இதயநோய் பாதிப்பு, இப்போது வயது வித்தியாசமின்றி எல்லாருக்கும் ஏற்படுகிறது. பிறந்த பச்சிளம் குழந்தைகள்கூட இதய நோயால் பாதிக்கப்படுவது உண்டு. ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறையும் போது இதய பாதிப்புகள் ஏற்படும். பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் இதய பாதிப்புகளை எளிதில் கண்டறிய புதிய முறை ஒன்று அறிமுகமாக உள்ளது.
ஜப்பானின் க்யோட்டோ பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த புதிய முறை கண்டறியப்பட்டுள்ளது. "பல்ஸ் ஆக்சிமெட்ரி டெஸ்ட்" என்ற இந்த முறையில் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை துல்லியமாக கண்டறிய முடியும்.
இதில் பச்சிளம் குழந்தைகளுக்கு எந்தவிதமான பக்கவிளைவோ பாதிப்போ இருக்காது என்று உத்திரவாதமும் அளிக்கப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகளின் கை மற்றும் பாதத்தில் ஒரு சிறிய ஸ்கின் சென்சார் கருவி பொருத்தப்படும்.
இது ரத்தத்தின் ஆக்சிஜன் அளவை குறைந்த நேரத்தில் விரைவாகவும் துல்லியமாகவும் கணக்கிட்டு சொல்லும். பரிசோதனை முறையில் இந்த கருவியை பயன்படுத்தி பார்த்ததில் ஏராளமான குழந்தைகளுக்கு இதய பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
பொதுவாக பச்சிளம் குழந்தைகளுக்கு இத்தகைய பரிசோதனைகளுக்கு பெரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. காரணம் குழந்தையை இதய நோய் தாக்குமா என்ற அலட்சியம் தான்.
இதனால் இதயநோய் பாதிப்பு இருந்தாலும் அதை தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய கருவி பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
நன்றிTechnology news |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக