அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் வாழும் இந்திய தொழிலாளர்களுக்கு 24 மணி நேர உதவி மையத்தினை இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தொடங்கி வைத்தார். 5 நாள் அரசுமுறைப்பயணமாக ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு சென்றிருந்த இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், இந்திய தொழிலாளர்கள் 24 மணி நேர உதவி மையம் ஓன்றை திறந்து வைத்தார். அங்கு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: இங்குபணியாற்றும் இந்திய தொழிலாளர்களுக்கு இந்த மையத்தினை அர்ப்பணிக்கிறேன். இவர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனே தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய குழு ஒன்று இந்த உதவிமையத்தில் இயங்கி வருகிறது. இந்த குழு தகுந்த நேரத்தில் இந்திய தொழிலாளர்களுக்கு உதவிடும் என்றார். இங்கு 1.75 மில்லியன் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு 24 மணி நேரமும் உதவிட இந்திய வெளிநாட்டு வாழ் விவகாரத்துறை அமைச்சகத்தின் முயற்சியால் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக