
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
31 ஜூலை, 2011
பெண் உருவில் காய் காய்க்கும் அதிசய மரம்!

Nareepol என்றழைக்கப்படும் இந்த வினோத மரம் தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரத்திலிருந்து 500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Petchaboon province என்ற இடத்தில் உள்ளது. இந்த மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள் வளருகின்றன. அதனால் தான் இந்த மரம் Nareepol எனப்படுகிறது. Naree என்றால் மலாய் மொழியில் பெண் என்றும் Pol என்றால் மரம் என்றும் பொருள் தருகிறது. இருப்பினும் இது ஒரு கிரப்பிக் வேலை என சிலர் கூறிவருவதும் குறிப்படத்தக்கது.
30 ஜூலை, 2011
தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி தரம் இல்லாதது : ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி தரமற்றது. அதில் முஸ்லிம்கள் நிர்வகிக்கும் ஒரியண்டல் பள்ளிகளில் உள்ள உருது மொழி படிக்க வாய்ப்பு இல்லாமல் செய்தது. இதை, தமிழக அரசு ஒராண்டு நிறுத்தி வைக்கும் முடிவு வரவேற்க தக்கதாகும்.
29 ஜூலை, 2011
லிபியாவில் கிளர்ச்சியாளர் படை கமாண்டர் சுட்டுக்கொலை
பெங்காசி, ஜூலை. 29-

இந்த நிலையில் நேற்று அவர் பெங்காசி நகருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். எனவே அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
ரமழானை வரவேற்போம்
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.
கொள்ளுமேட்டில் இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை சார்பில் ரமலான் வசந்தம்
சென்ற புதன்(27/07/2011) இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை மார்க்க சொற்பொழிவு நடைப்பெற்றது.F.ரிபாய் தலைமையில் ,சிறப்பு அழைப்பாளராக கோவை.செய்யது வருகை தந்தார்.ரமளானில் எதிர்பார்ப்பது என்ன என்ற தலைப்பில் கோவை.செய்யதும்,மனிதனை புனிதமாக்கும் ரமலான் என்ற தலைப்பில் மொவ்லவி.சைபுத்தின் ஹஜ்ரத் அவர்களும் மேலும் மொவ்லவி.இஸ்மாயில் ,ஜாமியா மஸ்ஜித் இமாம் இம்தாதுல்லாஹ் ,மதினா ஜாமியா பள்ளி இமாம்.முகமத் ஆதம்,அவர்களும் மிகவும் சிறப்பாகவும் .வரும் ரமலானை வரவேற்ப்பு விதமாகவும் பயன்னுள்ள சொற்பொழிவு என்று பொதுமக்கள் அனைவரும் பாரட்டுதக்க விதமாக அமைந்தது என்று அனைவரும் கூறினர்.பெண்களும் ,அண்களும் பெரும்திரளாக கலந்துக்கொண்டனர் ..எல்லாப்புகழும் வல்ல இறைவனுக்கே''
27 ஜூலை, 2011
பிச்சாவரம் சுற்றுலா மையம்: அமைச்சர் ஆய்வு
சிதம்பரம், ஜூலை 26: சிதம்பரம் அருகே சுரபுண்ணைக் காடுகள் அடங்கிய பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா மையத்தை மேம்படுத்துவது குறித்து தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
26 ஜூலை, 2011
இந்தியாவில் முதன் முறையாக ‘டாடாவின்’ அடுத்த அதிரடி – வெறும் 32,000 ரூபாகளில் தரமான வீடு – முன்கூட்டி புனையப்பட்ட (Pre-Fabricated) வீடுகள் !!!
புது டில்லி ஜூலை 20 – பல்வேறு துறைகளில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் ‘டாட்டா’ நிறுவனமானது, தங்களது அலட்டலில்லாத பயங்கர அதிரடிகளுக்கு பெயர் போனது யாவரும் அறிந்ததே.
முன்னதாக, உலகின் அதி விலை குறைவான நானோ காரை மிக குறைந்த விலையில் அதிரடியாக வெளியிட்ட ‘டாட்டா’ நிறுவனம், இப்போது தொட்டிருப்பது உலகின் மிக குறைவான விலையில் தரமான வீடுகளை கட்டி தரும் திட்டமாகும்.
முன்னதாக, உலகின் அதி விலை குறைவான நானோ காரை மிக குறைந்த விலையில் அதிரடியாக வெளியிட்ட ‘டாட்டா’ நிறுவனம், இப்போது தொட்டிருப்பது உலகின் மிக குறைவான விலையில் தரமான வீடுகளை கட்டி தரும் திட்டமாகும்.
‘சமச்சீர் கல்வி’ விடயத்தில் ‘உயர்நீதிமன்ற’ தீர்ப்புக்கு தடை விதிக்க ”உச்சநீதிமன்றம்’ மறுத்து – சமச்சீர் கல்வி புத்தகங்ககளை ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் விநியோகிக்கமாறு தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு!!!
டெல்லி ஜூலை 21 - சமச்சீர் கல்வி விடயத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த ‘தமிழக அரசுக்கு’ சவுக்கடியாக உச்சநீதிமன்ற, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க இயலாது என்று கூறி தீர்பளித்துள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று வரும் 2-ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை தமிழக அரசு வினியோகிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுரங்க ஊழல், நண்பனின் மனைவியை கரிபழிக்கும் அமைச்சர், சட்டமன்றத்தில் ஆதரவில்லாமல் ஆட்சி, ஜனநாயகத்தை கேலிசெய்து படுகொலை – இவற்றின் மொத்த உருவம் பாஜக வின் எடியூரப்பா!!
பெங்களூர், ஜூலை.25: கர்நாடகாவில் இன்று நடக்கும் ஜனநாயக படுகொலை, லட்சம் கோடி ரூபாய்கள் பெருமான சுரங்க ஊழல், கற்பழிப்பு பேர்வழிகளை அமைச்சராக்கி வைத்தது போன்ற கிரிமினல் குற்றங்களின் தலைவனாக செல்யல்பட்டு ‘முதலமைச்சர்’ பதவிக்கு இழுக்கு தேடி தருபவர் பாஜக வின் எடியூரப்பா.
25 ஜூலை, 2011
கோரிக்கைகளை நிறைவேற்றாத தி.மு.க., ஆட்சி: திருமாவளவன்
24 ஜூலை, 2011
தேவ்பந்த் பல்கலை. துணைவேந்தர் நீக்கம்
துணைவேந்தராக பொறுப்பு வகித்த குலாம் முகமத் வஸ்தான்வி
தேவ்பந்த் உத்தரப் பிரதேசத்தில் உள்ள தரூல் உலூம் மெüலானா தேவ்பந்த் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பில் இருந்து குலாம் முகமத் வஸ்தான்வி நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக 60 வயதான முஃப்தி அப்துல் காசிம் நுமானி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற உயர்நிலைக் கமிட்டி கூட்டத்தில் வாக்கெடுப்பு .நடத்தப்பட்டது. இதில் வஸ்தான்விக்கு எதிராக 9 ஓட்டுகளும், ஆதரவாக 4-ம் கிடைத்தன. குஜராத் மாநிலத்தில் முதல்வர் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் முஸ்லிம் மாணவர்களும் பயனடைந்துள்ளதாக கடந்த ஜனவரி மாதம் வஸ்தான்வி கருத்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையின் விளைவாக அவர் அப்பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் கூறி வந்தது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில் அவர் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
23 ஜூலை, 2011
நகர வாழ்க்கை, மூளையை பாதிக்கிறது: ஆய்வில் தகவல்

கொள்ளுமேடு மத்ரஸா அன்வாருல் ஹீதா பட்டமளிப்புவிழா
கொள்ளுமேடு ஜாமியா பள்ளி வழக்கத்தின் மதராஸ் அன்வாருல் ஹுதா பட்டமளிப்பு விழா மிகவும் சிறப்புடன் நடைப்பெற்றது.லால்பேட்டை மதராஸ் தலைமை பேராசிரியர் மொவ்லவி நுருல் அமின் ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கி முபல்லிஹா ஸனதை வழங்கினார்கள். விழாவில் ஜமாத்தார்கள், உலமாக்கள் ,பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பறக்கும் காருக்கு அமெரிக்க அரசு அனுமதி

முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை பரப்பும் சுப்ரமணியம் சுவாமிக்கு ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பா?
23 Jul 2011

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என அமெரிக்காவில் எஃப்.பி.ஐ கைதுச்செய்த நபருடன் சுப்ரமணியம் சுவாமி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டது விவாதத்தை கிளப்பியுள்ளது.
22 ஜூலை, 2011
மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.
காய்கறிகள் தரும் அழகு

நீங்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கிற காய்கள் தான் எல்லாம். விதம் விதமாய் அவற்றை சமைத்து சாப்பிடுகிற நீங்கள், அவற்றில் ஒளிந்திருக்கும் அழகுத் தன்மையையும் தெரிந்து கொள்ளுங்கள்.சமையலுக்குப் போக தினம் ஒரு பகுதியை அழகுக்கும் ஒதுக்குவீர்கள்.
கரட்: விட்டமின் ஏ அதிகமுள்ள காய் இது சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது. கரட்டை பால்விட்டு விழுதாக அரைத்து, முகத்துக்கு பேக் மாதிரிப் போட்டுக் கழுவினால், நிறம் கூடும். கரட் சாற்றுடன், தேன் கலந்து முகத்தில் போட்டாலும் நிறம் கூடும்.
20 ஜூலை, 2011
போர் முடிந்தும் தமிழர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவில்லை: ஹிலாரியிடம் ஜெயலலிதா!

சென்னை வந்துள்ள ஹில்லாரி கிளிண்டன் இன்று மாலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். சென்னை கோட்டையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
ஓநாய் பெண்மணியின் புகைப்படம் வெளியானது

வெள்ளை நிற மயில்கள் Albino Peacock
வாசகர்களே நீங்கள் மயில்களை பார்த்து இருக்கக் கூடும்.ஆனால் வெண்ணிற மயில்களை பார்த்து இருக்கின்றீர்களா?
வெண்ணிற மயிலை ஆங்கிலத்தில் Albino Peacock என்பார்கள்.

வெண்ணிற மயிலை ஆங்கிலத்தில் Albino Peacock என்பார்கள்.
‘டாடாவின் அடுத்த அதிரடி’ – இந்திய சந்தையை கலக்க வரும் டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும் இரட்டை எரிபொருள் வாகனங்கள்!!!
மும்பை: இந்தியாவிலேயே முதல் முறையாக டாடா மோட்டார்ஸ், டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும் இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட பேருந்தை தயாரித்த நிலையில் இப்போது சீக்கிரமே அதன் சோதனை ஓட்டத்தை துவங்க இருப்பதாக நிறுவன செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
முன்னதாக எரிவாயு(சிஎன்ஜி) மற்றும் பேட்டரி ஆகிய இரட்டை எரிபொருட்களில் இயங்கும், டாடாவின் ஹைபிரிட் பஸ்கள் மும்பை மற்றும் டெல்லி போக்குவரத்து கழகங்களில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக எரிவாயு(சிஎன்ஜி) மற்றும் பேட்டரி ஆகிய இரட்டை எரிபொருட்களில் இயங்கும், டாடாவின் ஹைபிரிட் பஸ்கள் மும்பை மற்றும் டெல்லி போக்குவரத்து கழகங்களில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடனில் சிக்கி தவிக்கும் உலக வல்லரசான அமெரிக்கா !!

உலகில் வல்லரசு என தம்பட்டம் அடித்து கொண்டு மற்ற நாடுகளை அடிமையாக்கும் எண்ணத்தில் வலம் வந்த அமெரிக்காவில் தற்போது கடன் சுமை அதிக அளவில் பாதிப்பை உண்டாக்க உள்ளது. அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் நிலைமையை உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளன.
கற்பழிப்பாளர்களின் சொர்க்கமாக திகழும் அமெரிக்கவை’ போன்றே ‘இந்தியாவையும்’ மாற்றும் இந்திய தண்டனை சட்டம் 375 ஐ எதிர்த்து வழக்கு தாக்கல்!!!
கோவில் கருவறையில் பெண்களை 'செக்ஸ்' உறவு கொண்டு, தான் கெடுத்த பெண்களின் சம்மதத்தோடு நடந்த 'உடலுறவு என ஆதாரத்திற்கு வீடியோ எடுத்த 'அர்ச்சகர் தேவநாதன்'
19 ஜூலை, 2011
பகவத் கீதை படியுங்கள், இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்- கர்நாடக அமைச்சர் பேச்சு

மரணத்தை நினைவு கூறுவோம்
மரணத்தை நினைவு கூறுவோம் 'ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை'. (அல்குர்ஆன்: 3 : 185) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: '(தவறான) ஆசைகளை தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்'. (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) திர்மிதி 2229) எந்த நேரம் நம்மைத் தாக்கும் என்பது நமக்கே தெரியாத நிச்சயிக்கப்பட்ட ஒரு திரில்லிங்கான விஷயம் மரண நேரம் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன மறைவான விஷயங்களில் சில திரை விலகி தெளிவாகும்
மத்திய பிரதேசத்தில் மனைவியின் ரத்தத்தை உறிஞ்சி 3 ஆண்டுகளாக குடித்த கணவர்

போபால், ஜூலை 18-
மனிதரின் ரத்தத்தை குடித்து உயிர் வாழும் பேய் களை சினிமா படங்களில் பார்த்து அதிர்ந்து இருக்கி றோம். ஆனால் அந்த கொடூரம் நிஜ வாழ்க்கையில் நடந்து இருக்கிறது.
18 ஜூலை, 2011
வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு 27ம் தேதி தண்ணீர் திறக்க முடிவு

17 ஜூலை, 2011
திப்பு சுல்தான் கட்டிய பள்ளிவாசலுக்கு ஆபத்து

எத்தனையோ மன்னர்கள் இந்தியாவை ஆட்சி செய்துவிட்டு மறைந்து போயுள்ளனர். அதில் சிலரே இன்றளவும் நாட்டு மக்களால் நினைக்கப்படுகின்றனர். அந்த வகையில் மாவீரன் திப்பு சுல்தான் போற்றப்படத்தக்கவர் களில் முதன்மையானவர். ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அந்த மாவீரன் மறைந்து 200 ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஓர் வபாத் செய்தி
நமதூர் மதினா பள்ளி அருகில் இருக்கும் ஹாபிஸ் முஹமத் பாருக் அவர்களின் மாமனார் ஹாஜி ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் இன்று மதியம் (17.07.2011) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என. கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என. கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
16 ஜூலை, 2011
கனிவாக நடந்துக் கொள்வோம்
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
- M.T.M.ஹிஷாம் (ஸலபி, மதனி)
“கனிவு” என்ற வார்த்தைக்கு அறபியில் “அர்ரிப்க்” என்று சொல்லப்படும். இவ்வார்த்தையின் பொருளை அறபு மொழி அடிப்படையில் நோக்குகையில் அதன் பொருளானது “உடன்படுதல், ஒரு விடயத்தினை கலவரமின்றி அணுகுதல்” ஆகிய விளக்கங்களைக் கொண்டதாக இருக்கும். இதே கருத்தினை அடிப்படையாகக் கொண்டு, “நிச்சயமாக அல்லாஹூத்தஆலா அனைத்து விடயங்களிலும் கனிவை விரும்பக்கூடியவனாக உள்ளான்” என நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
கேள்வியும் பதிலும்.
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள்; அவர்களை கொலை செய்யுங்கள் என்று சொன்னதின் மூலம் – இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும், இரத்தம் சிந்துவதையும், மூர்க்கத்தனத்தையும் தூண்டுவதாக இல்லையா?
பதில்:
இஸ்லாம் வன்முறையை தூண்டக் கூடிய மார்க்கம் என்னும் கட்டுக் கதையை நிலைநிறுத்த வேண்டி, அருள்மறை குர்ஆனில் ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை தவறுதலாக புரிந்து கொண்டு, இஸ்லாமியர்களுக்கு – இஸ்லாம் அல்லாதவர்களை கொல்லச்சொல்லி வற்புறுத்துவதாக சொல்கிறார்கள்.
14 ஜூலை, 2011
மும்பை தொடர் குண்டுவெடிப்புகள் மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒபேரா ஹவுஸ், சவேரி பஜார் மற்றும் மேற்கு தாதர் உள்ளிட்ட மூன்று இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 21 பேர் பலியாகியுள்ளனர், 141 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற தகவல் வேதனையைத் தருகிறது. இக்கொடூர சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒபேரா ஹவுஸ், சவேரி பஜார் மற்றும் மேற்கு தாதர் உள்ளிட்ட மூன்று இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 21 பேர் பலியாகியுள்ளனர், 141 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற தகவல் வேதனையைத் தருகிறது. இக்கொடூர சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
13 ஜூலை, 2011
ரமலான் மாத நோன்பு கஞ்சிக்கு பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி

10 ஜூலை, 2011
வீராணத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர்
சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதையொட்டி, நான்கு மாத இடைவெளிக்குப் பின், நேற்று முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே, வீராணம் ஏரி உள்ளது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் ஏரியை நம்பி, 70 ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஏரியில் இருந்து சென்னை மக்களின் தாகத்தை தணிக்க குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால், கடந்த சில ஆண்டுகளாகவே கோடையில் கூட வீராணத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தண்ணீர் சேமிக்காமல் திறந்து விடப்பட்டதால், கடந்த பிப்ரவரி மாதமே வீராணம் வற்றியது. அதனால் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்தே சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்வது நிறுத்தப்பட்டது.
மரணத்துக்கு வலை வீசி... மாணவர்களை இழுக்கும் கைபேசி!

"ஷஃபான்" மாத நோன்பு
நாம் தற்போது ரமழான் இற்கு முந்திய மாதமான ஷஃபானில் இருந்து கொண்டிருக்கிறோம் . இம்மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பை அறிந்து அதன் நன்மைகளை அடைவோம். நபி(ஸல்) அவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பு நோற்பார்கள், மேலும் (இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டுவிடுவார்கள். ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை. ஷஃபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றத்தை நான் பார்த்ததில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம் நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. மேலும் உங்களால் இயன்றளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் நமைகளை வழங்குவதை நிறுத்தமாட்டான் என்று கூறுவார்கள்.
08 ஜூலை, 2011
குஜராத் குண்டுவெடிப்பு வழக்கு:விசாரணையை துவக்க அனுமதி

புதுடெல்லி:2008-ஆம் ஆண்டு குஜராத் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையை துவக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதியான முறையில் விசாரணை நடைபெறுவதற்கு வழக்கை குஜராத்திற்கு வெளியே நடத்த வேண்டுமென குற்றஞ்சாட்டப்பட்டோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், சிரியக் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணையை துவக்க அனுமதி அளித்துள்ளது.
சமச்சீர் கல்வியில் உருது, அரபு மொழி பாதுகாக்கப்பட வேண்டும் : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்(தினமலர்)

"உருது, அரபு மொழியை பாதுகாக்கும் வகையில், சமச்சீர் கல்வி அமைய வேண்டும்'' என, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர், ஜவாஹிருல்லா பேசினார்.
06 ஜூலை, 2011
உயிரையே உலுக்கி எடுக்கும் Chicken-a-la-Carte குறும்படம்!
வெறும் ஆறு நிமிடங்கள் மட்டுமே ஓடும் Chicken-a-la-Carte எனும் இந்த குறும்படம் உயிரையே உலுக்கி எடுக்கிறது. 2005ம் ஆண்டு தயாராக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ferdina
nd-dimadura என்பவர்.
nd-dimadura என்பவர்.
ஒரு புறம் உலக மயமாக்கலில் வெளிச்ச
விளக்குகள், மறுபுறம் வறுமையின் கோரப் பிடியில் வாழும் மக்களின் வ
யிற்றுப் பிரச்சினைகள் என நாணயத்தின் சமநிலையற்ற இரண்டு பக்கங்களை சில நிமிடங்களில் காட்டி மனதை நிலை குலைய வைக்கிறார் இயக்குனர்.
விளக்குகள், மறுபுறம் வறுமையின் கோரப் பிடியில் வாழும் மக்களின் வ
யிற்றுப் பிரச்சினைகள் என நாணயத்தின் சமநிலையற்ற இரண்டு பக்கங்களை சில நிமிடங்களில் காட்டி மனதை நிலை குலைய வைக்கிறார் இயக்குனர்.
இந்திய ரயில்வேயில் இ டிக்கெட் (முன் பதிவு)
புதுதில்லி, ஜூலை.5: இந்திய ரயில்வே புதிய இ-டிக்கெட் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சேவையில் முகவர்களுக்கு இடமில்லை. தனிப்பட்ட நபர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
ஐஆர்சிடிசி இ-டிக்கெட் போல் இல்லாமல், இந்திய ரயில்வேயின் புதிய சேவையில் பயண முகவர்களுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் இடமில்லை. தனிப்பட்ட பயனாளிகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐஆர்சிடிசி இ-டிக்கெட் போல் இல்லாமல், இந்திய ரயில்வேயின் புதிய சேவையில் பயண முகவர்களுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் இடமில்லை. தனிப்பட்ட பயனாளிகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
03 ஜூலை, 2011
சிதம்பரத்தில் புதிய போலீஸ் ஸ்டேஷன் : பழைய கட்டடம் இடிக்கும் பணி துவங்கியது
சிதம்பரம் : சிதம்பரத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டுவதற்காக 106 ஆண்டுகள் பழமை வாய்ந்த போலீஸ் ஸ்டேஷன் இடிக்கும் பணி துவங்கியது. சிதம்பரம் மேல வீதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1904ம் ஆண்டு கட்டப்பட்ட கடலூர் மாவட்டத்திலேயே பழமையான கட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வருகிறது. 106 ஆண்டுகள் பழமை வாய்ந்த போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் பல முறை மராமத்து பணிகள் மேற்கொண்ட போதும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலைக்கு மாறியது.
02 ஜூலை, 2011
உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள் .
அஸ்ஸலாமு அலைக்கும் ,
உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள் .
ஆக்கம் : ஹாபீஸ் A . B . முஹம்மது . நிர்வாகி அல் பரகா வங்கி.
உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர் .
அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும் , ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ,
இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும் , ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர் .
உலக மக்கள் தொகையில் 1 . 5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர் .
அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ,
நானூறு மில்லியன் ஆப்ரிகவிலும் , 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர் .
01 ஜூலை, 2011
மமகவின் முயற்சியால் 23 மீனவர்கள் விடுதலை

இராமேஸ்வரத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கடந்தவாரம் கைது செய்தது.
அத்துடன் அவர்களுக்கு சொந்தமான ஐந்து படகுகளையும் பறிமுதல் செய்தது.
இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு கொடுமைகள் அனுபவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும் உடனடியாக
இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு கொடுமைகள் அனுபவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும் உடனடியாக
மூன் டி.வி. பரவும்வகை செய்துதவுவீர்....
பேரன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ். வப.)
வல்ல அல்லாஹ் தங்களுக்கு அனைத்து நலனும் வளனும்
நல்கியருளத் துஆ செய்கிறோம்.
பல்வேறு சமயச் சகோதரர்களும் தமிழ்த் தொலைக் காட்சி
சேனல்களைச் சொந்தமாக நடத்திவரும் சூழலும், அவர்கள்தம்
கருத்துகளை அச் சேனல்களின் வாயிலாக வெளிப்படுத்தும் நிலையும் கண்டு
நமது சமுதாயத்தைச் சார்ந்தவர் நடத்தும் சேனல் ஒன்றுகூட
பெரிய அளவில் உலகம் தழுவிய வகையில் இல்லையே
என்ற குறை வெகுகாலமாகவே தமிழக இஸ்லாமியருக்கு
இருந்து வந்தது.
உலகின் நீளமான கடல் பாலம் திறப்பு!
உலகின் மிக நீளமான கடல் பாலம் சீனாவில் வியாழக் கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது.
சீனாவின் கிழக்குத் துறைமுக நகரான கிங்டாவோவையும் ஹாங்டாவ் தீமையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் தூரம் 26.4 மைல்களாகும்.
சுமார் 7,500 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் அகலம் 110 படி அடிகள். 5000 தூண்கள் மீது இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கிழக்குத் துறைமுக நகரான கிங்டாவோவையும் ஹாங்டாவ் தீமையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் தூரம் 26.4 மைல்களாகும்.
சுமார் 7,500 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் அகலம் 110 படி அடிகள். 5000 தூண்கள் மீது இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
மது அருந்த இளம் மனைவியை விற்ற கணவன்!
காசர்கோடு: மது அருந்த பணமில்லாத குடிகார கணவன் தனது மனைவியை, நண்பன் ஒருவனிடம் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா காசர்கோடு மாவட்ட்த்தில் உள்ள நீலேஷ்வரத்தை அடுத்த கோயித்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத், (வயது 29). ரப்பர் வெட்டி எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்தது. இவருக்கும் அருகே உள்ள சோயாங்கோடு கிராமத்தைச் சேர்ந்த பிரியா (வயது22), என்பவருக்கும் நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
வரலாறு புகட்டும் பாடம்
உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது.
உடலும், உயிறும் – நீதிக்கும், சத்தியத்திற்கும் என்று உறுதியாய் முழங்கிய கூட்டம் அது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தோழர்களின் வாழ்க்கையிலும் படிப்பினைகள் பல பொதிந்து கிடக்கின்றன. அவர்களில் ஒருவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி). மிக சாதரமான மனிதர். ஆனால் இஸ்லாத்தின் பால் உறுதி மிக்கவர். நபிகளாரின் நேசத்திற்கு உரியவர்.
இரண்டு நாள்கள் பத்திரிக்கைகள் புறக்கணிப்பு!!! லால்பேட்டை ஜமாஅத் அதிரடி....
கடந்த இரு தினங்களுக்கு முன்பு லால்பேட்டை காங்கிருப்பு பகுதியில் நடந்து கொண்டிருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது,அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கும் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றும், வேண்டுமென்றே மோட்டார் சைக்கிளின் சப்தத்தை அதிகப்படுத்தி சொற்பொழிவுக்கு இடையுறு ஏற்படுத்தும்
வகையில் ஒழுங்கீனமாக நடந்துள்ளார்.
வகையில் ஒழுங்கீனமாக நடந்துள்ளார்.
ஹஜ், உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும்- தேவ்பந்த்
இது தொடர்பாக சவூதி அரசுக்கு தாருல் உலூம் சமர்பித்துள்ள மனுவில் “ இஸ்லாத்தை மறுக்கும் அஹமதியாக்கள் முஸ்லீம்களை போல் ஹஜ்ஜுக்கு வருவதால் அவர்கள் உண்மையான முஸ்லீம்களை குழப்பி வழி கெடுக்கின்றனர் என்றும் அவர்கள் மக்கா மற்றும் மதீனாவுக்கு வர தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)