காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரிக்கரையில் வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் மரங்களை பறக்கும் படை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் கரை மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால், பாசன வாய்க்கால், வடிகால் கரை பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் படகை தேக்கு திட்டத்தின் கீழ் தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 2008ம் ஆண்டு துவங்கப்பட்ட இத்திட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுப்பணித் துறை சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள் நிலைமை குறித்து நேற்று வனத்துறை பறக்கும் படையைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட உதவி வன பாதுகாவலர் வெங்கடசாமி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. வீராணம் மேல் கரை பகுதி, செங்கால் ஓடை பகுதி, இ.பி., வாய்க்கால், புடையூர், மணவெளி, கருணாகரநல்லூர், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். சிதம்பரம் வனச்சரக விஜயன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக