சர்வதேச அளவில் குறிப்பாக மலேசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து ஆய்வு செய்து அதனை இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முனைப்பாக காரியம் ஆற்ற வேண்டும் என்று பிரதமர் மன் மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
“வட்டியில்லா வங்கியான இஸ்லாமிய வங்கியியலை நடை முறைப்படுத்த வேண்டும் என்று பல தரப்பிலும் கோரப்படுகிறது. இந்தக் கோரிக்கையை செயல் படுத்தும் விதமாக, மலேசிய வங்கிகளில் செயல் முறையில் உள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் ரிசர்வ் வங்கிக்குப் பரிந்துரை செய்கிறேன்” என்று பிரதமர் மன்மோகன் சிங் மலேசியத் தலை நகர் கோலாலம்பூரில் கூறினார்.
“மலேசியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து அறிய இந்தியா விரும்புகிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது மேற்கண் டவாறு பிரதமர் பதில் அளித்தார்.
அரசு முறைப் பயணமாக கிழக்காசிய நாடுகளுக்கு சுற் றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர், மலேசியப் பிரதமர் முஹம்மது நஜீப் துன் அப்துல் ரஜாக்குடன்இருதரப்பு பொருளா தாரம் மற்றும் அரசியல் சூழல் குறித்து விரிவாகப் பேசினார்.
வட்டியில்லா வங்கி முறையான இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு பல முனைகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
வட்டியில்லா வங்கிகள் மட்டுமே ஏழைகளை அநியாய வட்டிக் கடன் கொடுமையில் இருந்து மீட்கும் என நிபுணர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வட்டியில்லா வங்கி முறை அல்லாத பாரம்பரிய முறை வங்கியியலை பயன்படுத்தும் மேற்கு நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு பெரும் சிக்கல் கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அமெரிக்காவில் இவ்வாண்டு மட்டுமே 138 வங்கி கள் நொடித்து மூடப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் மூடப்பட்ட வங்கிகளைக் காட்டிலும் இது அதிகமாகும். நடப்பு அக்டோபர் மாதம் 17 வங்கிகள்மூடப்ப்படும்நிலையை அடைந்துள்ளன. கடந்த ஜூன் மாதம் மிகப் பெருமளவில் வங்கிகள் மூடுவிழா கண்டுள்ளன. இது கடந்த 17 ஆண்டு களில் இல்லாத நிலை என கருதப்படுகிறது.
மேலும் 150க்கும் மேற்பட்ட வங்கிகள் ஒரு ஆண்டு அல்லது ஒன்றரை ஆண்டில் மூடப்படும் நிலை ஏற்படக்கூடும் என்று வட்டி யை ஊக்குவிக்கும் வங்கித்துறை அஞ்சி நடுங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி:தாமுமுக.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக