
வியட்நாம் பகுதியின் phu எனும் மாவட்டத்தில் அண்மையில் இரண்டு தலைகளுடன் கன்றுக்குட்டி பிறந்துள்ளது. இந்த சம்பவம் ஹங் என்ற விவசாயி யின் பண்ணையில் இடம்பெற்றுள்ளது. இதுபற்றி இவர் வியட்நாம் இணையத்தள செய்திக்கு தெரிவிக்கையில்:- ” உண்மையில் எனது பசு இவ்வாறு இரண்டு தலைகளுடன் கன்று போட்டது வியப்பாக இருக்கிறது. இதற்கு நான்கு கண்கள் இரண்டு காதுகள் இரண்டு வாய்கள் என காணப்படுவதோடு உடலின் ஏனைய பகுதியகள் சாதாரணமாகவே உள்ளது என தெரிவித்தார். இது வரை இந்த பசு 6 சாதாரண குட்டிகளை போட்டுள்ளதோடு தற்போது இரட்டைத்தலை குட்டியை ஏராளமானவர்கள் பார்வையிட்டு வருவதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக