#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

13 ஜனவரி, 2013

"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்


www.thedipaar.com

வெடி வைப்பதில் ஜெயலலிதாவை மிஞ்ச யாராலும் முடியாது. ஆனால், 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அவர் வைத்த வெடிக்கு, நாடு முழுவதும் நடுங்குகிறது.

 'அம்மாதான் அடுத்த பிரதமர்’ என்று ஓ.பன்னீர்செல்வம் உட்பட கட்சிக்காரர்கள் ஆசைப்படுகிறார்கள். அதனை ஜெயலலிதாவும் நம்ப ஆரம்பித்து இருப்பதன் வெளிப்பாடுதான் 'நாற்பதும் தனியே’ என்ற அறிவிப்பு. வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதா இப்படிச் சொன்னார் என்ற தகவல் வந்ததும் யாரும் அதனை நம்பவில்லை.

'வெற்றிக் கூட்டணியை அமைக்கும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள். நீங்கள் உங்கள் கடமையைச் சரியாகச் செய்யுங்கள்’ என்பதுதான் தேர்தலுக்கு முந்தைய பொதுக் குழுக்களில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு. ஆனால், இந்தப் பொதுக் குழுவில், 18 மாதங்களுக்குப் பிறகு நடக்கப்போகும் தேர்தலுக்கான தனது வியூகத்தைப் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்திருக்கிறார்.  'அரசியல்வாதி எந்தப் பாதையில் வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், என்ன சிந்தனையோடு நடக்கிறான் என்பது தெரியக் கூடாது’ என்பார்கள். ஜெயலலிதா விஷயத்தில் இது மர்மமாகத்தான் இதுவரை இருந்தது. ஆனால், அந்த இயல்பை முதன்முறையாக மாற்றிக்கொண்டுள்ளார்.

ஜெயலலிதாவினுடைய பேச்சின் பாணியும் பெரிய அளவில் மாறி இருக்கிறது. எங்கே நகைச்சுவை, எங்கே சவால், எங்கே கண்ணீர் என்பது கருணாநிதிக்குத்தான் கைவந்த கலை. அதனை ஜெயலலிதா எப்போதும் பின்பற்ற மாட்டார். 'நான் செய்தேன்’, 'நான் உத்தரவிட்டேன்,’ 'எனது அரசு’, 'தனிமனுஷியாக நான் துணிந்து முடிவு எடுத்தேன்’... இவைதான் ஜெயலலிதாவின் பாணி. முதல்தடவையாக ஜெயலலிதாவின் பேச்சிலும் மாற்றம்.

''பெரும்பாலான பெண்கள் இளம் வயதில் தகப்பனாரைச் சார்ந்திருப்பார்கள். பெரியவர்களான பிறகு, கணவரைச் சார்ந்திருப்பார்கள். வயதான பிறகு, பிள்ளைகளைச் சார்ந்திருப்பார்கள். ஆனால், என்னைப் போன்ற சில பெண்மணிகளும் இருக்கிறார்கள். நான் யாரையும் சார்ந்திருக்கக் கூடிய கொடுப்பினை எனக்கு இல்லை. யாரையும் சார்ந்திருக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு அமையவில்லை. எப்போதுமே நல்லதென்றாலும் கெட்டதென்றாலும் எனக்கு நானேதான் முடிவுகளை எடுத்துக்கொண்டு, வாழ்க்கையில் எது வந்தாலும் நானே தனித்து நின்று சந்தித்துக்கொண்டு, இப்படியே நான் செயல்பட்டுவருகிறேன். இது என்னுடைய தனித் திறமை என்று சொல்ல மாட்டேன். இது விதி. தலையெழுத்து!'' எனப் பேசி இருக்கிறார் ஜெயலலிதா. கொடுப்பினை, விதி, தலையெழுத்து ஆகிய வார்த்தைகள் எல்லாம் ஜெயலலிதாவின் சிந்தனையில் உதிர்க்காத, நினைத்தாலும் சொல்லாத வார்த்தைகள். வயதா, அனுபவமா, வாழ்க்கையா எது அவரை இப்படிச் சொல்ல வைத்தது? மூன்றுமே!

2011 டிசம்பர் மாதக் கடைசியில் நடந்த பொதுக் குழுப் பேச்சுக்கும் 2012 டிசம்பர் கடைசியில் நடந்த பொதுக் குழுப் பேச்சுக்குமே பெரிய வித்தியாசம். அன்று அனைத்தையும் புறந்தள்ளியவராக ஜெயலலிதா காட்சி அளித்தார். இன்று, 'என் தலைவிதி இதுதான்’ என்கிறார். ''நம்மைப் பொறுத்தவரை நம்முடைய எதிர்காலத்தை நாம் தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும், நிர்ணயித் துக்கொள்ள வேண்டும். நாம் பி.ஜே.பி-யையும் சார்ந்திருக்க முடியாது, காங்கிரஸையும் சார்ந்து இருக்க முடியாது. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற நாம் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று மத்தியில் நமது திட்டங்களை நாமே அமல்படுத்தும் நிலையை உருவாக்க வேண்டும்'' என்பது அவரது பேச்சின் சாராம்சம்.

பரம்பரை எதிரியான கருணாநிதியுடன் காங்கிரஸ் அதிகமாக ஒட்டி உறவாடுவதால், அவர்களோடு கூட்டணிவைப்பது சாத்தியம் இல்லை. ஆனால், கருணாநிதியிடம் இருந்து பிரிந்து வந்து, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களில் சிலரே திட்டமிட்டுச் செயல்பட்டுவருகிறார்கள். தன்னை வந்து சந்தித்த மத்திய அமைச்சர்கள் குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம் ஆகியோரிடம் இதை கருணாநிதி சொல்லிக் காட்டம் காட்டி னார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன், மாநில அரசாங்கத்தை விமர்சிப் பது இல்லை என்பதும் கருணாநிதியின் ஆதங்கம். இது ஜெயலலிதாவுக்குச் சாதகமான விஷயம். தன்னுடைய பொதுக் குழுப் பேச்சின் மூலமாக அந்த ஆதரவையும் புறக்கணித்துவிட்டார் ஜெயலலிதா. குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னை எதிர்த்து சங்மாவைக் களம் இறக்கியவர் என்பதை அறிந்தும், ஜெயலலிதாவுடன் நட்பு பாராட்டினார் பிரணாப் முகர்ஜி. ஜெயலலிதா அழைத்த இரு முறையும் தமிழகம் வந்தார். ஒன்றாக மேடைகளில் உட்கார்ந்தார். அந்த நட்பும் இனி குறையவே செய்யும். மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கக் கூடிய கவர்னர் ரோசய்யா, ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்கு இதுவரை முழுமையான ஒத்துழைப்பு வழங்கிவந்தார். இதை இனி மத்திய அரசாங்கம் கேள்வி கேட்கும். அனைத்துக்கும் மேலாக, இதுவரை ஜெயலலிதாவைக் காட்டி கருணாநிதியை மிரட்டிக் கூடுதல் தொகுதிகளை வாங்கிவந்தது காங்கிரஸ் கட்சி. இனி, அவர்கள் கருணாநிதி கொடுத்ததை வாங்கியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். அதாவது, தன்னை அறியாமல் கருணாநிதி அதிகத் தொகுதிகளில் நிற்க ஜெயலலிதாவே காரணம் ஆகிவிட்டார். ஏராள மான விஷயங்களில் மத்திய அரசாங்கம் தமிழ கத்தைப் புறக்கணித்து வருகிறது. மாநில சுயாட்சி பேசினாலும் அதிகாரக் குவியல் உள்ள மத்திய அரசாங்கத்தின் தயவு இல்லாமல் ஆட்சி நடத்துவது கஷ்டம். கடந்த ஒன்றரை ஆண்டு சிரமங்கள், இன்னொரு ஒன்றரை ஆண்டும் தொடருமானால் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்துமே முடங்கிப் போகும். எதிரி நாடு மாதிரி நாம் மத்திய அரசாங்கத்துடன் சண்டையைப் பிரகடனம் செய்துவிட்டு வாழ முடியாது. அப்படி வாழ்வது யதார்த்தம் அல்ல; அபத்தம்!

ஜெயலலிதாவை, பி.ஜே.பி-க்காரர்கள் எப்போதும் நட்பு சக்தியாகவே பார்த்தார்கள். அவரும் அவர்கள் கொள்கைகளை வழிமொழிபவராகவே இருந்தார். அத்வானி, ஜோஷி, சுஷ்மா, மோடி என அனைத்துக் காவிகளும் அவருக்கு உடன்பாடான நிறமே. இவர்கள் அனைவருமே வெவ்வேறு காலகட்டங்களில் போயஸ் கார்டன் வந்துபோனவர்கள்தான். சங்மாவை ஜெயலலிதா முன்மொழிந்ததும் பி.ஜே.பி. ஈகோ பார்க்காமல் வழிமொழிந்தது. அப்படிப்பட்ட தலைமை யையும் இந்த அறிவிப்பின் மூலமாக ஜெயலலிதா பகைத்துக்கொண்டார். நரேந்திர மோடிக்கு பி.ஜே.பி-க்குள் கடுமையான எதிர்ப்பு முதலில் இருந்தது. இப்போது எதிரிகள் அமைதியாகிவிட்டார்கள். மோடிக்கான நாற்காலி வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது.

அப்படிப்பட்டவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், ஜெயலலிதாவின் நிலைமை என்ன? மாற்றி மாற்றி சால்வை பரிமாறிக்கொண்டார்களே? மோடிக்கு எதிராக வாக்குக் கேட்டு பிரசாரப் பயணம் போவாரா ஜெ? அல்லது ஜெயலலிதாவுக்கு எதிராகத்தான் சீரணி அரங்கத்தில் மேடை போட்டு மோடி பேசுவாரா? இப்படி நடப்பதைத் தடுக்காமல் சோ சும்மா இருந்துவிடுவாரா? அது நடக்காது. நடந்தால் அது ஜெயலலிதாவுக்குப் பலவீனமான விஷயம்.

கருணாநிதியுடன் காங்கிரஸ் ஒட்டிக்கொண்டு இருப்பதால், ஜெயலலிதா மீதுதான் இடதுசாரிகளின் பார்வை பாயும். இந்தியக் கம்யூனிஸ்ட்டும் மார்க்சிஸ்ட்டும் மூன்றாவது அணி ஃபார்முலா வைக் கொண்டுவந்து கார்டன் முன்னால் கடை விரிப்பார்கள். தா.பாண்டியன் அமுக்கி வாசிக்க ஆரம்பித்து இருப்பது இதனால்தான். 'நன்றி மறவாத’ இந்தத் தோழர்களுக்கும் சேர்த்து அல்வா கொடுத்துவிட்டது அந்த அறிவிப்பு. ஜெயலலிதா மீதான எதிர்ப்பைத் தனது சிவப்புத் துண்டில் தாங்கிப் பிடிக்கும் தோழர்களையும் அநாதை ஆக்கியதன் மூலமாக நாட்டில் இனி கூடுதலாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்குத் தேதி குறிக்கப்படும் என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியுமா... தெரியாதா?

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே, அடிக்கடி ஒரு கதை சொல்வார். ''மிகப் பெரிய பணக்காரப் பெண் ஒருத்தி, 'எனக்கு பகவத் கீதையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதற்கு விளக்கம் சொல்லி என்னைப் புரியவைப்பவர்களுக்கு என் சொத்தில் பாதியைத் தருகிறேன்’ என்று அறிவித்தாராம். இதைப் பார்த்ததும் அவரது கணவர் பதறிப்போனாராம். 'சொத்தில் பாதி என்றால் எத்தனை கோடி தெரியுமா? இவ்வளவு பணத்தை யாராவது இழப்பார்களா?’ என்று அவர் கேட்டா ராம். 'எனக்குப் புரிந்துவிட்டது என்று சொன்னால் தானே பணம் போகும். எனக்குத்தான் புரியப் போவது இல்லையே? புரிந்துவிட்டது என்று சொல்லப்போவதும் இல்லையே?’ என்றாராம் அந்தப் பெண்.''

ரே சொன்ன பெண், ஜெயலலிதா மாதிரியான ஒருவரோ?!


நன்ரி.தேடிபார்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக