#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

29 பிப்ரவரி, 2012

ஐ.நா.மனித உரிமை ஆணையத் தீர்மானம்: இலங்கையை இந்தியா எதிர்க்க வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை


மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

இலங்கையில் ஈழ பகுதியில் தமிழர்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்து, பெண்களை கொடூர பாலியியல் பலாத்காரத்திற்கு இலக்காக்கி, மருத்துவமனைகள், தேவாலயங்கள், வீடுகள் என்று அனைத்து பகுதிகளிலும் மிக கொடூரமான போர் குற்றங்களை ராஜபக்ஷே தலைமையிலான சிங்கள பேரினவாத அரசு புரிந்தது.

கொள்ளையரைப் பிடித்த ராஜலட்சுமிக்கு பாராட்டுச் சான்றிதழ்


கொள்ளையரைத் தாக்கிப் பிடித்த ராஜலட்சுமிக்கு சான்றிதழ் வழங்குகிறார் வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திரபாபு.
  கடலூர் மாவட்டம் உடையூரில் கொள்ளையரைத் தாக்கிப் பிடித்த ராஜலட்சுமிக்கு வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேந்திரபாபு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
 இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:


 "உயிரைக் காப்பாற்றவும், மானத்தைக் காக்கவும் ராஜலட்சுமியும் சிவரஞ்சனியும் செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது. இதேபோல ஒவ்வொரு பெண்களும், தங்களுக்கு வரும் ஆபத்தை எதிர்த்துப் போராடி வெற்றிபெற வேண்டும்.

கொள்ளையனை வெட்டி மடக்கிப் பிடித்த பெண்கள்: மற்றொருவர் தப்பியோட்டம்



சிதம்பரம் அருகே பு.உடையூர் கிராமத்தில் கொள்ளையர்கள் புகுந்த வீடு, மளிகை கடை. (உள்படம்) கொள்ளையர்களை தாக்கிய ராஜலட்சுமி.
  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீட்டுக்குள் கொள்ளையடிக்க புகுந்த கொள்ளையனை தாய், இருமகள்கள் சேர்ந்து துணிச்சலுடன் போராடி மண்வெட்டியால் வெட்டிப் பிடித்தனர். மற்றொரு கொள்ளையன் பணம், நகைகளுடன் தப்பியோடினான்.

27 பிப்ரவரி, 2012

நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்




புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக! இந்த உலகில் தோன்றிய, தோன்றவிருக்கிற மனிதர்கள் அனைவரும் மரணத்தை சுவைப்பவர்களே! அந்த மரணத்திற்கு பின் இறைவனின் நீதி விசாரணைக்கு பின் சுவனம் எனும் சுக வாழ்க்கையை அடைய வேண்டுமெனில்,

கடலூர் மாவட்டம் கந்தகுமரத்தில் தமுமுகவின் மார்க்க விளக்க பொது கூட்டம்



கந்தகுமரன் தமுமுகவின் சார்பாக மார்க்க விளக்க பொது கூட்டம் 26.02.2012(ஞயார்றுக்கிழமை) நடைப்பெற்றது .அஸ்ரப் அலி   மன்பஈ,இறைவசனம் ஓதிதுவைக்கி வைக்க கந்தக்குமாரன்கிளைத்தலைவர் முஹம்மது வரவேர்ப்புரையர்றினார் .  கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் N.அமானுல்லாஹ் மற்றும் மா.நிர்வாகிகள் முன்னிலை வகிக்க .தமுமுகவின் மாவட்ட தலைவர் மெஹ்ராஜ்த்தின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 'அல்ஹம்துலில்லாஹ்''

25 பிப்ரவரி, 2012

அதிக உடல் வேதனையை அனுபவிக்கும் குண்டு மனிதர்கள்


அதிக உடல் வேதனையை அனுபவிக்கும் குண்டு மனிதர்கள்


உடல் எடை அதிகரித்து மிகவும் குண்டாக இருப்பவர்கள் பல்வேறு இடையூறுகளையும் வேதனைகளையும் அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உடல் கூறு நிபுணர் ஆர் தர்ஸ் ஸ்டோன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது.

இந்திய தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் டெல்லி கருத்தரங்கில் மமக பொதுச்செயலாளர் பங்கேற்பு!














மாநாட்டில் பொதுச் செயலாளர்


இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி 9,10,11 தேதிகளில் மூன்றுநாள் தேசிய அளவிலான பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.

தற்போது இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் தொகுதி வாரியான தேர்தல் முறைக்கு மாற்றாக ஜெர்மனி, இலங்கை போன்ற நாடுகளில் அமலில் இருக்கும் விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறையை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இம்மாநாடு நடைபெற்றது.
Campaign for Electoral Reforms in India - CERI என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற இம்மாநாட்டில் நாடு முழுவதிலிருந்தும் பல்வேறு பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.

24 பிப்ரவரி, 2012

ஈரானிடமிருந்து விலகுகிறதா இந்தியா?- சவூதியிடம் கூடுதல் கச்சா எண்ணெய் வாங்குகிறது




ஈரானிடமிருந்து விலகுகிறதா இந்தியா?- சவூதியிடம் கூடுதல் கச்சா எண்ணெய் வாங்குகிறது

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தடைவிதித்துள்ள நிலையில் சவூதி அரேபியாவிடமிருந்து கூடுதலாக 5 மில்லியன் டன் கச்சா எண்ணெய் கொடுக்குமாறு இந்தியா கோரியிருக்கிறது.

சிரியாவுக்கு எதிரான நடவடிக்கை: துனிஷியாவில் உலக மாநாடு






சிரியாவுக்கு எதிரான நடவடிக்கை: துனிஷியாவில் உலக மாநாடு

சிரியாவின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிப்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் “உலக மாநாடு” துனிஷியாவில் நடைபெறவுள்ளது.சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் போராட்டம் நடந்து வருகிறது.

23 பிப்ரவரி, 2012

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோரை விடுதலை செய்ய கோரிக்கை!


10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோரை விடுதலை செய்ய கோரிக்கை!

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், அவரது பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை சாதி, மத, வழக்கு வேறுபாடின்றி விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மதுரை பிரசிடெண்ட் ஓட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் குறிப்பிட்டதாவது: