம் ஒத்துக் கொண்டுள்ளார் எனவும், அப்படி செய்வதுதான் சரியென்றும் கூறினர். ஆனால், இது அடிப்படை நீதியை மறுப்பதாகாதா, தொடர்ந்து இதேபோல் பிரச்சினைகள் பிற இடங்களில் எழுந்தால் என்ன செய்வது. 71.3 ஏக்கர் நிலத்திற்கு அப்பாலும் கூட மசூதி கட்ட கூடாது என பரிசத்தும், நியாசும் கூறுகிறதே என்று கேட்ட போது, அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தனர்.

உள்ளூர் பத்திரிகையாளர்களான கே.கே.பாண்டே, பன்பீர் சிங் ஆகியோருடன் நாங்கள்…

பேராசிரியர் ஏ.கே.மிஸ்ரா…

எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்த வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ஏ.கே.மிஸ்ரா, மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்தது என ஆணித்தரமாக கூறினார். எனினும், அகழ்வாய்வுகளின் அடிப்படை நியதிகள் மீறப்பட்டுள்ளதாக சூரஜ்பன், டி.என்.ஜா முதலிய வரலாற்று அறிஞர்கள் கூறியது பற்றிக் கேட்டபோது அவர் சற்றுக் கோபமானார். “அகழ்வாய்வுத் துறையே முன்னின்று இதைச் செய்திருந்தால் நியதிகள் பின்பற்றப்பட்டிருக்கும். நீதிமன்ற உத்தரவுப்படி நாங்கள் செய்யும் போது நியதிகள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை” என்றார். தோண்டிய இடத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக சுண்ணாம்பால் கட்டப்பட்ட கட்டுமானங்கள், மிருக எலும்புகள் ஆகியன கிடைத்துள்ளதை நீங்கள் ஏன் கணக்கில் கொள்ளவில்லை என்றும், இந்த தரவுகளை நீங்கள் ஏன் பாதுகாத்து வைக்கவில்லை எனவும் நாங்கள் கேட்ட போது, “எலும்புகளைக் பாதுகாத்து வைக்க சில முறைகள் உண்டு. ஆனால், இந்த துலுக்கப் பசங்க (Muslim Fellows) எலும்புகளை அப்படி வைக்கக் கூடாது, வெறும் பாலித்தின் உறையில் வைத்தால் போதும் என முட்டாள்தனமாக சொன்னார்கள். அதனால், அவைகள் எல்லாம் பொடித்து அழிந்துவிட்டன” என அலட்சியமாகக் கூறினார். இப்படியான மனநிலையுடன் கூடிய வரலாற்று அறிஞர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் எப்படி இருக்கும் என்பதையும், இந்த ஆய்வை நீதிமன்றம் முழுமையாக சார்ந்திருந்தது என்பதையும் நினைத்த போது எங்களுக்கு கவலையாக இருந்தது.

எமது பார்வைகளும், முடிவுகளும்:


சுமூகமான தீர்வும், சூழலும் ஏற்படும் சாத்தியம் மிகக் குறைவாகவே உள்ளது. பொதுமக்கள் மத்தியில் இத்தகைய கருத்து இருந்த போதும், விசுவ இந்துப் பரிசத்தும், ராம் ஜென்ம பூமி நியாசும் இதற்கு முற்றிலும் எதிராகவே உள்ளன. தீர்ப்பு எங்களுக்கு சாதமாக வராவிட்டால் இந்த நாட்டையே மத வன்முறையால் அழித்துவிடுவோம் என வேதாந்தி போன்றவர்கள் பகிரங்கமாக உச்சநீதிமன்றத்தை மிரட்டுவது இந்த நாட்டின் எதிர்காலத்தையும், ஜனநாயகத்தையும், அரசியல் சட்ட ஆளுகையையும் மிகப் பெரிய கேள்விக்குள்ளாக்குகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிராக வந்தால் ஏற்க முடியாது, இந்த நாட்டையே அழிப்போம் என ஒரு சாரார் கூறும் போது, நீதிமன்றத்திடம் பொறுப்பை கைக்கழுவி விட்டு ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் நினைக்கும் போது வேதனை மட்டுமல்ல, கோபமும் ஏற்படுகிறது. லக்னோ, பைசாபாத், அயோத்தி உள்ளிட்ட அவாத் பகுதி முழுமையிலும் கடும் ஏழ்மையும், உழைப்புச் சுரண்டலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இந்துக்கள், முஸ்லிம்கள் இரு தரப்பிலும் எளிய மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரம் பீடி சுற்றினால் வெறும் 10 ரூபாய் மட்டுமே கூலி. எல்லா நகரங்களிலும் சைக்கிள் ரிக்க்ஷாக்களே அதிகமாக உள்ளன. சென்னையில் ஒரு ஆட்டோ 50 ரூபாய் கூலி கேட்கும் தொலைவை லக்னோவிலும், பைசாபாத்திலும் வெறும் 15 ரூபாய் கொடுத்து ஒரு சைக்கிள் ரிக்க்ஷாவில் கடக்க முடியும். இத்தகைய கடும் சுரண்டல் மத அடிப்படையிலான கருத்தியல்களால் மூடி மறைக்கப்படுகிறது. நாங்கள் சந்தித்த இடதுசாரித் தோழர் ஒருவர் பெரியார் ஈ.வே.ரா. என்றொருவர் வடநாட்டில் பிறக்காமல் போனதின் விளைவு இது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமூக ஒற்றுமையையும் அதே சமயத்தில் சட்டத்தின் அடிப்படையிலான நீதியையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, கீழ்க்கண்ட வழிமுறைகளே உடனடித் தேவை என நாங்கள் கருதுகிறோம்.

1) நீதிமன்றத் தீர்ப்பு தமக்கு எதிராக வந்தால் இந்த நாட்டையே மத வன்முறையால் அழித்துவிடுவோம் என வெளிப்படையாகப் பேசுகிற சக்திகள் யாராக இருந்தாலும் அவர்களைத் தனிமைப்படுத்த ஜனநாயகத்திலும், மதசார்பின்மையிலும் நம்பிக்கை உள்ள அரசியல் கட்சிகளும், அறிவுஜீவிகளும், சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

2) இந்திய அளவில் முக்கியமான அறிவுஜீவிகள், மனித உரிமை ஆர்வலர்கள், வரலாற்று அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் முதலான பேச்சுவார்த்தைக் குழு (Interlocutors) ஒன்றை அரசு உருவாக்கி சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்கை எடுக்க வேண்டும். பேச வர மறுப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

3) சட்டப்படியும், நிலவும் மரபுகளின்படியும் 400 ஆண்டுக் காலமாக தொழுகை நடத்தப்பட்ட மசூதியின் உள் மற்றும் வெளிப் பிரகாரங்கள் உள்ளிட்ட எல்லா நிலத்தையும் முஸ்லிம்களுக்கே அளிப்பதுதான் சரியானது. எனினும், நிலவுகிற சூழல்கள் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது, மசூதி இருந்த இடத்தில் மீண்டும் மசூதியையே நிறுவுவது. ஏற்கனவே ராம் சபுத்ரா உள்ளிட்ட பகுதியில் ராமர் கோயில் ஒன்றை நிறுவுவது, அரசுக் கையகப்படுத்தியுள்ள மிகுதியான இடங்களில் சமூக பன்மைத்துவத்தை ஏற்கும் அருங்காட்சியகம், நூலகம், மருத்துவனை, சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றை உருவாக்குவது என்பதே சரியாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். . இப்படியான ஒரு முடிவு ஏற்கனவே சுன்னி வக்ப் வாரிய தரப்பிலேயே கூறப்பட்டுள்ளது இங்கு நினைவு கூறத்தக்கது.

4) பச்சை ஏமாற்றாலும், வன்முறையாலும் மசூதியை இடித்து வைக்கப்பட்ட ராமர் சிலைகளையும், தற்காலிக கோயிலையும் ஒரு புனிதத் தலமாக இன்று மாற்றப்பட்டுள்ளதும் இதற்கு அரசே துணைபோகியுள்ளதும் வருத்தமளிக்கிறது. மகாத்மா காந்தி போன்ற உண்மையான ராம பக்தர்கள் இன்று இருந்திருந்தால் இந்த நிலையைக் கண்டித்திருப்பார்கள். முன்னாள் மத்திய உள்துறைச் செயலர் மாதவ் கோட்போல் மேற்கூறிய இதே காரணங்களைச் சொல்லி ராம் லல்லாவை வணங்க மறுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. இதை அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்து மதத் தலைவர்கள் தலைவர்கள் கண்டிக்க வேண்டும்.

5) நீதிமன்றத்திடம் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு அரசியல் கட்சிகள் ஒதுங்கிக் கொள்ளாமல், வகுப்பு வெறியர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டுகிற பணியில் அவை ஈடுபட வேண்டுமென குறிப்பாக மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி மற்றும் அடித்தள சமூகங்களைப் பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு இப் பொது வேண்டுகோளை நாங்கள் விடுக்கிறோம்.

தொடர்புக்கு:

People’s Union for Human Rights (PUHR), Tamilnadu.
Federation for People’s Rights (FPR), Puducherry.

Contact: 3/5, First Cross Street, Sasthri Nagar, Adayar, Chennai – 600 020.

Cell: 9444120582, 9894054640.

E-Mail: professormarx@gmail.comThis e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it , ko.sugumaran@gmail.

நன்றி:தமுமுக.காம்