புதுச்சேரியில் கடந்த 15 ஆண்டுகளுக்குமுன்பே விமானநிலையம் அடிக்க நாட்டப்பட்டு கட்டுமானப்பணி மிகவும் மந்தமாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில் புதுச்சேரி விமானநிலைய பணிகளை விரைவாக முடித்து உடனடியாக விமான போக்குவரத்து தொடங்கவேண்டும் என்ற பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் எதிரொளியாக விமான நிலைய கட்டுமானப்பணிகள் வேகமாக செய்யப்பட்டது. விமான நிலையத்தின் விமான போக்குவரத்து சேவை இன்று 17-01-2013 வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு தொடங்கியது. தொடக்க விழாவினை புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ராஜவேலு மற்றும் மத்திய விமான போக்குவரத்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
முதல் விமானம் பெங்களுரில் இருந்து பிற்பகல் 12-20 மணிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பிற்பகல் 1.05 மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் இருந்து 30 விமானிகய் பயணம் செய்தார்கள். முதல் விமானத்தை வரவேற்கும் பொருட்டு தண்ணீர் சல்யூட் அடிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது. புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து முதல் விமானம் 33 பயணிகளுடன் மதியம் 1-30 மணிக்கு புறப்பட்டு சென்றது. புதுச்சேரியில் தரையிறங்கிய பயணிகளை முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக