ஈராக்கில் மொத்தம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 32 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இதில் பொதுமக்கள் மட்டும் 66 ஆயிரத்து 81 பேரும் 23 ஆயிரத்து 984 பேர் கிளர்ச்சியாளர்கள் , 15 ஆயிரத்து 195 பேர் ஈராக் போர்ப்படையினர் என்ற தகவல் வெளி வந்து பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. அமெ ரிக்க இராக் போர்முனையில் செய்த மனித குலவிரோத அத்து மீறல்கள் அமெரிக்காவின் நிஜ முகத்தை மீண்டும் மீண்டும் தோலுரித்துக்காட்டி வருகிறது.
அமெரிக்காவின் அட்டூழியங்கள் அனைத்தும் ஒளிப்பட கோர்வைகளும் புகைப்பட ஆதாரங்களும் வெளியாகி காண்பவர்கள் ரத்தத்தை சூடேற்றியுள்ளது.
இதில் பல்வேறு புகைப்படங்கள் மிக கொடூரமானதாக இருக்கின்றன. சரண் அடைய வந்தவர்களை சுட்டுக்கொல் வது, சிறையில் அடைத்து துன்புறுத்துவது, கண்ணைக்கட்டி கொடுமைப்படுத்துவது, சிகரெட்டால் கண்ணை சுடுவது, ரத்தக்களறியுடன் கதற விடுவது போன்ற புகைப்படக் காட்சிகள் இதில் உள்ளன.
இந்த ஆவணங்கள் சட்டவிரோ தமாக, தந்திரமாக தயார் செய்யப்பட்டது என அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரம் மழுப்பியுள்ளது.. இந்தப் போர் ஆவணம் லீக் ஆன விஷயம் அமெரிக்கப் போர் வரலாற்றிலேயே இதுவரை நடக்காதது என முன்னாள் போர்ப்படை தளபதி கள் அதிர்ந்து போய் கருத்து வெளி யிட்டனர்.
கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கி 9 ஆண்டுகளாக அமெரிக்கா ஈராக்கில் இருந்த போது கைதிகளை சித்ரவதை செய்தது, சிறைக்கொடுமைகள் ஆகியவற்றினை விக்கிலீக் இணையதள பத்திரிகை ஆதார த்துடன் வெளியிட்டுள்ளதால் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கலக்கமடைந்துள்ளது. அமெரிக்க வெளி யுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் விக்கிலீக்கின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் கொடூரங்களில் கொடூர மான தாக்குதல்களை அமெரிக்க அட்டூ ழிய ராணுவம் நடத்தியதாக ஆவணங் கள் தெரிவிக்கின்றன என்று விக்கிலீக் ஸின் நிறுவனர் ஜூலியா அஸன்ஜா தெரிவிக்கிறார்.
ஈராக்கில் போர்க் குற்றம் நடைபெற்றுள் ளது என்பதற்கான தெளிவான ஆதாரம் இது என லண்டனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார்.
அமெரிக்க ராணுவத்தின் செக்போஸ்டு களில் சிக்கிய 700க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளான பெண்களையும், குழந்தை களையும் உள்ளடக்கிய அப்பாவி மக்களை இரக்கமின்றி அநியாயமாக அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது என்ற நெஞ்சை உறையவைக்கும் வீடியோ ஆதாரங்கள் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் முக்கியமானவையாகும்.
ஈராக்குடன் தொடர்புடைய அமெரிக்க தலைமையிலான ராணுவத்தின் ரகசிய ஆவணங்களிலுள்ள குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை என பிரிட்டனின் துணைப் பிரதமர் நிக் க்ளக் தெரிவித்துள்ளார்.
ஆவணங்களில் கூறப்படும் விஷயங்களில் தொடர்புடையவர்களின் பதிலுக்காக மக்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்த நிக் க்ளக், 2003 ஆம் ஆண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பில் பங்கெடுப்பதற்கு அன்றைய பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேயரின் தீர்மானம் சட்டவி ரோதமானது எனத்தெரிவித்துள்ளார்.
ஈராக் போர் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியா அஸன்ஜா அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக, எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
எனவே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், மாறு வேடத்தில் ஊர் ஊராகச் சுற்றி வருகிறார். பெர்லின், லண்டன் என அடிக்கடி நாடு மாறும் இவர், வெவ்வேறு பெயர்களில் விடுதிகளில் தங்குகிறார். தனது இருப்பிடம் தெரிந்துவிடும் என்பதற்காக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாமல் நண்பர்களிடம் கடனு தவிப் பெற்று பணமாக மட்டுமே செல வழிக்கிறார்.
இவர் ஸ்வீடன் நாட்டில் தங்கியிருந்த போது இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டி அமெரிக்க ஆதரவு சக்திகள் புனைந்த வழக்கை மீண்டும் மறு விசாரணை செய்ய அந் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த விக்கி லீக் நிறுவனர் “இது அமெரிக்க வல்லாதிக்க அரசின் திசை திருப்பும் முயற்சி” என்றார்.
-சப்ரன்ஹபீப்
நன்றி:தமுமுக.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக